ஐ.ஐ.டி – ஆமை புகுந்த வீடு

ஆமை புகுந்த வீடு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள, கம்யூனிசம் புகுந்த நாடுகளைப் பார்த்தாலே போதும். எவ்வளவு தூரம் ஒரு நாட்டைப் பின்னுக்குத் தள்ள முடியுமோ அதனைக் கம்யூனிசம் செவ்வெனே செய்யும். தற்போதைய லேட்டஸ்ட் ஆமை வீடு ஐஐடி.

நேருவின் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல விஷயங்களில் ஒன்று ஐஐடி. எஞ்சியிருக்கும் அதையும் கபளீகரம் செய்ய கம்யூனிச ஆதரவுள்ள கருங்காலிகள் முயல்கின்றனர். இதில் அம்பேத்கார் பெயரை வேறு எடுக்கின்றனர்.

அம்பேத்கர் ‘சோஷியலிசம்’ என்னும் சொல்லையே அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறையில் (Preamble) சேர்க்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். பின்னாளில் பாரத மக்கள் தங்களின் அரசு எவ்வகையான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்படும் வேளையில் உறுதி செய்ய முடியாது, எனவே அந்நாளைய பொருளாதாரக் கொள்கையைப் பின்னாளைய மக்களின் மேல் திணிக்கக் கூடாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். சோஷியலிசம் என்னும் சொல்லை மட்டும் அல்ல, செக்யூலரிசம் என்னும் சொல்லையும் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் சேர்க்க அவர் முன்வரவில்லை.

அப்படிப்பட்ட அம்பேத்கார் பெயரால் இடதுசாரிகளின் கைக்கூலிகள் ஐஐடியின் தரத்தையும் கெடுக்க முனைகின்றனர். இன்னொருவரின் பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

இடதுசாரிக் கையாட்கள் கல்வி கற்க இந்திய அரச ஆதரவு வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் கையாளும் ரஷ்யாவிலோ, சைனாவிலோ படிப்பதில்லை. மேல் படிப்புக்குத் தவறாமல் அமெரிக்காவுக்கே போக வேண்டும். அதுவும் கொலம்பியா பல்கலையிலேயே பட்டம் பெற்றுத் திரும்ப வேண்டும். வந்து ஹிந்துவிலோ, தீக்கதிரிலோ ( பெரிய வித்யாசம் இல்லை என்றாலும் ) வேலைக்குச் சேர்ந்து பிராணனை வாங்க வேண்டும் என்பது தாஸ் கேப்பிடல் வேதாகமத்தில் வருகிறதோ என்னெழவோ.

சில பிரகிருதிகள் ஜெ.என்.யூ. சென்று டோரா போட்டு மீண்டும் கொட்டம். மீடியா ஒத்து ஊத, கோப்பையும் கையுமாக ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் ராப்பத்து, பகல்பத்து உற்சவம். இந்தக் கழிசடைகளுக்கு வாரிக்கொடுக்க வரி காட்டுபவர் தெண்டம் அழ வேண்டும்.

கெஜ்ரிவால் கூட பட்டம் பெற முடியும் என்கிற நிலையில் தான் ஐஐடி இருக்கிறதா என்னும் ஐயம் எனக்கு இருந்தது. தற்போது எந்தக் கழுதையும் உள்ளே நுழைந்து கூத்தடிக்க முடியும் போல் தெரிகிறது.

பி.கு.: நிஜக் கழுதைகள் மன்னிக்கவும்.

%d bloggers like this: