‘நான் இராமானுசன்’ – வித்து

1988ல் ஒருமுறை 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் நெய்வேலிக்கு எழுந்தருளியிருந்தார். ஒரு நாள் பிரயாணம். 30 நிமிடங்கள் சொற்பொழிவு ஆற்றினார். ‘நாம் யார்?’ என்பது தலைப்பு. 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நான் முதன் முதலில் புரியும்படி பேசும் ஒருவரது பேச்சைக் கேட்கிறேன்.

‘என்னோட புஸ்தகம்ங்கறோம். அப்ப நாம வேற புஸ்தகம் வேறன்னு ஆறதோல்லியோ? அதோட புஸ்தகம் இந்த உடம்போடதுன்னு ஆறது. என்னோட கைன்னு சொல்றோம். அப்ப இந்த கை இந்த ஒடம்போட சொந்தம்னு ஆறது. இன்னும் மேல போய், என்னோட ஒடம்புன்னு சொன்னா, ஒடம்பு வேற நாம வேறன்னு ஆறதில்லையா? அப்ப அந்த ‘நான்’ அப்பிடிங்கறது ஆத்மா..’ என்று 16 வயது ஆன எனக்குப் புரியும்படியாகச் சொன்னார்.

25 ஆண்டுகள் கழித்து ‘நான் இராமானுசன்’ எழுதுவதற்கான கரு 1988ல் நெய்வேலியில் விதைக்கப்பட்டதை, அந்த ஆதி குருவை, இன்று நன்றியுடன் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

வேதாந்த விசாரங்கள் யாவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். எளிய முறையில் சொல்லித் தரப்பட வேண்டும். இவை பள்ளிகளில் கற்றுத் தரப்பட வேண்டும். அதுவே நல்ல துவக்கமாக அமையும். அதற்கு நல்ல குருமார்கள் அமைய வேண்டும்.

இவை அனைத்திற்கும் இறையருள் வேண்டும்.

நான் இராமானுசன் – ஒரு சிறு அறப்பணி

‘நான் இராமானுசன்’ வெளியீட்டின் மூலம் கிடைத்த ரூ.35,000 இன்று சென்னையில் உள்ள ஓராசிரியர் வேத பாட சாலைக்கு வழங்கப்பட்டது. என் பெற்றோர் என் தம்பியுடன் சென்று வழங்கினர். அங்கு பயிலும் மாணவர்களின் உணவு உறைவிடச் செலவுகளையும் இந்த ஆசிரியரே கவனித்து வருகிறார். ‘வேதோ ரக்ஷதி ரக்ஷித:’ என்பர். வேதத்தை நாம் காப்பாற்றினால் வேதம் நம்மைக் காக்கும் என்பது பாரதப் பண்பாட்டில் இருந்துவரும் நம்பிக்கை.

இந்த நூல் மூலம் இப்படி ஒரு நல்ல செயல் செய்ய உதவிய வாசகர்களுக்கும், இந்நூலை எழுதவைத்த இராமானுச குருவிற்கும் என் பணிவான, தெண்டன் சமர்ப்பித்த வணக்கங்கள்.

சில படங்கள் உங்கள் பார்வைக்கு :

img_0381

veda_adasalai_3

 

veda_adasalai_4

 

 

 

 

'நான் இராமானுசன்' நூல் வெளியீடு சிங்கப்பூர்

குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்த திருமதி. சித்ரா ரமேஷ்

இராமானுச நூற்றந்தாதி பாடி விழாவைத் துவக்கிய குமாரி.வைஷ்ணவி ஹரி.

விழாவின் சிறப்பு விருந்தினர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஹரி கிருஷ்ணன் அவர்கள் துவக்கவுரை ஆற்றி விழாவைத் துவக்கி வைத்த போது…

 

பேராசிரியர்.சுப.திண்ணப்பன் அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் ஒப்பிட்டும், நூலின் சில பகுதிகள் பற்றியும் சிறப்புரை ஆற்றிய போது…

 

முனைவர்.செல்லக்கிருஷ்ணன் அவர்கள் ஆழ்வார்களிலும், பெரும்பூதுர் மாமுனியிலும் தோய்ந்து சிறப்புரை ஆற்றிய போது…

சில எழுத்தாளர்களும் வாசகர்களும் நூல் மதிப்புரை செய்த போது…

எழுத்தாளர் திருமதி.சித்ரா ரமேஷ்

 

எழுத்தாளர் திருமதி. மாதங்கி

வாசகர்.திரு சசி குமார்

 

வாசகர் திரு. சிவானந்தன் நீலகண்டன்

 

வாசகர் திரு.வேங்கட கிருஷ்ணன்

 

வாசகர். திரு மகேஷ்

 

பட்டிமன்றப் பேச்சாளர் திரு.கண்ணன் சேஷாத்ரி.

அடியேன் ஆமருவி நன்றியுரை

 

ஓங்கி உலகளந்த ஜனனி ராஜா

நான் இராமானுசன் – சிங்கையில் வெளியீடு

‘நான் இராமானுசன்’ சிங்கையில் வெளியீடு காண்கிறது. விழா அழைப்பிதழ். அனைவரும் வருக. நூல் விற்பனைத் தொகை, செலவுகள் போக, சென்னையைச் சேர்ந்த ஓராசிரியர் வேத பாடசாலைக்கு வழங்கப்படுகிறது.

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-001

img_0381

'நான் இராமானுசன்'- 'தி ஹிந்து' நூல் மதிப்புரை

‘நான் இராமானுசன்’- ‘தி ஹிந்து’ நூல் மதிப்புரை இங்கே

மணிப்பிரவாளத்தைத் தவிர்த்த நடையில் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை நாவல் வடிவில் முயற்சி செய்திருக்கிறார் ஆசிரியர். அத்துடன் துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வை தம் என்ற மூன்றையும் எல்லோ ருக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். ஸார்வாகம், ஜைனம், பவுத்தம், வேதங்கள், உபநிஷத்துகள், யாகங்கள் பற்றிய விளக்கங் களும் பொருத்தமாகவும் அள வோடும் இருக்கின்றன. வைண வத்தைப் பற்றிச் சொல்ல வேண் டியவனவற்றைத் திட்டமிட்டு, ‘சூடிக்கொடுத்த நாச்சியாரை’ப் போலவே வண்ணமயமாகத் தொடுத்துக் கொடுத்திருக்கிறார். வேற்றுமைகளை விதைக்கும் ‘கலை’ தெரிந்தவர்களைப் பற்றிய வேதனையையும் நூல் எதிரொலிக்கிறது.

வைணவர்கள் அறிந்திருக்க வேண்டிய 3 ரகசியங்கள் (ரஹஸ்யத்ரயம்) 1. திருமந்திரம், 2, துவயம், 3. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற சுலோகத்தின் பொருள். பஞ்ச சம்ஸ் காரம் என்பது சமாஸ்ரயணம், புண்ட்ரம், நாமம், மந்திரம், யோகம் என்ற ஐந்து. வரிசைக்கிரமமாக இவை விளக்கப் பட்டுள்ளன. நமது உடல் நமது உயிரின் (ஆன்மாவின்) வீடு; நமது ஆன்மா பிரும்மமான பரமாத்மாவின் வீடு; எனவே பிரும்மமும் உண்மை, உலகமும் உண்மை; ஜீவாத்மாவும் உண்மை. இதை வைணவம் தத்வத் தரயம் என்கிறது. இதில் மாயை என்பதற்கு இடமில்லை.

