வணங்குகிறேன் ..

“மீண்டெழும் பாண்டியர் வரலாறு ” புத்தகம் தடை செய்யக்கூடாது என்று பலர் கூறுகின்றனர். நானும் ஆமோதிக்கேறேன்.

தடை கூடாதென்று இன்று முழங்குபவர்கள் சில மாதம் முன்பு அம்பேத்கார் — நேரு சம்பந்தப்பட்ட கேலிச்சித்திரம் தொடர்பாக என்ன கூறினார்கள் என்று பார்ப்பது நம் பகுத்தறிவுக்கு நல்லது.

ஹிந்தி எதிர்ப்பைக் கேலி செய்யும் இன்னொரு கேலிச்சித்திரத்தை நடுவணரசுப் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சில அறிவு ஜீவிகள் கூறினார்கள்.

இவர்கள் பின்வருமாறு :

கருணாநிதி , வைகோ, தா.பாண்டியன், வீரமணி, ராஜா ( சி.பி.ஐ-எம் ), திருமாவளவன், விஜயகாந்த்.

இவர்கள் இப்போது தடை கூடாது என்கிறார்கள் என்று அறிகிறேன்.

இப்படி இரண்டு நாக்குடன் பேசுவது பகுத்தறிவின் அடுத்த பரிணாம வளர்ச்சி என்று நாம் எல்லாரும் அறிய எல்லாம் வல்ல பகுத்தறிவை வணங்குகிறேன்.

பேசுவது மானம் இடைப் பேணுவது ..

நாம் தமிழர் இயக்கத் தலைவர், சிங்களவர்களின் பரம எதிரி, தமிழர்களின் காக்கும் கடவுள் ( மன்னிக்கவும் -இயற்கை), மறத்தமிழர் சீமான் இயக்கியுள்ள திரைப்படங்களில் இதுவரை பெங்காலி,பம்பாய், வட இந்திய நாயகிகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். சிகரம் வைத்தாற்போல் தனது “தம்பி” திரைப்படத்தில் பூஜா என்ற சிங்களப் பெண்ணை பயன் படுத்தியுள்ளார். பணம் வரும் என்றால் கொள்கையாவது ஒன்றாவது ? அது தானே பகுத்தறிவு?

கம்பர் கூறுவார் “பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்”. அது இவருக்குப் பொருந்தும்.

%d bloggers like this: