நி: தொகுதி ஒதுக்கீடெல்லாம் ஒருவழியா முடிஞ்சுட்டு போல?
தி: ஒதுக்கீடுன்னு சொல்லாதீங்க. உரிமை. தொகுதி உரிமை. முடிந்தது.
நி: அப்ப 8 தொகுதிதான் உரிமை… அப்படித்தானே?
தி: ஒண்ணு குறைச்சுக் கொடுத்தாலும் வாங்கிப்போம். அதுதானே சமூக நீதி?
நி: சமூக நீதியா, நிதியா?
தி: தொகுதி கிடைச்சா, நிதி தானா தருவாங்க. பின்னாலை எம்.எல்.ஏ. ஆனா முன்ன வாங்கின நிதிய வட்டியோட திருப்பித் தந்துடப் போறோம். பொது வாழ்க்கையில நேர்மை வேணும் இல்லியா?

நி: அந்த வேங்கைவயல் விவகாரத்துல…
தி: வேங்கைவயல் விஷயத்துல மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார். எப்பவாவது எடுப்பார்.
நி: கள்ளக்குறிச்சி விவகாரம்…
தி: அங்க ஒண்ணும் விவகாரமே இல்லியே. 48 பேர் போய்ச் சேர்ந்துட்டாங்க. நிதி வழங்கி சமூக நீதிய நிலை நாட்டிட்டாரே தளபதி முதல்வர்.
நி: ஈழத்தமிழர் பிரச்சனைல திமுகவோட உடன்பாடா இருக்கீங்களா?
தி: விடுதலைப் புலி இருந்தவரைக்கும் ஈழத் தமிழர் பிரச்சனைல திமுகவோட எங்களுக்கு உடன்பாடு இல்லை. புலிகள் போனப்புறம் ஈழத் தமிழர் பிரச்சனை இல்லை. அதனால திமுகவோட முரண்பாடு இல்லை. இதுதானே அத்துமீறி அடங்கமறுப்பது.
நி: தமிழ்நாட்டுல விதவைகள் அதிகமாயிட்டாங்கன்னு கனிமொழி சொல்றாங்க. அதுக்கு டாஸ்மாக் காரணம்னும் சொல்றாங்க. இந்த பிரச்சனை பற்றி உங்க நிலைப்பாடு என்ன?
தி: டாஸ்மாக் தான் விதவைகள் எண்ணிக்கைக்குக் காரணம்னு அவங்க சொல்றது உண்மை. அது அதிமுக டாஸ்மாக். நம்ம திமுக டாஸ்மாக் விதவைகளை உருவாக்காது. அப்படியே உருவானாலும் பெரியார் வழியில் மணத் தீர்வு காணலாம். டாஸ்மாக் விதவைகள் வாழ்வுரிமைத் திட்டம் – விதவைகளே இருக்க மாட்டாங்க. இதுதான் சமூக நீதி. டாஸ்மாக் மூட வேணாம். விதவைகளுக்கும் கல்யாணம் ஆகும்.
நி: தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில பங்கு கேட்பீங்களா?
தி: ஆட்சியில எல்லாம் பங்கு அப்புறம் பார்த்துக்கலாம். உட்கார்ற சேர்ல பங்கு கிடைச்சா போதும். இதுதான் எங்க சமூக நீதி.
நி: கவுண்டன வெட்டு; கவுண்டச்சிய கட்டு. இது நீங்க சொன்னதா?
தி: கவுண்ட்-டவுன் ஸ்டார்ட்டு; கவுண்டிங் ஓட்டு – இதான் சொன்னேன். சிக்னல் இல்லாததால உங்க காதுல வேற மாதிரி விழுந்திருச்சு போல…
#satire
Leave a comment