எனது அருமை காமராஜுக்கு,
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தொடர்ந்து மேற்கொண்டுவரும் பிராம்மண எதிர்ப்புப் பேச்சுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன.
இதைப்பற்றி நான் உங்களுக்கு முன்னமேயே எழுதியிருந்தேன். கவனித்து வருகிறீர்கள் என்று பதில் கிடைத்தது.
ராமசாமி நாயக்கர் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். தொடர்ந்து மக்களிடம் சரியான நேரத்தில் கத்தியால் குத்தவும் கொலை செய்யவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
ராமசாமி சொல்வதை ஒரு குற்றவாளியாலோ, பயித்தியக்கரனாலோ மட்டுமே சொல்ல முடியும். (What he says can only be said by a criminal or a lunatic)
அவர் ( ராமசாமி நாயக்கர்) எப்படிப்பட்டவர் என்று நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்றைச் சொல்ல முடியும். அவர் பேசுவது நாடு முழுவதிலும் கடும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
அனைத்து சமூக விரோதிகளும் குற்றவாளிகளும் இம்மாதிரியாக நடந்துகொள்ளலாம் என்று ஊக்கம் பெறும் வகையில் உள்ளது ( அவர் பேச்சு ).
நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவெனில், இந்த விஷயத்தில் இனியும் துளியும் காலதாமதம் வேண்டாம். ராமசாமி நாயக்கரை மன நல மருத்துவமனையில் சேர்த்து, கோணலான மனதிற்கு வைத்தியம் அளிக்க வேண்டும். (I suggest, therefore, to you that there should be no delay in dealing with this matter. Let him be put in a lunatic asylum and his perverted mind treated there)
கொலை நடக்கும் வரை சட்டம் பாய முடியாது என்று சொல்வது எனக்குப் புரியவில்லை. சட்டம் பல நேரங்களில் முட்டாள்தனமாக இருக்கலாம், ஆனால் இம்மாதிரியாகக் கொலை செய்ய அறைகூவும் செயல்களை அனுமதிக்கும் அளவிற்கு முட்டாள்தனமானதாக இல்லை.
உங்கள் நேர்மையுள்ள
ஜவஹர்லால் நேரு.
நவம்பர் 5, 1957,
புது தில்லி.
பி.கு.: நவம்பர் 3, 1957 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற தி.க. மாநாட்டில், அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத உரிமைகளுக்கான உத்தரவாதங்கள் இருந்ததை நீக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. 15 நாட்களுக்குள் நடக்கவில்லை எனில், அரசியல் அமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் நடக்கும், காந்தியின் சிலைகள் உடைக்கப்படும் என்றும், அதனால் பலன் இல்லை எனில், பிராமணர்களைக் கொல்லவும், அவர்களின் வாழ்விடங்களை எரியூட்டவும் தி.க. உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர் என்று தீர்மானம் போடப்பட்டது.

Photo Courtesy : Writer P.A.Krishnan.
Leave a comment