The side that is not spoken about, generally.

‘போன வருஷமும் இப்பிடித்தான் சொன்னேள் உம்மாச்சி வரப் போறார்னு. நானும் கால்ல மாவு ஒத்தி கிருஷ்ணர் கால் போட்டேன். ஆனால் உம்மாச்சி கண்ணுக்குத் தெரியாமலேயே வந்துட்டுப் போயிட்டார். 

இந்த வருஷமும் இப்பிடித்தான் வருவார். அதுனாலெ பொய் சொல்லாதீங்கோ. நானே கால் வெச்சுடறேன்’, என்று பரத் கிருஷ்ணர் கால் போட்டான். அதாவது அவனது காலை மாவில் வைத்துத் தரையில் வைத்தான்.

Krishna FeetKrishna Appuchchi

பெருமாளும் அவன் கால் வைத்த தடத்திலேயே வந்திருந்து ‘அப்புச்சி’ ( பட்சணம் ) சாப்பிட்டுவிட்டுச் சென்றார்.

இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி நிகழ்வு இது. ஆனால் ஒன்று. வழக்கம் போல இந்த வருஷமும் ஒரு நாள் கழித்து வந்தார் ( வைஷ்ணவ ஸ்ரீஜெயந்தி எப்போதும் ஒரு நாள் கழித்தே வரும் ). ஸ்மார்த்த ஜெயந்தி அன்று சாப்பிட்ட சீடையும், முறுக்கும் ஜீரணமாக வேண்டாமா ? அதுவும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த ஜெட் லாக் ( Let Lag ) வேறு இருக்காதா ?

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

One response

  1. A.P.Raman Avatar
    A.P.Raman

    உண்மைதான். எங்கள் வீட்டுக் கிருஷ்ணன் ஒரு நாள் முன்னதாகவே, இழை கோலங்களுக்கிடையே புகுந்து புறப்பட்டு, தனக்கென வரைந்த காலடிகளில் தவழ்ந்து வந்து எங்கள் அன்பு அர்ச்சனைகளை அள்ளிச் சென்றான்.சீடை,வெல்லச் சீடை, தேன்குழல், தட்டை, பாயசம் பயத்த உருண்டு உள்ளிட்ட நைவேத்யங்களை ஏற்றுத் திரும்பினான்.குழந்தைகளின் கொண்டாட்ட தினம் கோகுலாஷ்டமி!

    Like

Leave a comment