நி: நடக்கிறதையெல்லாம் பார்த்தா நீங்க செருப்பே போட முடியாம போயிடும் போல இருக்குங்களே..
அ:பரவாயில்லீங்ணா… எங்கப்பனாத்தா செருப்பு போட்டா வயக்காட்டுல விவசாயம் பார்த்தாங்க?
நி: அது சரிதாங்க. அதைப்போலவே இன்னும் நிறைய சாட்டை வாங்கணும் போலயே… பெண்கள் மீதான வன்முறைகள் குறைய மாட்டேங்குது.
அ: சரியாச் சொன்னீங்கண்ணா… ஏற்கனவே பல சாட்டைகள் வாங்கி வெச்சிருக்கோம்ண்ணா. கட்சிக்கும் இன்னும் பல சாட்டைகள் தேவைப்படுங்ண்ணா.

நி: ஏதோ பூடகமா சொல்றாப்ல இருக்குங்களே…
அ: இதுல பூடகம் எல்லாம் இல்லீண்ணா… நான் போலீஸ்ண்ணா… எதையும் பளிச்னு சொல்லிப் போடுவேன்ண்ணா… சாட்டையால வெச்சு நாலு விளாசு விளாசினாத்தான் கட்சி உருப்படும்ண்ணா.
நி: நீங்க யாரை மனசுல வெச்சுக்கிட்டு இப்படி சொல்றீங்க?
அ: நம்ம மனசுல எப்போதுமே மோதிஜியும் அமித்ஜியும் மட்டுந்தான் இருக்காங்கண்ணா…
நி: தமிழ்நாட்டுப் பொருளாதாரம் எப்படி இருக்குன்னு நினைக்கறீங்க?
அ: தமிழ்நாட்டைப் பத்தி தெரியலீண்ணா… ஆனா குஜராத்துல கூட பொருளாதாரம் பிரமாதமா இருக்குண்ணா… இதுல இந்த ஜிடிபி எடுத்துக்கிட்டீங்கண்ணா… வேகமா வளர்ற நாடுக்கள்ள…
நி: இதாங்க உங்க பிரச்சனை. ஒயிட் பேப்பர் கேட்டா, வெள்ளைத் தாளைக் காண்பிக்கறவனெல்லாம் அமைச்சரா இருக்கிற நாட்டுல, ஜிடிபி பத்தியெல்லாம் பேசினா கட்சியில பதவியா தருவாங்க?
அ: என்னங்க சொல்றீங்க? பெஞ்ச்மார்க் ஜிடிபின்னு சிங்கப்பூர் ஜிடிபியைச் சொல்ல, அதக் கம்பேர் பண்றச்சே இந்தியா எங்க இருக்கு? பிஸ்கல் டெபிசிட் பெஞ்ச்மார்க் இது பத்தியெல்லாம் பேசாம பொருளாதாரம் எப்படீங்க பேசறது?
நி: அடடா… தமிழ்நாட்டு அரசியல் அரிச்சுவடியே புரியலையே உங்களுக்கு… போன ஆட்சியில டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, இந்த ஆட்சியில எவ்வளவு, எத்தனை சதவீகிதம் முன்னேற்றம், எத்தனை புதிய குடிகாரங்களை உருவாக்கியிருக்கோம், எத்தனை விதவைகள் புதுசா உருவானாங்க… இப்படி புள்ளிவிபரம் சொல்லுவீங்கன்னு பார்த்தா…
அ: இது கேவலமான அரசியல் இல்லீங்கண்ணா?
நி: அதுதான் கேட்கிறேன்… இதுக்காகவா ஐ.பி.எஸ். வேலையை விட்டு வந்தீங்க?
Leave a comment