The side that is not spoken about, generally.

விசேஷ நிருபர் அசட்டு அம்மாஞ்சி ஒட்டுக்கேட்ட பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை. டுமீல் டைம்ஸ் சிறப்புக் கட்டுரை. #satire

ஷா: வாங்க ஜி வாங்க ஜி உக்காருங்க.

எட: வாங்கறதுக்கு வரச்சொன்னீங்க.. இல்லேன்னா வந்திருக்க மாட்டேன்.

ஷா: வரல்லேன்னா ஈடி வந்திருக்கும்னு நான் சொல்ல மாட்டேன் ஜி

எட: அத எதுக்கு சொல்லணும், தெரிஞ்சதது தானே.

ஷா: நம்ம இலக்கு பொது எதிரிய ஒழிக்கணும். அதுக்குத் தான் வரச் சொன்னேன்.

எட: ஆமாமாம். ஓபிஸ்ஸ ஒழிக்கறது தான் இலக்கு.

ஷா: நான் அவரச் சொல்லலீங்க.. நீங்க வேற..

எட: ஓ நீங்க அண்ணாமலையச் சொல்றீங்களா ? சரியாத்தான் சொல்றீங்க.

ஷா: அவருக்கு வெளிக் கட்சில எதிரி இல்லியே. நாங்க உள்ளேயே வெச்சிருக்கோம். தி,நகர்ல இருக்காங்களே.. தெரியாதா ?

எட: எதுக்கு உங்க கட்சிலயே அவருக்கு எதிரிங்கள வெச்சிருக்கீங்க ?

ஷா: என்ன ஜி இது தெரியாதா ? நாங்க ஸ்வயம்சேவக் இல்லியா? இதுக்காக மத்த கட்சில ஆள் தேட முடியுமா?

எட: அட.. இது தான் மேக் இன் இந்தியா திட்டம் போல. இப்ப புரியுது. என்னோட எதிரிகள் கூட கட்சிக்குள்ள இருந்தாங்க. நான் வெளில அனுப்பிட்டேன். நண்பர்கள் வெளில ஆளுங்கட்சியா இருக்காங்க..

ஷா: புரியலையே..

எட: தேர்தல் முடிவு வரட்டும். அப்ப புரியும்..

ஷா: அந்த அண்ணாமலை..

எட: அடடே, விஜய் ஃபோன் பண்றார். பேசிட்டு வந்துடறேன்.

ஷா: சாரி ஜி. தப்பா சொல்லிட்டேன். திருவண்ணாமலைன்னு சொல்றதுக்குப் பதிலா திருவ விட்டுட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க.

எட்: அட.. அந்தப் போர்னால நான் அண்ணாலை யூனிவர்சிட்டி கிட்ட குட போறதில்லீங்க. அவ்வளவு பயம்.. சாரி.. கோவம்.

ஷா: தெரியாதுங்களா? டி.எம்.கே. ஃபைல்ஸ் மாதிரி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிட ரெடியா இருந்தார். நம்ம குருமூர்த்திஜி தான் நிப்பாட்டி வெச்சிருக்கார்.

எட: இதுக்குத்தான் சொல்றது.. கூட்டணி தர்மம்னு ஒண்ணு இருக்குன்னு. நீங்க அதை மீறறீங்களே.

ஷா: கூட்டணி இன்னும் ஏற்படல்லியே..

எட: பாருங்க.. விஜய் விடாம ஃபோன் போட்டுக்கிட்டே இருக்காரு.. ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடட்டுமா ?

ஷா: அப்பறம் உங்க இஷ்டம். நாளைக்கி ஈடி ஆஃபீச்ர்ஸ் எதாவது ஆர்வக்க்கோளாருல செஞ்சுட்டாங்கன்னா எனக்குத் தெரியாது..

எட: அட நீங்க வேற. இது எங்க பக்கத்து வீட்டு விஜய். சினிமா விஜய் இல்ல.

ஷா: அதானே பார்த்தேன். இல்லேன்னா ஓபிஎஸ் தலைமைல அதிமுக உருவாகி வந்துடும்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்க மாறிட்டீங்க..

எட: ரொம்ப கோபப் படறீங்களே.. கொஞ்சம் நிதானமா இருங்க ஜி. இந்த வக்ஃப் சட்டம், சிஏஏ, நீட் எதிர்ப்பு இப்படி எல்லாத்துலயும நான் உங்கள எதிர்த்தாலும் நீங்க வெக்கமே இல்லாம.. சாரி.. அதாவது.. பெருந்தன்மையோட, கொள்கைகளைக் காத்துல பறக்க விட்டு, உங்க கட்சிய 2% லேர்ந்து 14% வரைக்கும் கொண்டுவந்தவருக்குக் கல்தா கொடுக்கணும்னு கேட்ட உடனே ஒப்புக்கிட்டீங்களே.. இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும் ?

ஷா: நேச்சுரல் அலையன்ஸ் இல்லியா பின்னே ?

எட: அத்வானியே சொன்னாரே.. நேச்சுரல் அலையன்ஸ்னு..

ஷா: அத்வானியா.. எங்கியோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே..

எட: விடுங்க.. சகஜம் தானே. எனக்குக் கூடத்தான் எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதா எல்லாம் எங்கியோ கனவுல கேட்ட பேரா இருக்கு..