வைணவ சித்தாந்தத்தில் சேர எந்த ஒரு அங்கீகாரமும் தேவையில்லை. அந்தணராக இருக்க வேண்டாம். நாளும் மூன்று முறை அனல் ஓம்பும் சடங்கு செய்ய வேண்டாம். ஏழை செல்வந்தன் வேறுபாடு இல்லை. பழைய குல அடையாளங்கள் மறைய வேண்டும். பானை செய்பவரும் வேதம் ஓதுபவரும் சிறுவினைஞர்களும் ஒன்றே என்பதுதான் வைணவம் என்று இந்த நூலில் வெகு அழகாக விளக்கப்பட்டிருக்கிறது. ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டில் வெளியாகியிருக்கும் இந்த நூல் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நித்யானுசந்தானம் என்றால் மிகையில்லை.

நான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்

‘நான் இராமானுசன்’ பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. கடந்த ஒரு மாதமாக இவற்றைத் தொகுத்து இருந்தேன்.  ஒரே பதிவில் விடை அளிக்கிறேன்.

naan raamaanusanகேள்விகள் & விமர்சனங்கள்:

  1. இந்த நூல் அத்வைதத்திற்கு எதிரானதா?
  2. ஆதி சங்கரர் சாதீயத்தைத் தோற்றுவித்தாரா?
  3. அத்வைதத்தின் படி பிராமணர் அல்லாதோர் மோட்சம் பெற முடியாதா? ஆதி சங்கரர் அப்படிச் சொன்னாரா?
  4. தீவிர அத்வைத எதிர்ப்பு / வெறுப்பு தெரிகிறது.
  5. சைவத்தையும் அத்வைதத்தையும் ஒருசேரப் பாக்கிறீர்கள்.
  6. தென்கலை வடகலை – தத்துவம் தவிர வேறு வித்யாசங்கள் என்ன?
  7. வைஷ்ணவ ஜீயர்களில் பிராமணர் அல்லாதவர்கள் இல்லையே. எனவே விசிஷ்தாத்வைதம் வழக்கொழிந்துவிட்டதா?
  8. எத்தனை வைஷணவக் கோவில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்கள்? இராமானுசர் வழி சாதியை ஒழிக்கவில்லை.
  9. வேதந்த தேசிகரின் பார்வையை நீங்கள் சேர்த்திருக்க வேண்டும்.

அனைத்திற்குமான ஒரே பதில் இதோ:

நூலில் ‘என்னுரை’யில் சொன்னது போல இந்த நூல் ஒரு புனைவு. என் கற்பனை. தத்துவம் விசிஷ்தாத்வைதம். ஆனால் அதைச் சுற்றி எழுப்பப்படும் கதை, கதை மாந்தர், நிகழ்வுகள் என் கற்பனையே. சாம்பமூர்த்தி ஸ்ரவுதிகள் என்னும் பாத்திரம் உட்பட.

கேள்விகள் அனைத்திலும் இராமானுசரைப் பற்றியோ, விசிஷ்டாத்வைதம் பற்றியோ தேடல்கள் இல்லை. அத்வைதம் தாழ்ந்து இருக்குமாறு காட்டப்படுகிறதே, ஆதிசங்கரர் பற்றி சொல்கிறீர்களே என்பதாகவே இருக்கிறது. இது ஓரளவு நான் எதிர்பார்த்தது தான். பெரும்பாலான வாசகர்கள் பாரத ஞான மரபு என்பதே அத்வைதம் என்பதாகவும், அந்த தத்துவத்தையோ அதன் ஸ்தாபகரையோ கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதாகவும் எண்ணுகிறார்கள்.

நாம் சவுதி அரேபியா இல்லை. இங்கு வாதங்கள், பிரதிவாதங்கள், தர்க்கம் இவை எல்லாம் நிகழும். பண்பாட்டுப் புரிதல்கள் நிகழ்வது தர்க்கத்தினால் தான். அதையே நான் இந்த நூலிலும் சொல்லியிருக்கிறேன்.

