RSS

எழுத்தாளர் மாலனுடன் ஒரு சந்திப்பு

07 Jul

Image

நேற்று எழுத்தாளர் மாலனுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக மாலனின் “தப்புக்கணக்கு” சிறுகதை இடம் பெற்றுள்ளது. அதைப்பற்றிய ஒரு கலந்துரையாடலுக்காக திரு.மாலன் சிங்கை தேசிய நூலகம் வந்திருந்தார்.

“தப்புக்கணக்கு” கதையை பாலு மகேந்திரா ஒரு குறும்படமாக எடுத்திருந்தார். அது திரையிடப்பட்டது. பின்னர் அது தொடர்பாகவும் இன்ன பிற விஷயங்கள் பற்றியும் பேச்சு நடந்தது. அவற்றின் சாராம்சம் கீழே ( சாராம்சம் என்பது தமிழ் அல்ல என்போர் அதன் தமிழ் வடிவத்தைத் தெரியப்படுத்துங்கள் )

சிங்கப்பூரில் இருந்து சிறந்த, பலதரப்பட்ட தமிழ்க் கதைகள் வருவதில்லை. அதற்கான காரணம் அவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைச் சிக்கல் ஏதும் இல்லை – மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு முதலியன வாழ்க்கையின் ஒரு யதார்த்தமாகவே இருப்பதால் அவை சார்ந்த எந்த ஒரு சிக்கலும் போராட்டமும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கையில் கதை இருப்பதில்லை.

படிப்பு, அதன் மூலம் வேலை, அதன் மூலம் பணம் , அதன் மூலம் வசதியான வீடு என்று படிப்பைப் பணமாக்கும் ஒரு மனப்பான்மையை வளர்த்து இருக்கிறோம். அதனால் தமிழை யாரும் ஒரு கலை  மொழியாகக் காண்பதில்லை. அதில் எழுதுவது குறைந்துள்ளது.

பேச்சு “தப்புக்கணக்கு” பற்றி திரும்பியது. ஒரு தாத்தா பாட்டி தன் பேரன் பேத்திகளிடம் காட்டும் சுதந்திர உணர்வு பெற்றோர்களால் காட்ட முடிவதில்லை என்று திரும்பியது. அதற்ககு மாலன்,” ஒரு COMMITMENT, பொறுப்பு இல்லாமல் இருப்பதனால் இருக்கலாம்”, என்றார். அதாவது குழந்தை தன்னிச்சையாக வளர்வது பெற்றோருக்கு பின்னர் சில சிக்கல்கள் ஏற்படுத்தலாம். அதுவே தாத்தா பாட்டிக்கு இல்லை. குழந்தை நாளை தோற்றால் தாத்தா பொறுப்பேற்கப் போவதில்லை. இந்த விளக்கம் யதார்த்தமாக இருந்தது.

புதிய வார்த்தைகளைத் தமிழில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை. அரிசி என்பதை ஆங்கிலேயர் ‘Rice’ என்று தன்னில் சேர்த்துக்கொண்டார்கள். அதுபோல் கட்டுமரம் போன்றவை. இதனால் ஆங்கிலம் வளர்ந்தது. தமிழும் இப்படி வளர வேண்டும்.

வீட்டிற்கு வேலி அமைக்கலாம். நிலத்திற்கு வெளி அமைக்கலாம். வானத்திற்கு? இந்தோனேஷியப் புகை சிங்கையைத் தாக்கவில்லையா?

பலர் கேள்விகள் எழுப்பிஇருந்தார்கள்.  நான் எழுப்பிய சில கேள்விகள்:

தமிழ் எழுத்தாளர்கள் தொடக்கம் முதல் ஏதாவது ஒரு “ism”, கட்சி சார்ந்தே பேசுகிறார்களே? தனித்துவமாகச் செயல்படுவதில்லையே, ஏன் ?

தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் துவங்கிய உடனேயே மின்னியல் பொறியியல் முதல் அணு ஆராய்ச்சி வரை  எல்லாம்  தெரிந்தது போல் பேசுவது ஏன் ?

“IPL” முதலான தேவையில்லாத விஷயங்கள் பற்றி அங்கலாய்க்கும் தமிழ் நாட்டு ஊடகங்கள், எழுத்தாளர்கள், உத்தரக்காண்ட் பற்றி வாய் திறக்காததேன் ?

தமிழ் நாட்டின் உண்மையான் வரலாறு எப்போது எழு தப்படும்? பல இனக்குழுக்கள் / சாதிக் குழுக்கள் தாங்களே ஆண்ட பரம்பரை என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். ஆகவே உண்மையாக ஆண்டவர்கள் யார்? அந்த வரலாற்றை ‘புதிய தலைமுறை” எழுதலாமே ?

அமைதியான முறையிலும் ஆழமாகவும் பதில் அளித்தார் திரு.மாலன்.

ஆங்கிலத்தில் சொல்வது போல் “அவரது இனம் பெருகட்டும்” ( Let his tribe increase ).

 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: