The side that is not spoken about, generally.

2020ல் பாடகி சின்மயி 1 நிமிடம் ஓடக்கூடிய காணொளி வெளியிட்டார். காமுகப் பாடலாசிரியர் ஒருவர் பற்றிய தன் புகாருக்கு எந்த மதிப்பும் இல்லை. காவல்துறை மௌனம் சாதிக்கிறது. அரசு ( எடப்பாடி) உறங்குகிறது. நீங்களாவது ஏதாவது செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டிருந்தார். சினிமா நாளிதழ் ஒன்றில் காமுகக் கவிஞரின் லீலைகள் பற்றிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையையும் சுட்டியிருந்தார். நீண்ட, அருமையான கட்டுரை அது. பாதிக்கப்பட்ட பல பெண்கள் பேசியிருந்தனர்.

அந்தக் கட்டுரையைக் காலச்சுவடு கண்ணன் பதிந்து, இதைத் தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று எழுதினார்.

நான் அந்த சினிமா இதழின் கட்டுரையாளர் + ஆசிரியர் ( பெண்மணி ) – அவர்களைத் தொடர்புகொண்டேன். மொழிபெயர்க்க அனுமதி உண்டா என்று கேட்டிருந்தேன். பின்னர் சொல்கிறேன் என்பது போல் பதில் வந்தது. வெளிப்படையாக இல்லை என்று சொல்லவில்லை.

ஆர்வக் கோளாறில் கட்டுரையின் முதல் பாகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தேன். காமுகப் பாடலாசிரியனின் பாலியல் சீண்டல்களைத் தமிழில் எழுதக் கை கூசியது. இருந்தும், சின்மயி மனம் உருகி வெளியிட்ட அந்தக் காணொளி என்னை மிகவும் பாதித்தது என்பதாலும், நம் வீட்டில் உள்ள பெண்ணிற்கு இப்படி நடந்தால் சும்மா இருப்போமா என்பதாலும் உந்தப்பட்டு, பெரு முயற்சி எடுத்து எழுதினேன்.

ஆங்கிலக் கட்டுரையாளரிடம் இருந்து வெளிப்படையான ஒப்புதல் கிட்டவில்லை.

ஆயினும், கட்டுரையை வெளியிடுவீர்களா என்று பொதுவாகக் கேட்டிருந்தேன். தந்தி டிவியில் இருந்து ஒருவர் பேசினார். அப்போது வெளிவந்த ‘வலம்’ இதழ் மட்டும் வெளியிட முன்வந்தது.

என் தளத்தில் கட்டுரையை வெளியிட்டேன். மிகவும் வைரலானது.

ஆங்கிலக் கட்டுரையாளர் காப்புரிமை என்றார். ஒருமாதிரி ஒப்புக் கொண்டீர்களே என்றேன். இல்லை நாங்களே வேறு மொழிபெயர்ப்பாளரை வைத்து எழுதி வெளியிடுகிறோம் என்றார். மீண்டும் ஏன் எழுத வேண்டும் ? இதையே வெளியிடுங்கள் என்றேன். நாங்கள் ஏற்கெனவே பணம் கொடுத்துவிட்டோம் என்றார். நான் என் கட்டுரையை என் தளத்தில் இருந்து நீக்கிவிட்டேன்.

தற்போது சுமார் 4 ஆண்டுகள் ஓடிவிட்டன. கட்டுரை தமிழில் வெளிவரவே இல்லை.

தன் தாத்தா வயதுள்ள முந்தைய கவர்னர் லட்சுமி சுப்பிரமணியம் என்னும் பத்திரிக்கையாளர் கன்னத்தில் தட்டினார் என்பதை ஊதிப் பெரிதாக்கி, பெண்ணீயம் பொங்கி, கனிமொழீயம் வழிந்து ஆறாக ஓடி, டிவிக்கள பொங்கி வழிந்து தளும்பி நின்ற இதே தமிழ்நாட்டில் தான் ஒரு காமுகக் கவிஞன் பற்றிய அந்த ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அந்த ஆங்கிலக் கட்டுரையாளருக்கே கூட அனுமதி இல்லை.

இது தமிழ்நாடு.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பெண்ணீயம் பேசும் எந்த எழுத்தாளர் உரக்கப் பேசினாலும் தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உதயநிதி சொன்னது போல ‘கோழிமுட்டை’ அளவே.

இன்று இந்திரா காந்தி நினைவு நாள். இந்திராவோ, ஜெயலலிதாவோ இருந்திருந்தால் அந்தக் காமுகக் கவிஞர் பற்றிய கட்டுரை வெளியாகியிருக்கும். அனேகமாகக் காமுகர் உள்ளே இருந்திருப்பார்.

#IndiraGandhi#Chinmayi

2 responses

  1. Ravichandran R Avatar
    Ravichandran R

    துணிவாக தங்கள் கருத்தை பதிவிட்டதிற்கு மிக்க நன்றி! கருத்து சுதந்திரம் என்பது ‘ஆளும்’ கட்சிகளின் கருத்துரிமை…அது எல்லாருக்குமானதல்ல! அவர்கள் ஆளும் போது ஒரு நிலை அவர்களே எதிர்க் கட்சி ஆனால் முற்றும் எதிர் நிலை!

    Like

Leave a comment