
நி: என்ன இப்படிப் பண்ணிட்டீங்க? தேர்தல்ல போட்டி இல்லைன்னு சொல்லிட்டீங்களே..
க: போட்டி இல்லைன்னா என்ன? எங்களுக்குப் போட்டி இல்லை. எங்களோட போட்டி போட ஆள் இல்லை. அதனால போட்டி இல்லை. அவ்வளவுதானே?
நி: அப்படி இல்லைங்க. உங்க கட்சி போட்டி இல்லைன்னா நீங்க போட்டி போடலைன்னு தானே அர்த்தம்?
க: அதெப்படி? போட்டி இல்லை. (1) போட்டி. (2) இல்லை. ஆக போட்டி இல்லை. ஆனா நாங்க போட்டி இல்லைன்னு சொல்ல வழி இல்லைன்னு சொல்லலாம்னு நினைக்கறச்சே…
நி: புரிஞ்சுட்டுதுங்க. விட்டுடுங்க ப்ளீஸ்.
க: அதெப்படி விட முடியும்? போட்டி தான் இல்லை. போட்டியில இல்லைன்னு அர்த்தம் இல்லையே. புரிஞ்சுதா?
நி: தல, புரிஞ்சுட்டுது. நான் கிளம்பறேன்.
க: ரெண்டு விஷயம். புரிஞ்சுட்டுதுன்னு சொன்னீங்க. என்ன புரிஞ்சுதுன்னு சொல்லுங்க. எங்களுக்கும் புரியறதுக்கு உதவியா இருக்கும்.
நி: அப்ப ரெண்டாவது?
க: அதுதான் இது. ரெண்டும் ஒண்ணுதானே? ரெண்டு ஒண்ணு சேர்ந்தாதானே ரெண்டு வரும். இல்லைன்னா ரெண்டும் ஒவ்வொண்ணாவே இருந்துடும் இல்லையா? புரியுதா?
நி: ரொம்ப பாவம்ங்க,
க: யாரைச் சொல்றீங்க?
நி: சி.பி.ராதாகிருஷ்ணன்தான். அஞ்சு வருஷம் அவர் உங்களோட காலம் தள்ளணுமே.
க: அது யாருங்க? எங்கேயோ கேட்ட பேரா இருக்கே.
நி: அதேதாங்க. நீங்க ராஜ்ய சபால பேசினதுலேர்ந்து, அவரும் இதையேதான் சொல்றாராம்…
-ஆமருவி
Leave a comment