மயிலாப்பூர் ப்ராம்மணர்கள் சீமானுக்கு ஓட்டுப் போட வேண்டுமா ?
செபாஸ்டியன் சைமன் ப்ராம்மணர்களுக்கு 6 இடங்கள் கொடுத்துள்ளார். அதில் ஒன்று மயிலாப்பூர் தொகுதி. ஆகவே ப்ராம்மணர்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற பார்வை தவறானது. கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்.
2021 தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் :
த.வேலு ( திமுக ) : 68,392
நடராஜ் (அதிமுக) : 55,759
ஶ்ரீபிரியா (ம.நீ.ம) : 14,904
மஹாலட்சுமி (நா.த.க) 10,124
முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜ் அளப்பரிய தொகுதிப்பணிகள் செய்திருந்தாலும், 12,533 வாக்கு வித்யாசத்தில் திமுகவிடம் தோற்றார். இதற்குக் காரணம் சீமான் + கமல்ஹாசன். இவர்கள் திமுகவிடம் பணம் வாங்காமல் ஓட்டைப் பிரித்தார்கள் என்பதை நம்புவது உங்கள் இஷ்டம்.
இந்த முறை கமல்ஹாசன் வாக்குப் பிளப்பு நடத்தப் போவதில்லை. ஆக, மீதம் இருப்பது சீமான் மட்டுமே.
மயிலாப்பூரில் ப்ராம்மணர்கள் எப்படியும் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை. அது அதிமுக / பாஜக வாக்காகத்தான் இருக்க முடியும். ஆக, இந்த அதிமுக / பாஜக வாக்கைப் பிளக்க திமுக செய்துள்ள சதியே சீமானின் ப்ராம்மண வேட்பாளர் + ராமானுஜர்/பாரதி/சுப்பிரமணிய சிவா பற்றிய வேட்பாளர் அறிமுகப் பேச்சுகள்.

சீமான் கட்சி ப்ராம்மண வேட்பாளர் அருண், ஈழம், தனி நாடு கண்டடைதல் என்பதே தீர்வு என்கிறார். பிரபாகரனைத் தூக்கிப் பிடிப்பதாகச் சொல்கிறார். எந்த வரலாற்றுப் புரிதலும் இல்லாத பேச்சு. சாதாரண மேடை விவாதத்திலேயே தூக்கி எறியப்படக் கூடிய வாதங்கள் வைக்கிறார்.
தமிழ்த் தேசியம் என்கிற இந்திய விரோதப் பார்வையைப் ப்ராம்மணர்கள் கைக்கொள்வது முடியவே முடியாத காரியம். இந்திய தேசியம் இல்லையெனில் இந்தப் ப்ராம்மணர்கள் 1960-1990களில் எங்கு சென்று பிழைத்திருப்பார்கள் என்கிற எளிய கேள்விக்கு இந்த வேட்பாளர்களிடம் பதில் இல்லை. பம்பாயில் மாதுங்கா, டோம்பிவில்லி, சயன், தில்லி, கொல்கொத்தா முதலான இடங்களில் 60-70களில் தமிழ் ப்ராம்மணர்கள் ஏன் குடியேறினார்கள், இந்திய தேசியம் இல்லாதிருந்தால் இவை சாத்தியம் ஆகி இருக்குமா என்கிற கேள்விக்கு இவர்களிடம் பதில் இருக்க வாய்ப்பில்லை.
பல தேர்தல்களில் வேறு வகைகளில் பணம் பெற்று ஓட்டுப் பிளப்பில் வெற்றி கண்ட சீமான், தற்சமயம் ப்ராம்மண ஓட்டைப் பிளந்து திமுகவிற்கு மயிலாப்பூரில் உதவ முனைகிறார் என்பதே என் பார்வை. கமல்ஹாசன் திமுகவில் சரணடைந்தது இவரது மவுசையும் கூட்டியிருக்கிறது.
சீமானின் இந்த முடிவுக்கு எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்திருப்பது சந்தேகத்தை உறுதி செய்கிறது.
மயிலாப்பூரில் உள்ள ப்ராம்மண்ர்கள் அதிமுக / பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். தேசியப் பார்வை பெருக இது மட்டுமே ஒரே வழி.
-ஆமருவி
Leave a comment