கைலாயம் தோன்றிய மேடையில், திடீரென்று போர்க்களம். சிவனடியார் வீடு தோன்றிய அதே மேடையில் சமண விவாத மேடை. கடைசியாக திருவதிகை வீரட்டானம் தெரிந்தது.
இத்தகனையையும் ஒரே மேடையில் ஒன்றரை மணி நேரத்தில் நடத்திக் காட்டினர் சிங்கப்பூர் திருமுறை மாநாட்டுக் குழுவினரும், இந்து அற நிலைய வாரியத்தினரும்.
திலகவதியார் தமது தம்பி மருள் நீக்கியாரை சூலை நோயிலிருந்து விடுவித்த கதை அரங்கேறியது இன்று.
“கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறையம்மானே”
என்னும் பதிகம் பாட, அத்துடன் திருநாவுக்கரசரானார் மருள் நீக்கியார்.
இந்த மூன்றாமாண்டு நாட்டிய நாடகத்தை இவ்வளவு அருமையாக எழுதி, இயக்கி, இசை அமைத்து நடத்திய திரு.வரதராசன் அவர்களையும் பங்கேற்று ஒத்துழைத்த அனைவரையும் வணங்கி வாழ்த்துவோம்.