a comma in a sentence – review

விளாக்குடி என்னும் தஞ்சை கிராமத்தைப் பூர்வ்வீகமாகக் கொண்ட வடகலை ஐயங்கார் பரம்பரையின் கதை ‘ a comma in a sentence’ நூல். கோபாலகிருஷ்ணன் என்பவர் எழுதிய இந்த நூல் என் மனதிற்கு இதம் அளிக்கும் வகையில் அமைந்தது.


1800களில் துவங்கும் கதை 2013ல் முடிகிறது. வடகலை ஐயங்கார்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி, கொல்கொத்தாவில் குடி புகுந்து, படிப்படியாக முன்னேறி இறுதியில் ஹிந்துஸ்தான் லீவர் மற்றும் டாடா முழுமங்களின் தலைவராக முடிந்த கதை.


நல்ல ஆங்கிலத்தில் சொல்லப்பட்டுள்ளதால் மனசோர்வின்றி வாசிக்க முடிந்தது. 2-3 நாட்களில் வாசித்துவிடலாம். அடையாறு நூலகத்தில் உள்ளது. அமேஜானிலும் கிடைக்கிறது.


பி.கு.: சென்னைப் புத்தககக் காட்சியில் இந்த நூல் இடம்பெறவில்லை.

மயிலையில் தரையிறங்கும் விண்கலம்

நாளை மாலை மயிலைவாசிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.

நாஸாவில் இருந்து செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட விண்கலம் மயிலை தெற்கு மாட வீதியில், சங்கீதாவிற்கு எதிரில் தரையிறங்கவுள்ளது. செவ்வாய் நோக்கிப் பறந்த விண்கலத்தின் கேமராவில், செவ்வாயின் தரை அமைப்பை ஒத்த தெற்கு மாட வீதி தென்பட்டதால், செவ்வாய் வந்துவிட்டது என்று நினைத்துக் கீழிறங்குகிறதாம்.

இந்த விழாவில் மயிலை எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி விண்கலத்தை வரவேற்கிறார். பூரணகும்ப மரியாதை, நாதஸ்வர மங்கள இசை என்று அமோக வரவேற்பாம். இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏவிய விண்கலத்தை ஒரே நொடியில் கீழே இறக்கிய திறமையைப் பாராட்டி அமெரிக்கன் கான்சுலேட் அதிகாரிகளும் மாலை போட்டுக்கொண்டு வந்து ஆரத்தி எடுக்கிறார்களாம்.

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று முதல்வரும் விண்கலத்துக்குப் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளார் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தாலும் அண்ணாவின் கொள்கைப்படி வரவேற்போம் என்றும் சொல்லியுள்ளார்.

தெற்கு மாட வீதியை இப்படி செவ்வாய் தரை போல் நல்ல வகையில் குண்டும் குழியுமாக ஆக்கி, அவ்வாறே ஒரு வருஷமாக நிலைநிறுத்தி. நமக்கெல்லாம் இந்த நல்ல வாய்ப்பை நல்கிய சென்னை கார்ப்பரேஷனுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.

‘நேரா யோசி’ – வாசிப்பு அனுபவம்

சுதாகர் கஸ்தூரியின் ‘நேரா யோசி’ நூல் சரியான நேரத்தில் வந்துள்ளது. 

உலகம் தன் இயக்கத்தைச் சற்று நிறுத்தி, கொரோனாவினால் நின்று யோசிக்க வேண்டிய நிலையில் மக்களை வைத்துள்ள நேரத்தில் ‘நேரா யோசி’ நல்லதொரு பாதையைக் காட்டுகிறது. 

அறிவியல் புனைவெழுத்தாளரான சுதாகர் மனநல அறிவியலிலும் சிறந்து விளங்குவதை இந்த நூலில் காண முடிகிறது. மனிதன் எவ்வாறு தவறுகள் செய்கிறான்? தவறுகள் நிகழக் காரணங்கள் யாவை? மனம் சரியாக யோசிக்காமல் இருப்பது எதனால்? மனித மூளையில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன? இவற்றுக்கும் நமது அன்றாட வாழ்விற்காக நாம் சிந்தனை செய்வதற்கும் தொடர்புகள் யாவை? இந்தச் சிந்தனைகளைச் செம்மைப் படுத்த வழிகள் யாவை? தோல்விகள் ஏற்படும் காரணங்கள் யாவை? இப்படியான பல கேள்விகளுக்கு இந்த நூலில் விடைகள் உள்ளன. 

நேரா யோசி

அறிவியல், அதிலும் உயிரியல், மூளை, எண்ணங்கள் என்று குழப்புமோ என்கிற கவலைகள் எதுவும் இல்லாமல், தைரியமாகப் பலரும் வாசிக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் மனித மனதின் செயல்திறன்கள், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவது என்று பல அறிவியல்பூர்வமான செய்திகள் எளிதில் வாசிக்கும் நிலையில் சொல்லப்பட்டுள்ளன. 

சுதாகர் கஸ்தூரி காட்டியுள்ள பல சுட்டிகள், எடுத்தாண்டுள்ள அறிவியல் வல்லுனர்களின் கருத்துகள் யாவும், பரபரவென்று இயங்கும் இன்றையக் காலக்கட்ட இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய வழிகாட்டியாக அமையும். 

 மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் ஆசிரியரும் தவறாமல் வாசித்து உள்வாங்க,  ‘நேரா யோசி’ பள்ளி நூலகங்களில் கட்டாயம இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

தினமணி / Pinnacle Publishers.

Drishyams – a review

Drishyam -2, sequel to the super hit Drishyam, a malayalam blockbuster, is a continuation of the the struggles and tirades a peace loving minority community family has to go through in this new India run by fascist forces of the majoritarian kind. 

The films not only portray the daily trials and tribulations of a quiet family and its head, but also the daily terror of having to prejudge every moment of existence so as to protect themselves from the aggressively poised officialdom run by the majority maniacs.

While in Drishyam-1, Mohanlal, as George Kutty, had to go to extremes to safeguard the peace in his family, he continues to do that in the sequel to ensure peace and respect to his family. The extents to which a malayalee christian has to go, not to do something spectacular but only to provide a decent livelihood for his family, speaks volumes about the precarous nature of polity in India that is increasingly becoming intolerant towards the minorities. 

Drishyam-1 came about in 2013.  That the writer, Jithu Joseph, had to come up with a sequel in 2020 paints the picture of India post 2014 – the decisive year when India took a draconian turn towards the right and gave up all pretences of being a secular nation safe for the minorities. 

The depiction of the characters speak for themselves. 

Geetha Prabhakar, an IPS officer, is married to a Mr.Prabkarar, an IAS officer. While the IAS controls the civil society, the police wife, in the form of IPS, instills terror in the minds of the cinema loving and not-so-educated George Kutty. It should be noted that this depiction of the people in power, though done subconsciously, presents the India of today, where  the bureaucracy is held by the same group of people who want to destroy the tranquility that prevails in the lives of the minorities, that too, in a progressive state like Kerala.

The extent to which the IAS-IPS duo go to bring trouble to the  peace loving George Kutty family is seen in the manner of purchase of 2 acres of the latter’s land. By using their financial clout, Mr and Mrs Prabhakar ensure that Saritha and Sabu infiltrate into the serene lives of the Goerge Kuttys. 

The Prabhakars are even able to influence the top rungs of the policy hierarchy (Thomas, Phillip) and use them to seek vengeance on the George Kuttys. A tale of damaging the enemy’s eye with his own hand – a device expertly conceptualised and executed by the vengeful Prabhakars, even when they are out of the police and bureaucratic force. One shudders to think what would have happened if the Prabhakars had been part of the bureaucratic setup.

