நி: உங்க தேர்தல் வாக்குறுதிகள் பற்றி…
உ: பழநிசாமி பத்தி பேசி என் நேரத்தை வீணடிக்க விருப்பம் இல்லை.
நி: அதுல்லங்க… திமுகவோட தேர்தல் வாக்குறுதிகள்…
உ: விஜய் பத்திப் பேச விருப்பம் இல்லை. இது பெரியார் மண்.
நி: கனிமொழி ‘விதவைகள் அதிகம் ஆயிட்டாங்கன்னு’ சொன்னாங்க… டாஸ்மாக் மூடுறது பற்றி…
உ: கச்சத்தீவை மீட்கும் ரகசியம் எங்களுக்குத் தெரியும். ஆனா இப்ப சொல்ல மாட்டோம். முதல் கையெழுத்து அதுதான்.

நி: அண்ணா பல்கலை பாலியல் சீரழிவு பற்றி…
உ: அண்ணா, பெரியார், கலைஞர் – இவங்க வழியில நடக்கிறது தான் திராவிட மாடல். ரெண்டாவது கையெழுத்து அது.
நி: தேர்தல் நேரத்துல ‘சனாதன தர்மம்’ பற்றி கருத்து என்ன?
உ: மேயர் பிரியா கொசுவையெல்லாம் ஒழிச்சுட்டாங்களே. சேகர் பாபு சொன்னாரே. நீங்க கரவொலி படிக்கறதில்லையா?
நி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் விஷயமாக…
உ: பேர மாத்திடலாம். நல்ல குறிச்சின்னு வெச்சா கள்ளச்சாராயம் முடிஞ்சிரும். முதல்வர், தலைவர்கிட்டயே சொல்லிட்டேன்.
நி: சென்னை கார் ரேஸ் விபத்து பற்றி சொல்லுங்க.
உ: துபாய் விவகாரம் எனக்குத் தெரியாது. எனக்கு வேற வேலை இருக்கு.
நி: ஆவின் பால் விலை உயர்வு பத்தி உங்க கருத்து…
உ: பாலியல் பற்றி அந்தந்தத் துறை அமைச்சர் சொல்வார். பாலிடால் விஷயமும் அப்படியே சொல்லிடுவார்.
நி: நீட் விலக்கு பற்றி…
உ: அண்ணாமலை பத்தியெல்லாம் பேச முடியாதுங்க.
நி: என்ன கேள்வி கேட்கிறதுன்னு நீங்களே சொன்னா பரவாயில்லை.
உ: அதுக்குத்தான் PEN நிறுவனம் இருக்கே. அவங்க கேள்விகளை அனுப்பலையா?
நி: சம்பளம் கொஞ்சம் போட்டுக் கொடுத்தா நல்லாயிருக்கும்…
உ: நீங்க பாஜகபி.டீம்னு -னு நினைக்கறேன்.
நி: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை…
உ: அது தான் திராவிட மாடல். நீங்க கேட்க வேண்டிய தேவையே இருக்காது. எல்லாக் கேள்வியும் PEN கேட்கும். அதுதான் எங்க தலைவரோட பாணி.
நி: தலை சுத்திருச்சு. கீழ்ப்பாக்கம் வரை போய்விட்டு வரேன்.
உ: தேவையே இல்லை. சன் டிவியும், கலைஞர் டிவியும் பாருங்க. போதும். கமல் சார் கிட்ட கேளுங்க. புரியற மாதிரி சொல்வார். போட்டியே போடாம போட்டியில இருக்காறே.. அந்த மனசு இருக்கே, அது தான் சார் கடவுள்.
-ஆமருவி
Leave a comment