The side that is not spoken about, generally.

நி: தேர்தல் வேலையெல்லாம் எப்படி நடக்குது?

ந: எனக்கென்ன தெரியுங்க? எல்லாம் அண்ணன் பார்த்துக்கறார்.

நி: யாருங்க? உங்கண்ணாவா?

ந: நீங்க வேற. அண்ணன்னாலே ஒரே அண்ணன் தான். அண்ணன், வருங்கால முதல்வர் தலைவர் எடப்பாடியார் தான்.

நி: என்னது? தலைவர்ங்கறீங்க? கட்சி வேற இல்லையா?

ந: கட்சியாவது? தேர்தல் வரையில் அவர்தான் அண்ணன், வழிகாட்டி…

நி: அது சரிங்க. உங்க கட்சி என்ன வியூகம் வெச்சிருக்கீங்க?

ந: அண்ணைத்தான் கேட்கணும். ஏதாவது வெச்சிருப்பார்.

நி: உஸ்… அப்பா… இந்தத் தேர்தல்ல உங்க இலக்கு என்ன?

ந: அண்ணன் சொல்படி நாங்க நடந்து, அண்ணனை முதல் அமைச்சரா ஆக்கணும். அதுதான் இலக்குன்னு அண்ணன் சொன்னார்.

நி: ஒ… சரி. கட்சியில என்னென்ன போராட்டம் முன்னெடுத்திருக்கீங்க?

ந: கூட்டணி தர்மத்தையும், தேர்தல் வியூகக் கட்டுப்பாட்டையும் மீறி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லைங்க.

நி: சார்… பாதகம் இல்லைங்க… உங்க பாஜக கட்சியில என்னென்ன போராட்டங்கள் முன்னெடுத்திருக்கீங்க?

ந: நீங்க வேற… கட்சிக்குள்ளேயே போராட்டம் வேண்டியது இருக்கு. வெளில வேற போராடணுமா என்ன? அதை அண்ணன் பார்த்துப்பார்.

நி: சார்… கெஞ்சி கேட்டுக்கறேன். அண்ணா பல்கலை விவகாரம் போது அண்ணாமலை பெரும் போராட்டம் நடத்தினாரே. பிறகு நீங்க வந்தீங்க. அப்புறம் நாங்குநேரி நடந்துச்சு. கோவை பாலியல் நடந்துச்சு. தினமும் நடக்குது. உங்க தலைமையில கட்சி என்ன போராட்டம் பண்ணினீங்க?

ந: கூட்டணி தர்மத்துக்கு எதிரா பேசுறது எங்க கட்சி வழக்கம் இல்லை.

நி: போனமுறை ‘பாஜகவோடு எப்போதும் கூட்டணி கிடையாது’ அப்டீன்னு எடப்பாடி சொன்னாரே. இப்ப எப்படி?

ந: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி இல்லை. அதிமுகவும் பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில இருக்கு. அவ்வளவுதான். இதில் என்ன வேறுபாட்டைக் கண்டீங்க?

நி: போகட்டும். அண்ணாமலை விவகாரம் பற்றி…?

ந: இப்ப அண்ணாமலை யூனிவர்சிட்டியிலும் பிரச்சனையா? என்னங்க இது…

Leave a comment