அரசாங்கமே கள்ளுக் கடைகளை நடத்தலாம் கவலை இல்லை, இலவச அரிசி போட்டு மக்களை பிச்சைக் காரர்களாக ஆக்கலாம் தவறில்லை, சாதி அடிப்படையில் கல்வி மற்றும் வேலை அளிக்கலாம் தவறில்லை, ஆயிரம் வருஷ கலைப் பொக்கிஷங்களை அழிக்கலாம் தவறில்லை, மாணவிகளை கேலி செய்யலாம் , பஸ் தினம் நடத்தி ஓட்டை உடைசல் பஸ்களை மேலும் உடைக்கலாம் தவறில்லை, ஒவ்வொரு அமைச்சரும் ஒரு / பல பொறியியல் கல்லூரி நடத்தி வசூல் செய்யலாம் தவறில்லை, சட்ட சபையில் அநாகரீகமாக நடந்துகொள்ளலாம் தவறில்லை, ஆட்டோ ஓட்டுனர் கொள்ளை அடிக்கலாம் தவறில்லை. இதில் எல்லாம் தவறு காண முடியாத நாம் இப்போது மாணவர் போராட்டம் என்று மாணவர்களை பரீட்சை சமயத்தில் தூண்டிவிட்டு குளிர் காயலாம் தவறில்லை.