ஜெயமோகன் விஷ்ணுபுரம் நாவலில் ‘ஆழ்வார்’ என்று ஒரு பாத்திரத்தையே வைத்தார். மிக கேலிக்குரியதாக அப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதைத் தாண்டி அந்த நாவல் தமிழ் எழுத்துச் சூழலில் பெரிய சுனாமியை உண்டாக்கியது. ஒரு தொன்மம், ஒரு ஆப்த வாக்கியம் ( காலடியில் எல்லாம் மண்) என்பதை விரித்து விஷ்ணுபுரம் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து சென்று வாசகனின் மனத்தில் பல கேள்விகளையும், பல தத்துவப் புரிதல்களையும், பண்டைய ஞான மரபின் தர்க்க வாதம் பற்றிய பெருவியப்பையும் எற்படுத்தியது.  அந்த அனுபவம் அதைப் படித்தால் மட்டுமே புரிபடும். அங்கு வாதத்தில் பவுத்தம் வெல்வதாகக் காட்டப்படும். எனவே மற்ற தத்துவங்கள் தோற்பதாக முடியும்.

ஒரு தத்துவம் பேசப்படும் போது மற்றது கீழிறங்குவது போல் தோன்றுவது இயல்பு. எனவே அதன் ஸ்தாபகரும் கீழிறங்குவது போல் தோன்றுவதும் இயல்பே. எல்லாத் தத்துவங்களும் ஒரே நிலையில் உயர்ந்தே காட்டப்பட வேண்டும் என்றால் அதில் வாதம் எப்படி எடுபடும்? தற்போதைய ‘செக்யூலரிசம்’ போல் தலையில் குல்லாயும், கழுத்தில் சிலுவையும், நெற்றியில் வெளியில் தெரியாதபடி திருநீறும் அணிந்து பம்மாத்து வேலை செய்யும் செக்யூலர்வாதிகள் போல் அமைந்துவிடும். இது யாரை ஏமாற்றும் வேலை? நான் இந்த நூலில் அப்படி ஏமாற்ற விரும்பவில்லை.

சங்கரர் வழியில்  ‘ஜீவன் முக்தி’ அடைய சில வழிகள் உள்ளன. ஞானம் அடைந்து பின்னர் ஒருமையை உணர்தல் என்று சொல்லலாம். அந்தப் பாதை சிரமமானது. அந்தச் சிரமங்களை உடைத்தெறிகிறது விசிஷ்டாத்வைதம். மோட்சம் அனைவருக்குமானது என்கிறது அது. அதற்கான ஆழ்வார் பாசுரங்கள் எடுத்தாளப்படுகின்றன. ‘பிரபத்தி’ நெறி பேசப்படுகிறது. இவற்றை இந்த நூலில் நான் சொல்கிறேன்.

சங்கரர் பற்றியும் இராமானுசர் பற்றியும் சுவாமி விவேகானந்தர் இப்படிச் சொல்கிறார் :

“Then came the brilliant Râmânuja. Shankara, with his great intellect, I am afraid, had not as great a heart. Ramanuja’s heart was greater. He felt for the downtrodden, he sympathised with them. He took up the ceremonies, the accretions that had gathered, made them pure so far as they could be, and instituted new ceremonies, new methods of worship, for the people who absolutely required them. At the same time he opened the door to the highest; spiritual worship from the Brahmin to the Pariah. That was Ramanuja’s work. That work rolled on, invaded the North, was taken up by some great leaders there; but that was much later, during the Mohammedan rule;”

“You may mark one characteristic since the time of Ramanuja — the opening of the door of spirituality to every one. That has been the watchword of all prophets succeeding Ramanuja, as it had been the watchword of all the prophets before Shankara.”

“He was a good arguer and a scholar, no doubt of that, but he had no great liberality; his heart too seems to have been like that. Besides, he used to take great pride in his Brahmanism — much like a southern Brahmin of the priest class, you may say. How he has defended in his commentary on the Vedanta-Sutras that the non-Brahmin castes will not attain to a supreme knowledge of Brahman! And what specious arguments! Referring to Vidura* he has said that he became a knower of Brahman by reason of his Brahmin body in the previous incarnation. Well, if nowadays any Shudra attains to a knowledge of Brahman, shall we have to side with your Shankara and maintain that because he had been a Brahmin in his previous birth, therefore he has attained to this knowledge? Goodness! What is the use of dragging in Brahminism with so much ado?”

