சார் நாங்க மூணு பேர் சார். கொஞ்சம் பார்த்து செய்யுங்க. விலைவாசி உங்களுக்கே தெரியும்.
ஐயா டூட்டிலே ரௌண்டஸ்லெ இருக்காரு. இருங்க. சாயங்காலம் வருவாரு.அப்போ கையெழுத்து வாங்கலாம். இல்லே அவசரம்னா உள்ளே மூணாவது டேபிள் E-3 இருப்பாரு. அவரைப் பாருங்க. மூடிச்சுக் குடுத்துடுவாரு.
சார் சொன்னா புரிஞ்சுக்குங்க. இது E1 கிளார்க் டேபிள்.உங்க பைல் இங்கே தான் இருக்கு. நாளைக்குதான் E2 டேபிள் போகும். பைல் டெஸ்பாடச் அட்டே ண்டர் இன்னிக்கு லீவு. அவரு வந்து தான் டேபிள் நகர்த்தணும்.என்ட்ரி போட்டுட்டு செய்யணும். அதாலே நாளைக்கு வாங்க.
சார் த்ரீ பேஸ் மீட்டர் ஸ்டாக் இல்லே..நீங்களே வாங்கிக் கொண்டாங்க. நாங்க என்ட்ரி போட்டுக் கொடுப்போம். அப்புறம் மீட்டர் டெஸ்டிங் லேப் கொண்டு போங்க. அவங்க டெஸ்ட் பண்ணுவாங்க. பிறகு அதை எங்களுக்கு அனுப்புவாங்க.நாங்க எங்கே வேலை எல்லாம் முடிஞ்சு ரோஸ்டர் படி உங்க வீட்டுக்கு எப்ப வந்து போடணுமோ அப்போ போடறோம். எதுக்கும் A.E. உள்ளே இருக்காரு. ஒரு தடவை “பார்த்துட்டுப்” போங்க.
தம்பி, ஒன் சைடு, லைட் இல்லே, இன்சூரன்ஸ் இல்லே, ஆர்.சி.புக் , பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, பர்த் சர்டிபிகேட் , அம்மை ஊசி அட்டை இப்படி எதுவும் வேணாம். கோர்ட் போனா 5000 ரூபா பைன். ஐயா வந்தா 2000 ரூபா கட்டறியா இல்லே 500 ரூபாயோட முடிச்சுக்கலாமா? எப்படி வசதி?
யோவ், வண்டிய நிப்பாட்டு, மந்திரி போறாரு. ஒரு அரை அவர் ஆவும். ஓரமா நில்லு. இது என்ன உன் அப்பன் ஊட்டு ரோடா?
யோவ், ஊட்லே சொல்லிகினு வன்ட்டியா? சுத்த கஸ்மாலமா கீறே. பனகல் பார்க் எங்கே இருக்கு, உஸ்மான் ரோடு எங்கே இருக்கு.. அம்பது ரூபா தரேன்றியே.. 300 ரூவா கொறஞ்சு வராது. நல்லா வந்து சேர்ந்துகிது பாரு காலங்கார்த்தாலே.. படா ரோதனப்பா …
இப்படி எந்த பேச்சும் கேட்காமல் இரண்டு வருடங்களாக இருந்துவிட்டு திடீரென்று இவற்றில் ஏதாவது ஒன்றைக் கேட்டால் ஒரு மனிதனுக்கு ஏற்படுவது :
அ. மாரடைப்பு
ஆ. சித்தசுவாதீனம் இழப்பு
இ. பக்கவாதம்
ஈ. வாந்தி பேதி
உ. இவை அனைத்தும் ஒருசேர
சரியான விடை அனுப்பும் அதிர்ஷ்டசாலி நேயருக்கு ஒரு வருட முரசொலியும் ஒரு வருட நமது எம்.ஜி.ஆர். உம் அனுப்பிவைக்கப்படும்.