The side that is not spoken about, generally.

எழுத்தாளர் சோ.தர்மன், ‘நீதிபதிக்கு ஜாதீய மனப்பான்மை இல்லை’ என்றால் தவறு. கடித்துக் குதற வேண்டும். ஒருமையில் வசவு மழை பொழிய வேண்டும். அவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவராக இருந்தாலும் கூட. ஒரு எழுத்தாளனுக்குத் தமிழ்ச் சமூகத்தில் என்ன மாதிரியான மதிப்பு உள்ளது என்பதை சோ.தர்மன் அவர்களின் கருத்துக்கு வந்துள்ள எதிர்வினைகள் காட்டுகின்றன. இது ஒரு வகை மன நோய். திராவிட மாடல் மன நோய் தவிர வேறொன்றுமில்லை.

எதையாவது எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். யாரையாவது வைதுகொண்டே இருக்க வேண்டும். இது மன நோய் இல்லாமல் வேறென்ன ? அதவும், வேறு எதுவும் கிடைக்கவில்லை என்றால் ப்ராம்மணர்களை வைய வேண்டும். திருநெல்வேலியில் சாதிக் கொலைகளை அடக்க வக்கில்லாதவர்கள், ஜாதியை ஒழித்துவிட்டோம் என்று 50 ஆண்டுகளாகக் கொக்கரிக்கும் கூட்டம், தனது இயலாமைகளை மறைக்க, மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இப்படி எதையாவது கிளப்பிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது. இதற்கென்று பொங்குவதற்கென்றே ஒரு வெறும் கூட்டம். பொருட்படுத்தக் கூடிய எந்தவொரு சாதனைகளையும் செய்யாத வெற்று ஓநாய்க் கூட்டத்தை ஊடகம் என்கிற பெயரில் வைத்துக் கொண்டு திரியும் கொடுங்காட்சி. இது நமது சாபக் கேடு.

லாக்கப்பில் 24 பேர் மரணம். கள்ளச்சாராய மரணங்கள். பல்கலையில் பாலியல் குற்றம். தினம் இரண்டு போஸ்கோ வழக்குகள். எங்கும் ஊழல். என்ன ‘மாடல்’ ? என்னென்ன கண்றாவிகளோ இன்னும்.

இந்த அழகில், சாகித்திய அகாதெமி விருது பெற்றவரும், கூகை, வௌவால் தேசம், சூல் முதலிய பாராட்டப்படும் நாவல்களை எழுதியவருமான எழுத்தாளர் சோ.தர்மனைக் குதறுகிறது ஓநாய்க் கூட்டம். இவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் கூட அஞ்சி ‘நமக்கு நடப்பு அரசியல் தேவை இல்லை’ என்று உருட்டும் அறம் சார்ந்த எழுத்தாளர் கூட்டம். அரசு வழங்கும் வீடு வேண்டும் என்பதற்காக அட்டைப்படத்தில் திருநீறு உள்ள தன் படத்தை எடுக்கச் சொன்ன பெரிய எழுத்தாளர்கள் என்று எல்லாருமே விஸ்வரூப மௌனம் எடுத்துள்ள தமிழ் எழுத்தாளர் உலகின் தரம் தாழ்ந்த நிலை. ‘ஒற்றை இந்துத்துவ எதிர்ப்பு’ என்ற தலைப்பில் பொங்கிய எழுத்தாள சிரோமணிகள் இப்போது எங்கே போயினர் ? உங்கள் சொந்த எழுத்தாளர் ஒருவருக்கே கூட குரல் கொடுக்க முடியாத கையறு நிலையில் உள்ள நீங்கள் அறம், புரட்சி, இலக்கிய ரசனை என்று எத்தனை எழுதியும் பேசியும் செய்தால் என்ன, செய்யாவிட்டால் என்ன ? வாய் பொத்தி, கூனிக் குறுகி, மனசாட்சியை விற்று, அரசு / ஆளும் தரப்புகளுக்கு எதிராகப் பேசிவிடுவோமோ என்று பயந்து நடுங்கி வாழும் இந்த எழுத்தாளப் பேரரசுகள் ‘அவியினும் வாழினும் என்?

‘ ‘நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு’ என்று சொல்லி நாய்களைக் கேவலப்படுத்த விரும்பவில்லை. ‘பேசுவது மானம் இடைப் பேணுவது காமம் கூசுவது மாடல் அரசாங்கத்தை.. நன்று உம் கொற்றம் எழுத்தாளர்களே’ என்று நான் எழுதினால் கம்பன் கோபிக்க மாட்டான்.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு என் பாராட்டுகள். நான் உங்கள் பக்கம். வாழ்க நீ எம்மான்.

-ஆமருவி 29-07-2025

Leave a comment