ந: தமிழ்நாடு தேர்தல் விவகாரத்துல பாஜகவோட நிலை என்னங்க?
அ: சப்கா சாத்; சப்கா விகாஸ். அதிமுக வளரணும், அதிமுகவுக்கு விகாஸ் வேணும்.
ந: நீங்க பாஜக பத்தி சொல்லுவீங்கன்னு பார்த்தா?..
அ: ஆத்மாவும் உடம்பும் ஒண்ணா? இல்லை இல்லையா? அதைப் போல பாஜகங்கிற ஆத்மாவுக்கு அதிமுகங்கிற உடம்பு இருக்கு. அதுதான் சப்கா சாத்; சப்கா விகாஸ்.
ந: இதனால பாஜகவுக்கு என்ன பலன்?
அ: அதிமுக வளருமே. அதுதான் பலன்.

ந: தேர்தல்ல பாஜகவோட வியூகம் என்ன?
அ: அதிமுகவோட வியூகம் தான் எங்களோடதும். ரெண்டும் ஒண்ணுதான்.
ந: தேர்தல்ல அதிமுகவோட வியூகம் என்ன?
அ: அத அவங்களத்தான் கேட்கணும்.
ந: அப்ப பாஜக வளராதே…
அ: அதிமுக வளருமே. ஏதோ ஒன்னு வளருதே. அது போதுமே.
ந: அண்ணாமலை பத்தி… தேர்தல் நக்கறது பத்தி…
அ: நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க.அண்ணாமலைக்குப் போய் தீபம் ஏத்தணும்
ந: அதில்லைங்க…
அ: என்னது? அண்ணாமலையில தீபம் ஏத்தக்கூடாதா? அநியாயம்.
ந: தேர்தல் வியூகம் என்னங்க? புரியலையே.
அ: புரிஞ்சா சொல்ல மாட்டோமா? எடப்பாடி என்னவோ செய்யறார், அது பலன் அளிக்கும்னு நம்பறோம். அவ்வளவு தான் வியூகம்.
ந: 2-ஜி கேஸ் என்ன ஆச்சு?
அ: ரெண்டு கேஸ் சிலிண்டர் எல்லாருக்கும் உண்டு. 2G – 2Gas.
ந: அரவிந்த் கேஜ்ரிவால் கேஸ் என்னங்க இப்படி ஆயிடுச்சு?
அ: இந்தப் பேர எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே… எந்த ஊருக்காரர் அவரு?
ந: சுத்தம்… தேர்தல் தொகுதி ஒதுக்கீடு பாரபட்சமா இருக்கே… அதிமுக ஜெயிக்காத இடங்களா பார்த்து பாஜகவுக்கு கொடுத்திருக்காங்களே..
அ: எங்களுக்கு அதிமுக ஜெயிக்கணும். அதுக்கு எடப்பாடி, அம்மா வழியில ஏதோ பண்றார். அது அவருக்குப் புரியும்னு நினைக்கறோம். எங்களுக்குப் புரிய வேண்டிய தேவை இல்லை.
ந: தமிழக பாஜக உறுப்பினர்களுக்கு உங்க அறிவுரை என்ன?
அ: ஊழல் இல்லாத அம்மா ஆட்சி மலரணும். அதிமுக வெற்றி பெறணும். சாட்டையால அடிக்கறது, பாதயாத்திரை போறதுன்னு நேரத்தை வீணாக்காம, அதிமுக வெற்றிக்கு உழைக்கணும். அதுதான் பாஜக உறுப்பினர்கள் செய்ய வேண்டியது.
ந: ஊழல் இல்லாத அம்மா ஆட்சியா ? கோர்ட் தீர்ப்பு..
அ:கோர்ட் தீர்ப்பு பத்தி நாம கருத்து சொல்லக் கூடாது. அம்மா ஜெயிலுக்குப் போனாங்களா ? இல்ல தானே. அவ்ளோதான். ஊழல் அற்ற அம்மா ஆட்சியை எடப்பாடி ஜி கொடுப்பார்.
ந: புரியலையே..
அ: 2-ஜி கேஸ் புரிஞ்சுதா ? கெஜ்ரிவால் கேஸ் புரிஞ்சுதா ? அதுபோல, எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணக் கூடாது. எங்களுக்குமே புரியல. புரிஞ்சா செல்லமாட்டோமா ?
Leave a comment