The majoritarian maniacal side of the Prabhakars manifests itself yet again when it makes Thomas, the Inspector General of Police, to begin digging the local church cemetery, much to the consternation of the local bishop. The Prabhakars wouldn’t rest before they disturb those that are awaiting their day of redemption too.

In Drishyam -1, the eatery owner, Ikka, a kind and elderly muslim man is cheated routinely by Sahadevan, a police man. While Ikka can’t retaliate, Sahadevan continues to harangue the former. In Drishyam -2, Ikka continues to be kind and even provides employment to Raghu, a differently enabled worker. Ikka is so kind that he even advises Jose, a on-time-criminal, to find a new livelihood.

While in Drishyam-1 Rani, George Kutty’s wife is practically illiterate in English, even after six years, she continues to be so in Drishyam -2. This is the true state of the minorities in India. Neither can they progress nor can be be educated. While George Kutty has moved on to become a theatre owner, one should not forget the struggles he should have undergone to come up in life. We also come to know from Rani that George Kutty has had to take huge loans to become what he had become. We also need to understand that Rani had to continue to labour and peel the coconut by hand so that the family could come up in life and send the second daughter to a convent.

To sum it up: Drishyam 1 and its sequel are the microcosm of the current state of affairs in India where minorities live in constant fear of their lives and properties. The two movies are nothing but the personification of the India that the country has become since 2014.

P.S.: I expect to be appointed to the editorial board of either The Hindu or Puthiyathalaimurai. 

tool kit பாவம் பொல்லாதது

என்னதான் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்தாலும், அந்தப் பெண்ணுக்கு 21 வயது தான் ஆகிறது. இந்த வயதில் என்ன தெரியும் அவளுக்கு? குழந்தையைப் போய் இப்படிக் கொடுமைப்படுத்துவதா?

அவள் என்ன JEE எழுதுகிறேன் பேர்வழி என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி 4-5 வருஷங்கள் உழைத்து, IITல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்து, பல கீழ் / மத்திய நடுத்தர இந்தியர்களின் பிள்ளைகளைப் போல் அமெரிக்காவில் கூகுள் கம்பெனியில் வேலைக்குப் போனாளா ?

இல்லை, JEE மார்க் குறைந்ததால் அட்லீஸ்ட் BITSAT எழுதி பிலானி, ஹைதராபத் என்று BITSல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்தாளா? அதுதான் இல்லை, துர்காபூர், குவஹாத்தி என்று NITல் சேர்ந்து, ரொட்டி கொடுமைகளை அனுபவித்து, கடின முயற்சியுடன் உழைத்து, படாத பாடு பட்டுப் படித்து ஸன் மைக்ரோ சிஸ்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாளா?

அதுதான் இல்லை KVPY எழுதி, IISc சேர்ந்து, சோடாபுட்டி கண்ணாடிகளுடன் போட்டி போட்டு, அறிவியல் ஆராய்ச்சி பண்ணினாளா? இல்லை, IISc கிடைக்கவில்லை என்பதால் IISER ல் சேர்ந்து, ஆஸ்டிரோ ஃபிஸிக்ஸ்ல் எம்.எஸ்.சி. வாங்கினாளா? இல்லை, அதைக் கொண்டு இஸ்ரோவில் பணிபுரியும் மற்ற பெண்களைப் போல் வேலைக்குச் சேர்ந்தாளா?

இல்லை, NEET எழுதுகிறேன் என்று பல வருஷங்களைக் காவு கொடுத்து, உயிரைக் கொடுத்துப் படித்து வரும் தையல் தொழிலாளிகளின் மகள்களைப் போல் எம்.பி.பி.எஸ்.ல் சேர்ந்து படித்தாளா? அல்லது, பி.எச்.டி. போன்ற மாபாதகங்களைப் பண்ணினாளா?

ஒன்றும் வேண்டாம். ஒரு Short Service Commission மூலம் ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் நின்றாளா என்ன?கொரோனா காலத்தில் தன் சொந்தக் காசைச் செலவழித்துத் தன் மாணவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துப் பாடம் நடத்திய தமிழ் நாட்டு ஆசிரியையைப் போல் ஏதாவது அக்கிரமம் செய்தாளா?

மேற்சொன்ன எந்தக் குற்றத்தைச் செய்தாள் அந்தப் பெண்? என்னதான் செய்தது அந்தக் குழந்தை?

இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டாள். தேசதுரோகச் செயலுக்கு உதவினாள். இதென்ன குற்றமா? இதே குற்றத்தைத் தொழிலாகவே செய்துவரும் எல்லாரையும் கைது செய்தீர்களா ?

ஒரு கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் போடுகிறது. அதை என்ன செய்தீர்கள்? கையெழுத்து போட்டவர்கள் இன்னும் வெளியில் வந்து வெங்காய சாம்பார் செய்கிறார்கள். என்ன செய்தீர்கள்?

முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களின் படத்தைப் போட்டுக் கொடி பிடித்துத் திரியும் கூட்டத்தை என்ன செய்தீர்கள்? கொடி கூட பரவாயில்லை. டைனோசார் கறி சாப்பிட்டேன் என்று கூறுபவர்களை என்ன செய்ய முடிந்தது?

ரோட்டைப் பிளந்து திருட்டு டெலிஃபோன் ஒயர் பதித்து, திருட்டு டி.வி. நடத்தியவர்களை என்ன செய்தீர்கள்? ஒரு கைது உண்டா? ஒரு விசாரணை உண்டா? வாசன் ஐ கேர் விஷயம் என்னதான் ஆனது?

சம்பந்தப்பட்டவர் டென்னிஸ் ஆடுகிறேன் என்று இங்கிலாந்து போக பாஸ்போர்ட் கேட்கிறார். 2ஜி ஊழல் என்று ஒன்று இருந்ததை இன்று கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத நிலையில் விசாஆஆஆஆஆஆரஆஆஅணை நடக்கிறது, நடந்தது, நடக்கும். அதில் சம்பந்தப்பட்டவர் காவடி எடுப்பது பற்றி உபன்யாசம் செய்கிறார். அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

“ஊருக்கு இளைத்தவள் #toolkit ஆண்டி’ என்று ஏதுமறியாத, மேற்சொன்ன படிப்பு சம்பந்தப்பட்ட எந்தப் பாதகமும் செய்யாத பிஞ்சுக் குழந்தையை, வெறும் 21 வயதே ஆன ஒரு தாய்க்குலத்தை, மாது சிரோமணியை, மகளிர் குல திலகத்தைப் பிடித்து விசாரிக்கிறீர்கள்.

என்னவோ போங்கள். #toolkit பாவம் பொல்லாதது. சொல்லிவிட்டேன்.

பரிணயம் – திரைப் பார்வை

கேரள நம்பூதிரிகளின் சமூகத்தில் ‘ஸ்மார்த்த விசாரம்’ என்று ஒரு கொடுமை இருந்ததை ஜெயமோஹன் தளத்தில் வாசித்திருந்தேன்.

அதைப் பற்றிய கதை ஒன்றைப் ‘பரிணயம்’ (പരിണയം) என்று திரைப்படமாக எழுத்துள்ளார்கள். எம்.டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதை அந்தர்ஜனம் என்னும் நம்பூதிரிப் பெண்களின் காணச்சகிக்க முடியாத கண்றாவியான விதவை வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்துகிறது.

நம்பூதிரிக் கிழவருக்கு நான்காவது தாரமாக இளம் மோஹினி வாழ்க்கைப் படுகிறாள். நம்பூதிரி இறக்க, மோனிகா விதவையாகி, பின்னர் கருவுருகிறாள். கருவிற்குக் காரணம் யாரென்று தெரிந்துகொள்ள நடைபெறும் விசாரணைக்குப் பெயர் ‘ஸ்மார்த்த விசாரம்’.

பெண்ணைத் தனியரையில் அடைத்து ஒரு நம்பூதிரிக் கூட்டம் விசாரிக்கிறது. விசாரணை கொடுமை. அதனினும் கொடுமை, விசாரிக்கிறேன் பேர்வழி என்று வந்த கூட்டம், விருந்து, கேளிக்கை என்று நேரம் கழிப்பது. விசாரிக்கும் நம்பூதிரியாகத் தோன்றும் திலகன் நடிப்பு அபாரம். நெடுமுடி வேணு கேட்கவே வேண்டாம். விடுதலைக்கு முன்பான சமூகச் சூழல், நம்பூதிரி சமூகத்தில் ஏற்படும் ஆரம்ப கட்ட முற்போக்குச் சிந்தனை இயக்கம் பற்றிய குறிப்பும் திரைப்படத்தில் உள்ளது. பிராமணர்களுக்கான ‘ஊட்டுப்புரை’ சங்கதியும் தொட்டுக் காட்டப் படுகிறது.

கதையின் வசன அமைப்பில் சங்கிலித் தொடர் போன்ற ஒட்டு வெளிப்படை. குரியெடத்து தாத்ரியின் ஸ்மார்த்த விசாரம் என்னும் நிகழ்வு புகழ் பெற்றது. தாத்ரியின் தொடர்பில் இருந்தவர்கள் எண்ணில் அடங்காமல் போக, ராஜா அதனை நிறுத்த வேண்டி இருந்தது என்பது வரலாறு. அந்த வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை என்று தோன்றும் விதமாக வசனம் உள்ளது. தாத்ரியின் விஷயத்தில் பல குற்றவாளிகள் வெளிவருவர். மோஹினி தனது கோழைக் காதலனை நிராகரித்து, இறுதியில் அவன் ஏற்ற பாத்திரங்களையே தனது கணவர்களாகக் கூறுவது தாத்ரியின் வழக்குடன் ஒப்பிட வழிகோலுகிறது.தனது காதலனை நிராகரிக்கும் மோஹினி, காந்தியடிகளின் கதராடை இயக்கத்தில் ஈடுபடுவது போல் திரைப்படம் நிறைவுறுகிறது.

பெண்கள் முன்னேற்றத்தில் காந்தியடிகளின் கதராடை இயக்கத்தின் பங்கு தொட்டுக் காட்டப்படுவது நிறைவாக உள்ளது. மனதை வருத்தும் நிகழ்வுகள், கொடுஞ்சொற்கள், பெண்களின் நிலை என்று பல தளங்களில் மனதைப் பாதிக்கும் திரைப்படம் ‘பரிணயம்’.

‘நெய்வேலிக் கதைகள்’ நூல் வெளியீடு

வாசகர்களுக்கு வணக்கம்.


வரும் ஞாயிறு, பிப்-7, இந்திய நேரம் மாலை 6:00 மணி அளவில்  எனது ஐந்தாவது நூல் ‘நெய்வேலிக் கதைகள்’ இணைய வழியில் வெளியீடு காண்கிறது. 


கலைமகள் மாத இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் நூலை வெளியிட்டுப் பேருரையாற்றுகிறார். சில வாசகர்களின் மதிப்புரைகளும் உண்டு. 


தவறாது கலந்துகொண்டு நல்லாசி + ஆதரவு தருக. 


நூல் விற்பனை வருவாய் முழுவதும் ஶ்ரீரங்கத்தில் உள்ள அழகிய மணவாளன் ஆநிரைக் கூடம் என்னும் பசுக் காப்பகத்துக்கும், திருப்பத்தூர் தாலுகா குருசிலாம்பட்டு கிராமம் தயானந்தா பள்ளி மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

இணைய வழியில் பங்கேற்க கூகுள் கூட்டத்தில் சொடுக்கவும் (பிப் 7, அன்று மாலை ஆறு மணிக்கு)https://meet.google.com/rbt-sjrf-pva

நூலை வாங்க, கீழ்க்கண்ட தளங்களைப் பயன்படுத்தலாம்: 

https://notionpress.com/read/neyveli-kathaikal

திருமாங்கல்ய தானம் – நன்றிகள்

திருமாங்கல்ய தானம் பற்றிச் சொல்லியிருந்தேன். தற்போதுவரை விண்ணப்பித்த அனைவருக்கும் தங்கத்திற்கான பணம் சென்று சேர்ந்துவிட்டது.


நான் செய்தது, பயனாளிகளை நண்பர் ஒருவரின் உதவியுடன் கண்டுபிடித்து, அவர்களுடன் பேசி, அவர்களின் தேவையை அறிந்து + உண்மைத்தன்மையையும் உணர்ந்து, அவர்களுக்கு உதவ முன்வந்த வாசகர்களுடன் அவர்களை இணைத்துவிட்டது மட்டுமே.


ஓரிரு வாசகர்கள் தேவைக்கு அதிகமான பணத்தைப் பயனாளிகளுக்கு அனுப்பியுள்ளனர். ‘கல்யாணத் தேவை எதாவது இருக்கும் சார்’ என்கிறார்கள் அந்த வாசகர்கள். மனித உருவில் உள்ள கருணை தெய்வங்கள் இவர்கள். உதவிய அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.


குருவாயூர் செல்வதற்காகச் சென்ற வாரம் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். மேற்சொன்ன லிஸ்டில் இருந்த, உதவி பெற்ற பெண்ணின் தந்தையார் தங்கள் வீட்டிற்கு அழைத்து, மனம் கனிந்து நன்றி தெரிவித்தார். பெண்ணின் கல்யாணப் பத்திரிக்கையை அளித்தார். அந்தப் பெண் நமஸ்கரித்து நன்றி தெரிவித்தாள். மேலும் சில உதவிகள் கேட்டனர். அதற்கும் ஏற்பாடு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.


எவ்வளவோ சம்பாதிக்கிறோம், அன்றாட வாழ்வில் கடந்து உழல்கிறோம், ஃபேஸ்புக்கில் வசவுகள் பொழிந்து போராளி அவதாரங்கள் எடுத்து நடிக்கிறோம். அன்றாடம் அரசியல் அறிஞர்களின் வெற்று நடிப்புகளுக்கு மத்தியில் வாழப் பழக்கிக்கொண்டுவிட்டோம். ஆனால், இவற்றால் ஆத்ம திருப்தி ஏற்படுகிறதா என்றால் சத்தியமாக இல்லை.


ஆனால், திருமாங்கல்ய தானம், ஹரித்துவார மங்கலம் கோவில் விஷயம், தயானந்தா பள்ளி விஷயம் மாதிரியான முயற்சிகள் மனித வாழ்வின் உன்னதமான தருணங்களை அனுபவிக்க அளிக்கின்றன.


வாசகர்கள் / நண்பர்களுக்கும், இந்த நிகழ்வுகளை எனக்களித்த இறைவனுக்கும் நன்றிகள். வேறென்ன சொல்ல..

நெய்வேலிக் கதைகள் – நூல்

எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது. கீழ்க்காணும் தளங்களில் பெறலாம். இதன் மூலம் கிட்டும் வருவாய் ஶ்ரீரங்கம் கோசாலைக்கும், குருசிலாம்பட்டு தயானந்த சரஸ்வதி பள்ளிக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வாசகர்களின் ஆதரவைக் கோருகிறேன். வாசித்துக் கருத்துரையுங்கள்.

https://notionpress.com/read/neyveli-kathaikal

https://www.amazon.in/dp/1637815867