‘நெய்வேலிக் கதைகள்’ நூலை வாசித்துவிட்டு அழைத்திருந்தார் 85 வயதான என் ஆங்கில ஆசிரியர் ஶ்ரீமதி. ஶ்ரீதேவி பத்மநாபன். ‘எலந்தப் பழம்’ கதையப் படிச்சுட்டு அழுதுட்டேன். ஹிந்திக்ளாஸ், கெமிஸ்ட்ரி கதை இதெல்லாம் வாசிச்சுட்டு சிரிச்சுண்டே இருந்தேன். பல தடவை வாசிச்சேன். டீச்சர்கள் பார்வைல எனக்கு நெய்வேலிப் பசங்களத் தெரியும். பசங்க பார்வைல டீச்சர்ஸ், ஸ்கூல் பத்தி ரொம்ப நன்னா சொல்லியிருக்கே, ஹாஸ்யத்தோட..’ என்று பாராட்டிவிட்டு, நெய்வேலி பற்றிப் பலதும் பேசிக்கொண்டிருந்தார்.
85 வயதான ஆசிரியருக்கு நல்ல மகிழ்வான தருணங்களை வழங்க முடிகிறது என்கிற நிறைவை விடுத்து, ‘வேறு என்ன ‘ரெவ்யூ’ வேண்டும் ?’ என்கிற எண்ணத்தால் மனம் மகிழ்ச்சியான நினைவுகளில் பொங்க, அதை அப்படியே வாசகர்களிடம் சொல்லிவிட்டேன்.
தமிழ் இதழ்கள் மதிப்புரை போட்டால் போடுங்கள் எப்படியோ போங்கள். ஆங்கே ஒரு முதிய ஆசிரியர் ஆசீர்வதிக்கிறார். அது போதும். #நெய்வேலிக்கதைகள்
-ஆமருவி
06/07/2025
Leave a comment