எனவே சாதிகள் விஷயத்தில், ஞானம் அடைந்து ஜீவன் முக்தி பெறும் விஷயத்தில் சங்கரரது வழியைப் பலரைப் போல சுவாமி விவேகானந்தரும் எதிர்க்கிறார். விசிஷ்டாத்வைதம் மோட்சத்திற்கு உயர்குடிப்பிறப்பு தேவை இல்லை, ஞானம் தேவை இல்லை, பக்தி மற்றும் பிரபத்தியே போதும் என்கிறது. இதையே இராமானுசர் சொல்வதாக நூலில் நான் சொல்லியிருந்தேன்.

அத்வைத எதிர்ப்பு? என்ன பார்வை இது? அத்வைதத்தின் மேல் தான் விசிஷ்தாத்வைதம் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு பிரம்ம வாதத்தையே விசிஷ்டாத்வைதமும் முன்வைக்கிறது. இங்கு அத்வைத எதிர்ப்பு எங்கு வந்தது?

ஆதிசங்கரர் இல்லையேல் சிருங்கேரி பீடம் இல்லை. சிருங்கேரி இல்லையேல் தென் இந்தியாவில் சனாதன தர்மம் இல்லை. அந்த ஆதி குருவிற்கு வந்தனம் செய்யாமல் இன்று யாரும் பாரத ஞான மரபில் பேசமுடியாது. சங்கரரைப் பற்றி இராமானுசர் உயர்வாகப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்துள்ளது. சங்கரரை இழிவுபடுத்தியுள்ளேன் என்பது சுத்த மூடத்தனம். அபவாதம் என்றும் சொல்வேன்.

சைவத்தையும் அத்வைதத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன் என்பதும் தவறு. ‘சிவன்’ என்னும் பதம் பிரும்மத்தின் உருவகம் போல் பயன்படுத்தியுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் சைவத்தைப் பற்றிப் பேசவே இல்லை என்பதே உண்மை. ‘பதி, பசு, பாசம்’ முதலானவற்றைப் பற்றிப் பேசவே இல்லை. இராமானுச தத்துவம் பற்றிப் பேசுகையில் சைவம் தேவை இல்லை என்று அந்த வாதப் பகுதியை பிளாகில் எழுதும்போதே நீக்கிவிட்டேன் என்பதே உண்மை.

வைஷ்ணவ ஜீயர்களில் பிராமணர்கள் இல்லயே, எனவே இராமானுச தத்துவம் தோல்வியா? வைஷ்ணவக் கோவில்களில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர்களாக இல்லையே ? என்கிறார்கள். அர்ச்சகர்கள் பதவியில் இல்லை. ஆனால் ‘கோவில் ஒழுகு’ பிரகாரம் ஶ்ரீரங்கத்தில் கோவிலுக்குள் பல வேலைகள் செய்தார்கள். எல்லாவற்றையும் விட கோவிலுக்குள் நுழைந்தார்கள். அது இராமானுச தத்துவத்தின் வெற்றியே என்பேன். இதையே நூலிலும் சொல்லியுள்ளேன். ‘சாத்தாத முதலிகள்’ என்று பிராமணர் அல்லாதாரையும் வைஷ்ணவர்களாக உருமாற்றி ஒருமை கண்டவர் இராமானுசர். அதற்கு ஆழ்வார் பாசுரங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளேன். இதனையும் இந்த நாவல் பேசுகிறது.

இன்றைக்கும் கொங்கு முதலான தேசங்களில் பிராமணர் அல்லாத வைஷ்ணவர்கள் கட்டுப்பாட்டில் பல திருமால் கோவில்கள் உள்ளன. அவர்களிலும் கண்ணன் கூட்டம் என்று ஒரு குழு இருக்கிறது. இளைய பெருமாள் என்ற பெயரில் கண்ணன் வழிபாடும் வைஷ்ணவ வழிமுறையும் இருந்து வருகிறது. இதெல்லாம் இராமானுச தத்துவத்தின் வெற்றி இல்லாலமல் வேறென்ன?

