The side that is not spoken about, generally.

எல்லாருமாகச் சேர்ந்து,  ‘நீ எதிர்பார்க்கற யதார்த்தவாதம் நிறைய இருக்கு’ அப்டீன்னு ஏகத்துக்குச் சொல்லி, ‘த்ரிஷ்யம்’ போல இருக்கு நிறைய ஏற்றிவிட்டு,  என்று  ‘சரி, இதைப் பார்ககவிட்டால் தெய்வ குத்தாம் ஆகிவிடும்’ என்கிற ரீதியில் போனவாரம் ‘துடரும்’ என்கிற மலையாள கொடூரத்தை அனுபவித்தேன். 

ஒரு வாரம் ஆகியும் கோபம் குறையவில்லை. அதனால் கொஞ்சம் காட்டமாக இருக்கலாம். 

எதுக்கைய்யா மோகன்லாலை இப்டிச் செஞ்சீங்க ? தனுஷ், சிம்பு மாதிரி ஆட்களுக்குக் கொடுக்க வேண்டியத மோகன்லாலுக்குன்னு கொடுக்க எப்படி மனசு வந்தது உங்களுக்கு ? 

ஏனையா மோகன்லால் – எங்கய்யா போச்சு உம்ம அறிவு ? இது என்ன படம் ? இதுக்கு ஷோபனா ஒரு கேடு. ரொம்ப வருஷம் கழிச்சு ஒண்ணா நடிக்கறோம்னு பீத்தல் வேற. ‘மணிசித்திரத்தாழு’ ஷோபனா-மோகன்லால், ‘தேன்மாவின் கொம்பத்து’ ஷோபனா-மோகன்லால் என்று நம்பி படம் பார்த்தால், அந்த அருமையான நாட்டியக்கார நடிகைய என்னய்யா செஞ்சு வெச்சிருக்கீங்க ?  

இடைவேளை வரைக்கும் பார்த்துட்டு வந்திருக்கணும். அதோட கதைய முடிச்சாவது இருந்திருக்கலாம். இடைவேளைக்கு அப்பறம் கதை இல்லேன்னா உடனே ஸ்லோ-மோஷன் போயிடறதா ? உக்கார்றது, பார்க்கறது, திரும்பறது எல்லாமே ஸ்லோமோஷன்னா படம் பார்த்த நான் ஃபாஸ்ட்-மோஷன்ல எழுந்து ஓடிடலாம்னு தோண வெச்சுட்டீங்களேப்பா.. 

கதை தெரியல, மறந்துபோச்சு, எழுதின கதையோட பத்து பக்கத்த நாய் தின்னுடுச்சுன்னு ஏதாவது டிஸ்க்ளெய்மராவது போட்டிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு மோகன்லாலோட வேற ஏதோ படத்தப் பார்க்கற மாதிரியா ஒரே படத்த எடுக்கறது ? இதுல எதாவது குறியீடு எதாவது இருந்து தொலைச்சு, எனக்குப் பஹுத்-அறிவு இல்லேங்கறதால புரியலயோ ? என்ன கண்றாவியோ தெரியல. 

மோகன்லால், ஷோபனா ஜோடி சேர்ந்து படம் பண்ணனும்னு எதாவது வேண்டுதல் இருந்தா சேர்ந்து நின்னு ஃபோட்டோ எடுத்துப் போட்டிருக்கலாமேய்யா. எதுக்கு இப்படி ஒரு கொடூரத்தப் பண்ணித் தொலைச்சிருக்கீங்க ? மோகன்லால் உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணினார் ? அந்தம்மா ஷோபனா ஆழ்வார்பேட்டைல தேமேன்னு டான்ஸ் ஸ்கூல் நடத்திக்கிட்டு இருக்கறவங்களை வலிஞ்சு வரவழைச்சு இப்படி ஒரு கொடுமையப் பண்ணனுமா ? அவங்க போன ஜென்மத்துல உங்களுக்கு என்னய்யா பாவம் பண்ணினாங்க ? 

அது போகட்டும். கதைல ரொம்ப முற்போக்கு வேணும்னு ஏதாவது வேண்டுதலா ? எதுக்காக தேவையில்லாம இன்செஸ்ட் விஷயம் எல்லாம் சொல்லி, அந்தச் சின்னப் பொண்ணப் போலீஸ் அடிக்குது ? இதுக்கு மகளிர் ஆணையம் மண்ணாங்கட்டி ஆணையம்னு எதுவும் வக்காலத்துக்கு வர மாட்டாங்களா ? மலையாளத்துல செஞ்சா எதுவுமே சரியா ? 

படம் எதுக்கு எடுத்தோம்னு டைரக்டருக்குத் தெரியல. என்ன கதைன்னு மோகன்லாலுக்குப் புரியல. ஏன் இந்தக் கண்றாவில நடிச்சோம்னு ஷோபனாவுக்குப் புரியலன்னு நினைகக்றேன்.. எதுக்கு இந்தக் கொடூரத்தப் பார்த்தேன்னு எனக்கும் புரியல. 

இந்த அழகுல இந்தப் படம் ‘தொடரும்’ அப்டீன்னு சொல்றாங்க. ரெண்டாம் பாகம் வேற வரும் போல. முடியல. 

ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தரம் சினிமா தியேட்டர் போறவன் நான். பர்மனெண்டா போகாம பண்ணிட்டீங்கப்பா. 

ரொம்ப சந்தோஷம். 

துடரும் = கொடூரம். நேர விரயம். அமிர்தாஞ்சன் 2 டப்பா, அரைக்கிலோ பஞ்சு ( காதுகளுக்கு), கண்ணைக் கட்டிக்கொள்ள தி.க.காரன் போடும் கருப்புத் துணி இருந்தால் மட்டும் இந்தப் படத்துக்குப் போகவும். 

Leave a comment