1974ல் சுஜாதா எழுதிய ‘காணிக்கை’ சிறுகதை மனதின் ஆழத்தில் புதைந்து போன ஒன்று. அவ்வப்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும். சில நேரங்களில் பெரும் கோபத்தை உண்டு பண்ணி, நாவின் சொற்சூட்டை அதிகரிக்கும். அச்சமயத்தில் ஏதாவது எழுதினால் சொற்கள் கடுமையாக வந்து விழுவதும் உண்டு.
அறச் சீற்றம் , இயலாமையினால் ஏற்பட்ட கழிவிரக்கத்தினால் உண்டான சூடு என்று இன்னதென்று வகைப்படுத்தப்பட முடியாத உணர்வு என்று சில சமயங்களில் தோன்றும். அந்தக் கதை நினைவிற்கு வரும்பொதெல்லாம் ( பெயர் நினைவில் இராது), இதே மாதிரியான உணர்வுகள் தோன்றுவதும், தற்காலத்தில் அவ்வளவு மோசம் இல்லை என்கிற நினைவும் வந்து சமன்படுத்துவதும் உண்டு.
இன்று நூலகத்தில் அக்கதையை எதேச்சையாகப் படித்தேன். மீண்டும் அதே நினைவுகள். மனம் ஒரு நிலையில் இல்லை. தற்காலத் தமிழகத்தின் நிதர்சனம் ஏற்படுத்தியிருக்கும் மனதின் வலியும் சேர்ந்துகொண்டு, 1974ல் இக்கதை எழுதும் போது சுஜாதா கொண்டிருந்திருக்கக் கூடிய மன நிலையை என்னுள் உண்டாக்கின.
70-களில் பிராம்மண சமூகம் இருந்த நிலை, பிரபந்தம் படித்து, வைதீகத்திலும் சோபிக்க முடியாத நிலையில், சமூகத்தின் பொருளியல் அழுத்தங்கள் ஏற்படுத்தும் வாழ்வின் நிதர்ஸனக் கசப்புகள், கோவிலை மையமாகக் கொண்ட வாழ்வில் பொருளியல் சமாளிப்புக்களுக்காகச் செய்யவேண்டிய குரங்கு வேலைகள் என்று அன்றைய வாழ்வைப் படம்பிடித்திருப்பார் சுஜாதா.
முத்தாய்ப்பாக, அபாரமான தொடர்புகொண்ட பாசுரம். அத்துடன் கதை முடியும். தனது மனப் பாரத்தைப் பாசுரத்தின் வழியே இறக்கி வைத்திருப்பார் கதை சொல்லி. ஆனால் நம் மனதில் அந்த பாரம் ஏறிக்கொள்ளும். இறக்கி வைப்பது கடினமே.
படித்துப் பாருங்கள். ‘ஸ்ரீரங்கத்துக் கதைகள்’ தொகுப்பில் முதல் கதை – ‘காணிக்கை’.
Dear sir, Please read Ayodhya mandapam (attached) – another gem from Sujatha Murugan Do inform me of any lecture in Chennai or Neyveli on பà®à¯à®¤à®¿ à®à®²à®à¯à®à®¿à®¯à®®à¯. Would love to attend. (Singapore is too far away!)Â
LikeLike