பிராமணர் இல்லாத வைஷ்ணவர்கள் வன்னியர், தேவர், நாயுடு என்று பல பிரிவுகளிலும் இன்னும் தென்படுகின்றனர். புருஷோத்தம நாயுடு என்பாரின் பிரபந்த விளக்கம் அவ்வளவு எளிமையானது என்று கேட்டிருக்கிறேன். ராதாகிருஷ்ண பிள்ளை என்பாரின் ‘பண்டைய வைணவம்’ குறித்த நூலை என் நூலிற்காகப் படித்திருக்கிறேன். பிரமிக்க வைக்கும் ஆளுமைகள் பிராமணர் அல்லாத வைணவர்களில் தென்படுகின்றனர். பிராமணர் அல்லாத ரெட்டியார்கள் என்னும் வைஷ்ணவர்கள் செய்யும் சேவை கொஞ்சமா? இது இராமானுசரது ஒருங்கிணைக்கும் ஶ்ரீவைஷ்ணவக் கொள்கையின் வெற்றி இல்லாமல் வேறென்ன?

ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். இன்று எத்தனை சைவ மடங்களில் குறிப்பிட்ட சாதி தவிர மற்றவர்கள் பண்டார சன்னிதிகளாக முடியும்? ஜீயர்களைப் பற்றிக் கேட்பவர்கள் இதையும் கேட்கலாமா?

‘தென்கலை வடகலை’ – இதற்காகத்தான் இந்த நூல் என் பிளாகில் துவக்கம் கண்டது. ஆனால் இதற்காக மேலும் படிக்கப்போய் இந்த வேறுபாடுகள் இல்லாத, இதற்கெல்லாம் முற்பட்ட தூய விசிஷ்டாத்வைத தத்துவத்தை விளக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். எனவே தத்துவ அடிப்படையில் மட்டுமே இந்த வேறுபாட்டைக் கையாண்டுள்ளேன். சுஜாதா சொல்வார் ‘உழக்கில் கிழக்கு மேற்கு’ என்று. அது போல் தான் இந்த வேறுபாடும், அதற்கான நேர விரயங்களும்.

‘வேதாந்த தேசிகர் பார்வை’ – இராமானுசர் பேசுவதாக எழுதப்பட்ட நூலில் அவருக்குப் பின் தோன்றிய தேசிகரின் பார்வை எப்படி வர முடியும்? முடிந்தால் ‘நான் தேசிகன்’ என்று ஒரு நூல் எழுதலாம். அப்பைய தீக்‌‌ஷிதர் பார்வையும் அப்படியே.

‘கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் இரண்டையும் இணைக்கும் தத்துவம்’ என்று சொல்லியிருந்தேன். ‘இவை மார்க்சீய வார்த்தைகள். இவற்றை ஏன் பயன்படுத்துகிறாய்?’ என்று கேட்கிறார்கள். சொற்களுக்குக் கூட சாயம் பூசுவது இது.

இந்த நூலின் முன்னுரையில் அரவிந்தன் நீலகண்டன் சொல்வது போல ஶ்ரீவைஷ்ணவ சமன்வயப் பார்வை முன்வைக்கப்படுகிறது. தற்காலத்திற்கும் தேவையான, அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கு பேசப்படுகிறது.

ஶ்ரீவைஷ்ணவம் துவேஷங்களற்ற நோக்கு கொண்டது.