ஷா: ஆனா ஒண்ணு.. வீடு பத்தி எரியும் போது நெருப்பை அணைக்க சாக்கடயையும் பயன்படுத்தலாம்னு குருமூர்த்திஜி சொன்னது இன்னும் நினைவுல இருக்கு.

எட: பார்த்தீங்களா ? மறுபடியும் விஜய் கால் பண்றாரு.. இதுக்குத்தான்..

ஷா: ஒண்ணும் பிரச்னை இல்லை. பேசிட்டு அப்படியே, அதோ வெளில நிக்கறாரே, அவர்தான் ஈடி ஆஃபீஸர் அவர்கிட்ட பேசிட்டுப் போங்க. அடுத்த ரூம்ல சைமன் வெயிட் பண்றாரு..

எட: அட, இப்பயம் பக்கத்து வீட்டு விஜய் தாங்க.. நீங்க பேசுங்க..

ஷா: ‘நான் ஒரு தடவை சொன்னா..’

எட: பார்த்தீங்களா ? மறுபடியும் அண்ணாமலை பத்தியே பேசறீங்களே..

ஷா: அட இல்லீங்க.. ரஜினி பேசுவாரே அண்ணாமலைல, அந்த அண்ணாமலை படம் பார்த்தீங்களான்னு கேட்க வந்தேன்.

எட: இப்பன்னு பார்த்து விஜய் ஃபோன் அடிக்க மாட்டேங்கறாரு பாருங்க..

ஷா: வெளிலயே நிக்கறீங்களே, உள்ள வாங்க ஆஃபீஸர்.

எட: அட என்னங்க.. இதுக்குப் போயி இப்பிடி கோபப்படறீங்களே.. 110 சீட்டு உங்களுக்கு. போதுமா ? கூட்டணி அறிவிச்சுடுங்க.

ஷா: ஹலோ, யாரு ? கொட நாடு போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து பேசறீங்களா ?

எட: அட என்னங்க நீங்க. கூட ஒரு பத்து போட்டு, 120 வெச்சுக்குங்க.

ஷா: ஹலோ.. ஓ நீங்களா.. சரி. அண்ணாமலையே இருக்கட்டுமா ? 140 தர்றீங்களா ? இங்க ஒருத்தர் 120ல நிக்கறாரே ? தம்பி உதயநிதிக்கு இல்லாத அப்பாயிண்மெண்ட்டா ? பார்த்துக்கலாம். வரச்சொல்லுங்க. எதுக்கும் பேசிட்டுச் சொல்லவா ?

எட: ரொம்ப மோசங்க நீங்க. எனக்கு ஒரே கண்டிஷன் தான். 130 நீங்க வெச்சுக்கோங்க. மத்ததுல எங்களுக்கும் கூட்டணிக்கும்னு கொடுத்துடறேன். ஆனா அண்ணாமலை மட்டும் இருக்கபப்டாது. அது ஒண்ணுதான் எனக்கு வேணும்.

ஷா: அப்ப அண்ணாமலைக்கு வெயிட்டு 130 இடம், இல்லியா ? சரி. உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம்.. 150ல முடிச்சுக்கலாம். அண்ணாமலையத் தூக்கிடறோம்.

எட: பெரியவங்க நீங்க. எங்க நயினார் நாகேந்திரன தலைவராப் போட்டீங்கன்னா ரொம்ப ஹெல்ப்பா இருக்கும்.

ஷா: அவரு எங்க கட்சில இருக்காரே.

எட: உங்க கட்சிக்குத் தாங்க. நயினார நியமிச்சீங்கன்னா…

ஷா: எங்க கட்சிக்கு தமிழ் நாட்டுல யார தலைவர்ங்கறத தீர்மானிக்கறதுக்கு உங்களுக்கு இல்லாத உரிமையா ? நீங்க யார சொல்றீங்களோ..

எட: சரிங்க. சந்தோஷம். அப்ப 153 எடம் உங்களுக்கு வெச்சுக்குங்க. அந்த ஈடீ ஆஃபிஸர மட்டும் மொறச்சுப் பார்க்காம இருக்கச் சொல்லுங்க. அப்புறம் ஆமருவின்னு ஒருத்தன் கார்ட்டூன் போட்டு கெளறுவான், அவனையும் கொஞ்சம் பார்த்துக்குங்க..

ஷா: சரி. இவ்வளவு சொல்லிட்டீங்க. 160 வெச்சுக்கலாம். இரட்டை இலை சின்ன வேணும் இல்லியா.. அதுக்குச் சொல்றேன்.

எட: ரொம்ப பயமுறுத்தறீங்க.. போகட்டும். அப்ப அண்ணாமலை விஷயம்…

ஷா: நான் ஏற்கெனவே பார்த்துட்டேனே. இன் ஃபாக்ட் அண்ணாமலையே பார்த்திருக்காரே. மே ஏக் பார் போலேகா தோ சௌ பார் போல்னேகா தரஃப் ஹை – அதுதானே அண்ணாமலை ஜி ?

அண்ணாமலை : ‘யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’ – எடப்பாடி அண்ணே, இத அவருக்கு ஹிந்தில சொல்லிடுங்க. வர்ட்டா ?

–ஆமருவி

30-05-2025

One response

  1. harisivan Avatar

    ED Officer and Simon are the twist 🙂

    பக்கத்துவீட்டு விஜய் ஓரு imaginary பாத்ரம் மாதிரிதானே சார்

    Like

Leave a comment