நிதர்சன உண்மைகளை மறந்து, புலி ஆதரவாளர்களின் உந்துதல்களால் தமிழக மாணவர்களை உசுப்பி விட்டு அவர்கள் வெந்து கருகும் தீயில் குளிர் காயும் கருணாநிதியும் ‘தமிழ் ஆர்வலர்கள்’ என்ற போர்வையில் வலம் வரும் விளம்பர அரசியல் வாதிகளும் நம்மை எல்லாம் ஏமாற்றி நமது எதிர்காலத்தைப் பாழடிக்கிறார்கள் என்று தமிழ் நாட்டு மாணவர்கள் உணர வேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுவோம். சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலிற்கு எதிராக உலக நாடுகள் தீர்மானம் கொண்டு வந்த போது தனி நாடான இஸ்ரேல் மீது இவ்வாறு தீர்மானம் கொண்டு வருதல் கூடாது , அது ஐக்கிய நாடுகள் சபை விதிகளுக்கு முரண் என்று அமெரிக்கா கூறியது. இருந்தாலும் அந்த தீர்மானம் நிறைவேறியது. அதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இப்போதும் சில மாதங்கள் முன்னும் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்தது.
இது எதுவும் தெரியாமல் நமது தமிழ் அரசியல் வாதிகளும், ‘ஆர்வலர்கள்’ என்ற போர்வையில் உலவும் அறிவு ஜீவிகளும் ஆட்டு மந்தை போல் மாணவர்களைத் தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்.
ஆனாலும் அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிப்பதால் கம்யுனிசத்தின் பிடியும், சீன மற்றும் இந்திய கம்யுனிஸ்ட்களின் ஆதிக்கமும் இன்னமும் தளரும் என்பதால் இலங்கையை பாதிக்காத வகையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றும் எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி அமைகிறோம்.
இந்த தீர்மானத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன நன்மை விளையும் என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்.