முடிவாக: இராமானுசரது பார்வையையும் அவரது வழியையும் எழுத வேண்டிய நூலில் ‘செக்யூலர்’ பார்வைக்காக என்று கடுகு தாளித்தால் அது தமிழ் சினிமா போல் அவியலாக அமையுமே தவிர மற்றபடி ஒரு பயனும் இராது. நாம் முதலில் இந்த வாழைமட்டை மனோபாவத்தை விடுத்து, பாரதத்தின் ஞான மரபின் வாரிசுகளாவோம். ‘செக்யூலர்’ சிரங்கு வந்து சொறியாமல் நமது தர்க்க விவாதப் பண்பாட்டை, தத்துவங்களின் பெருவிரிவுகளை அவை நிகழ்ந்த காலத்தின் சூழ்நிலைகளோடு பொருத்திப் பேசுவோம்.

நன்றி.

 

நான் இராமானுசன் – தினமணி மதிப்புரை

Naan Ramanusan  Dinamani

http://epaper.dinamani.com/892493/Dinamani-Chennai/01-08-2016#page/13/3

 

நான் இராமானுசன் – மதிப்புரை

புலி நகக்கொன்றை, கலங்கிய நதி முதலான நாவல்களின் ஆசிரியர், மார்க்சீய அறிவுஜீவி, கம்ப இராமாயணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட திரு பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் மதிப்புரை (பேஸ்புக்)
இரண்டு இராமானுஜர்கள் இருக்கிறார்கள். வடமொழி நூல்கள் எழுதி அவற்றின் வாயிலாக நாம் அறிந்து கொண்டிருக்கும் ராமானுஜர் ஒருவர். மற்றவர் வைணவக் குருபரம்பரைக் கதைகள் வாயிலாக நமக்குக் கிடைத்திருப்பவர். மக்களுக்கு நெருக்கமானவர் இரண்டாமவர்தான். இந்த இரண்டு ராமானுஜர்களையும் இணைத்து அவரது தத்துவம் என்ன என்பதை மிக எளிய முறையில் கதை போன்று சொல்லப்படும் புத்தகம் ஆமருவி தேவநாதனின் “நான் இராமானுசன்’. இதில் தத்துவம் அதிகம். கதை குறைவு. ஆனால் தத்துவம் மிகத் தெளிவாக வைணவ மரபைச் சார்ந்து விளக்கப்படுகிறது. அத்வைதத்தை ஏன் அவர் மறுக்கிறார் என்பதும், பௌத்த, சமண, சார்வாக நிலைப்பாடுகளை அவர் ஏன் எதிர்க்கிறார் என்பதும் காட்டப்படுகிறது. இந்தியத் தர்க்கமுறை எப்படி கருத்துக்களை அணுகுகிறது என்பதும் புத்தகத்தைப் படித்தால் விளங்கும்.

naan raamaanusan
இஸ்லாம் பற்றி இராமானுஜர் பேசுவதாக அமைந்தவை மட்டும் வலுவாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமியத் தத்துவம் என்ன என்பதை அவர் தெரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பே இல்லை. குருபரம்பரைக் கதைகளில் அவர் தில்லி சென்றதாகச் சொல்லப்பட்டதெல்லாம் முழுவதும் கற்பனை.

மற்றபடி நல்ல எளிமையான தமிழில் எழுதப்பட்டிருக்கும் புத்தகம். ராமானுஜரின் தத்துவம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இது மிகச் சிறந்த முதற்புத்தகம்.

‘நான் இராமானுசன்’ book is available for sale from Dial for books. Call this number and they will send the book to your doorstep. +91-9445 97 97 97 (Do send your review once you read)

நான் இராமானுசன் – சில விளக்கங்கள்

நான் இராமானுசனை பக்திக் கண்ணோட்டத்துடன் படிப்பது சிரமம் தான். இராமானுசரையோ திருமாலையோ மிக மிக உயர்த்திப் பேசும் சம்பிரதாயப் பேச்சுக்களும் வழக்குகளும் இதில் இருக்காது. இது கொஞ்சம் கதை, நிறைய தத்துவம் என்கிற அளவில், ‘விசிட்டாத்வைதம்’ குறித்த புரிதலுக்கும் அறிமுகத்திற்கும் ஒரு வழி.

