The side that is not spoken about, generally.

apr & MGRசிங்கப்பூர் தமிழ் இலக்கிய சமூகத்தில் இவரைத் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. பல இலக்கிய அமைப்புகள் இடை விடாது நடத்தும் விழக்களுக்குத் தவறாமல் சென்று பாராட்டியும், ஆலோசனை வழங்கியும் தமிழ் இலக்கியத் தரம் உயரப் பாடுபடும் இளைஞர் திரு.ஏ.பி.இராமன் அவர்கள் வெறும் 80 வயதே நிரம்பிய தமிழ் ஆர்வலர்.

எம்.ஜி.ஆர், கண்ணதாசன் முதலானோர் இவரது நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தவர்கள். சிங்கை ஊடகத் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்ற திரு.இராமன், பல நாடகங்களை எழுதி, இயக்கியுள்ளார்.

மாதவி இலக்கிய மன்றம், தமிழ் மொழி பண்பாட்டுக்கழகம், கவி மாலை, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், இலக்கிய வட்டம், வாசகர் வட்டம் என்று அவர் கலந்துகொண்டு ஊக்குவிக்கும் இலக்கிய அமைப்புகள் இன்னும் பல.

கலைமகள், கல்கி என்று பல தமிழகப் பத்திரிக்கைகளுடனும் அவற்றின் ஆசிரியர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர் திரு.ஏ.பி.ஆர்.

சமீபத்தில் சிங்கப்பூரின் சிறப்பான விருதான ‘தமிழவேள்’ விருது வழங்கப்பட்டது.

பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக திரு.ஏ.பி.ஆர். அவர்களுக்கு சிங்கைப் பேச்சாளரும், கம்ப ராமாயண விரிவுரையாளருமான முனைவர் இரத்தின வெங்கடேசன் அவர்கள் தனது அறக்கட்டளையின் சார்பில் புதுவையில் ‘அறவாணர்’ விருது வழங்கி சிறப்பு செய்கிறார்.viruthu

இத்தனை பெரிய மனிதர், நான் எழுதும் பதிவுகளை விடாமல் படித்துப் பின்னூட்டம் வழங்குகிறார். அனைத்தும் விரிவான பதில்கள். ஒற்றை வரிப் பதில்கள் எழுதுவதே சிரமான இந்தக் காலத்தில், இத்தனை வயதிலும் முனைந்து படித்து ஊக்கப்படுத்தும் விதமாகப் பதில்கள் எழுதும் இந்த பீஷ்மாச்சாரியர் மேலும் பல விருதுகள் பெற்று உடல் நலத்துடன் வாழ ஆ.. பக்கங்கள் சார்பில் இறைவனை வேண்டுகிறேன்.

One response

  1. A.P.Raman Avatar
    A.P.Raman

    அன்பான ஆமருவி, உங்கள் சொற்கள் என் வாழ்வை மேலும் நீட்டிக்க உதவும். என்னை மேலும் தொடர்ந்து எழுதத் தூண்டும். அந்தரங்க சுத்தியுடன் சொல்கிறேன்,என்னை வாழ்விப்பது, இந்தச் சொற்கள் தாம். நன்றி அன்பரே!

    Liked by 1 person

Leave a comment