+1, +2 மாணவர்கள் கவனத்திற்கு..

+1, +2 மாணவர்கள் கவனத்திற்கு:

தற்போதைய விடுமுறைக் காலத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நீட், கிளாட் (NEET, CLAT) முதலான தேர்வுகளுக்கு என்று யூடியூபில் (Youtube) பல வடநாட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். எல்லாம் 30 நிமிடக் காணொளிகள். சில வகுப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. பெரும்பாலும் ஹிந்தியில். கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என்று சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து இக்காணொளிகளைக் கண்டு, பின்னர் கணக்குகளைப் போட்டுப் பார்த்து வந்தால் 4-5 மாதங்களில் எந்தத் தேர்வையும் சமாளிக்க முடியும். உடன் ஒரு பட்டதாரி ஆசிரியரையோ, தன்னார்வ உறுப்பினரோ இருந்தால் இன்னமும் எளிது.

அத்துடன். கேம்பிரிட்ஜ், கார்னெல், ஐயோவா, ஹார்வார்டு முதலிய பல்கலைகளின் ஆசிரியர்களின் காணொளிகளும் உள்ளன. டேட்டா சயின்ஸ் (Data Science) துறை தொடர்பான காணொளிகள் பல கிடைக்கின்றன. கோர்ஸெரா(Coursera), எட்எக்ஸ்,(Edx) உடெமி (Udemy) என்று பல நிறுவனங்கள் இலவச வகுப்புக்களையும் நடத்துகின்றன. வாரத்திற்கு 3 மணி நேரம் என்கிற அளவில் நடக்கும் வகுப்புக்கள் எளிதில் புரியும்படியும் உள்ளன. பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையெல்லாம் விட, ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்கள் NPTEL என்னும் இணையக் கல்விக் கழகத்தை நடத்துகின்றன. ஐஐடியின் பேராசிரியர்கள் பாடம் நடத்துகிறார்கள். பெரும்பாலும் இலவசமே. ஆனால் எப்போதுமே வகுப்புகள் நிரம்பி வழிகின்றன. சிங்கப்பூரில் இருந்து இந்தக் கல்விக் கழகங்களில் பலர் பயின்று வருகின்றனர் (அடியேனும்).

சினிமா, அரசியல், விளையாட்டு என்று நேரத்தை வீணாக்காமல், வீணாய்ப்போன மதமாற்றுக் குழுக்களின் பணம் பெறும் புதிய அரசியல் வியாபாரிகளின் பேச்சுக்களில் உங்களை விரயமாக்காமால், மேற்சொன்ன குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள். உங்களுக்கு நீங்களே உதவி.

இவை தவிர, வேறு கேள்விகள் இருப்பின் நான் பதிலளிக்கிறேன், அல்லது தெரிந்தவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன். எனது முகவரி : amaruvi@gmail.com

நினைவிருக்கட்டும்: நாளைய பாரதம் உங்கள் கையில்.

சில சுட்டிகள் :

Statistics and Probability

Learn to Program: The Fundamentals (LPT1)

Crafting Quality Code (LPT2)

Data Visualization with Tableau Specialization

Machine Learning by Stanford University

Learning How to Learn: Powerful mental tools to help you master tough subjects by Dr. Barbara Oakley and the University of California, San Diego via Coursera

Introduction to Databases by Stanford University