சம்பிரதாயமான நூல்களில் அதீதமான மிகைப்படுத்தல்களும், நம்ப முடியாத, நம்பத் தேவை இல்லாத புனை கதைகளும் தென்படும். அவை ‘நான் இராமானுசனில்’ இருக்காது. நடைமுறை விசிட்டாத்வைதம் என்னும் அளவில் அந்த சித்தாந்தம் குறித்த புரிதல் ஏற்படுவதற்காக, விசிட்டாத்வைதத்தின் சமன்வயப் பார்வை வெளிப்படும்படியாக எழுதப்பட்ட நூல் இது.

இந்தியச் சிந்தனை மரபின் ஊற்றுக்கண் தர்க்கமே என்றும் நிறுவும் ஒரு முயற்சி இது. இந்த நூலை மேற்சொன்ன கண்ணோட்டத்துடன் பார்ப்பது நல்லது.

“ ‘நான் பிரபத்தி நெறியை முன்வைத்தேன்’ என்றோ, ‘நான் விசிட்டாத்வைதம் என்னும் முறையைத் துவக்கினேன்’, என்றோ இராமானுசர் சொல்லியிருப்பாரா?” என்று கேட்பதில் இந்த நூலின் புனைவுத்தன்மை அடிபடுகிறது. வைஷ்ணவ ஆச்சாரியர்கள்,’நான் செய்தேன் என்று சொல்ல மாட்டார்கள்,’ என்றும் ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இருக்கலாம். ஆதலால் இராமானுசன் இப்படி சொல்லக்கூடாது என்று எப்படிச் சொல்வது?

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் புனைவில் இன்றைய அளவுகோல்களை எப்படிப் புகுத்துவது?’ என்பதே என் பதில்.

ஒருவேளை இராமானுசர் சொல்லாவிட்டால் ஆளவந்தார் சொல்லியிருக்கலாம். அல்லது அதற்கும் முன்னர் நாதமுனிகள் சொல்லியிருக்கலாம். இதற்கு ஏதாவது ஒரு மூலம் இருந்திருக்க வேண்டும். நான், இராமானுசரை மூலமாகக் கொண்டு அவர் சொன்னதாகச் சொல்லியிருக்கிறேன். அதிலும் அவர் ‘நான் ஆழ்வார் சொன்னதையே சொல்கிறேன்’ என்றும் சொல்கிறார்.

மறுபடியும் : இது சம்பிரதாய நூல் அல்ல. வாழித் திருநாமங்கள் இருக்காது. நிறைய தர்க்கம், தத்துவம், அறிவுத்தேடல், இவற்றின் ஊடே கொஞ்சம் பொதுவாக அறியப்பட்ட வரலாறு. அவ்வளவே. நன்றி.

'நான் இராமானுசன்'-நூல் வெளியீடு

naan raamaanusanஇறையருளும் குருவருளும் ஒருங்கே இணைந்ததால் ‘நான் இராமானுசன்’ நூல் வெளியீடு இன்று இனிதே நடந்தேறியது. ஸ்ரீபெரும்பூதூர் ஜீயர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல ஆன்றோர்கள் பேசினர். பெரியவர் ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீ, ஸ்தாணுமாலயன், சதுர்வேதி சுவாமி, திரு.கலாநிதி முதலானோர் பேசிய சிலர்.

கலாநிதி அவர்கள் வெளியிட, திரு தடா.பெரியசாமி நூலைப் பெற்றுக்கொண்டார். பெரியசாமி அவர்கள் தலித் மாணவர்கள் நலனுக்காக ஆற்றி வரும் சேவைகள் பற்றி எழுத ஒரு தனி பதிவு வேண்டும்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த வாசக சொந்தங்களுக்கு என் வந்தனங்கள். முக நூல் வழியாக மட்டுமே தொடர்பில் உள்ள பல நண்பர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

சிங்கங்கள் கர்ஜித்த அந்த விழாவில் இந்த எலியும் பேசியது. அதன் காணொளி இங்கே.

%d bloggers like this: