பள்ளி நூலகம் திறப்பு
மந்திரி கையால்
ஆம்
இந்தியா வறுமை நாடு தான்
அறிவாளிகள் பஞ்சம்
——————-
ஆம் இந்தியா வறுமை நாடு தான்
பார்த்தாலே தெரிகிறதே
வறுமை
நடிகையின் உடையில்.
———-
ஆம் இந்தியா வறுமை நாடு தான்
பள்ளி ஆசிரியர்
இரு வேளை இரு வேலை
பள்ளிக்கு வெளியே
எனவே
பள்ளியில் தெரிகிறது
ஆசிரிய வறுமை
எனவே தான்
பள்ளியில் வெறுமை.
———-
ஆம் இந்தியா வறுமை நாடு தான்
நிற்க இடமில்லை
பேச நாழியில்லை
கைமாறும் பணம்
பை மாறும் பொருள்
ஓடும் மக்கள்
நகைக்கடை வாசலில் பிச்சைக்காரன்
———-
ஆம் இந்தியா வறுமை நாடு தான்
பாலம் கட்டி ஆனது பல காலம்
திறப்பு விழா மந்திரிக்கு இல்லை காலம்
இடையே வந்தே சென்றது பல காலம்
முறையே முடிந்தே போனது அதன் காலம்
மறுபடி வந்தார் மந்திரி
அடிக்கல் நாட்டுவிழா – புதுப் பாலம் !
———-
Leave a comment