என்னைச் செதுக்கிய சில சிற்பிகள்

Jhss Teavhersநெய்வேலி ஜவகர் பள்ளியில் எனது ஆசிரியப் பெருமக்கள். இடமிருந்து வலம் : திருமதி.ஜீனா தயாளன், திரு.பட்டாபி ராமன் ( சமஸ்கிருதம்), திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி ( ஆங்கிலம் ), திரு. சுந்தரம் ( தலைமை ஆசிரியர்), திரு மாணிக்கம் ( உடற்பயிற்சி), திரு.வெங்கடேசன்,திருமதி, அனுசூயா( உயிரியல்). 

அனுசூயா அவர்கள் தவிர மற்ற அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார்கள்.

திரு.கிருஷ்ணமூர்த்தி ( G.K.Sir) அவர்கள் வகுப்புகளில் வோர்ட்ஸ்வர்த் நேரில் வருவார். அந்த ஒரு மணி நேரம் அங்கு ஜி.கே. இருக்க மாட்டார். கண்களில் நீர் மல்க ‘லூஸி கிரே’ ( Lucy Gray) வின் மரணத்தைக் கண்டிருக்கிறேன். ‘Solitary Reaper’ ன் சோக கீதம் உணர்ந்திருக்கிறேன். ‘In Celebration of Being Alive’ (Dr.Christian Bernard ), ‘In the grip of prejudice’ ( E.R.Braithwaite ) போன்ற பாடங்கள் நடக்கும் போது அந்த நிகழ்வுகள் என் கண் முன்னே ஓடியிருக்கின்றன. மே மாதம் அவருடன் தொலைபேசியில் பேசினேன்.

இந்தப் படத்தில் இன்னும் பலர் இல்லை. என் தமிழாசிரியை திருமதி. உலகம்மாள் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். அவர் அன்னை தெரஸாவின் தமிழ் வடிவம். இவருடனும் மே மாதம் பேசினேன்.  

ஆங்கில ஆசிரிய்ர் திரு.ராமானுஜமும் இந்தப் படத்தில் இல்லை. அந்த ஆங்கில ஜாம்பவானின் அறிவுக்கு ஈடு அவரே தான்.

இன்றெல்லாம் ஒரு நாலு வார்த்தை பேசவும் எழுதவும் வருகிறது என்றால் அவை எல்லாம் இவர்கள் போட்ட பிச்சை மட்டுமே.

இவர்கள் என்னைச் செதுக்கிய சிற்பிகள். சமீபத்தில் 1988ம் வருடம் வெளியேறிய மாணவர்கள் இவர்களை நெய்வேலியில் சந்தித்துள்ளனர். அவர்கள் பாக்கியவாங்கள்.

இவ்வாசிரியர்கள் கை பட்ட பல சிற்பங்களில் நான் ஒரு சிதறிய துண்டு.

%d bloggers like this: