இராமானுசர் கட்டிய சோழங்க நல்லூர் வேணுகோபாலன் கோவிலின் அவல நிலையைப் பற்றி செப்டம்பர் 2, 2018 அன்று இங்கே எழுதியிருந்தேன். என் உடன் பணியாற்றும் பாலாஜி, Pracharam.in மூலம் பல ஶ்ரீவைஷ்ணவ கைங்கர்யங்கள் செய்துவரும் ஶ்ரீமான் வீரராகவன், இன்னும் பல தொண்டர்கள் மூலம் நேற்று ஶ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடை பெற்றது. கோவிலும் விரைவில் புனருத்தாரணம் செய்யப்பட இருக்கிறது.
இத்தொண்டில் பங்கேற்ற அடியார்கள், அடியேன் எழுதியதைப் பரப்பி, அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்த வாசகர்கள் எல்லாருக்கும் சிரம் தாழ்ந்த கைகூப்பு.
ஏதோ நாம் செய்கிறோம் என்று நினைக்க வழியில்லை. அவன் நடத்திக் கொள்ள நினைத்தான். ஒரு அணில் போல் நான் பயன்பட்டேன். ஜாம்பவான், அனுமன், இலக்குவன் என்பது போல் பாலாஜி, வீரராகவன் முதலானோர் பயன்பட்டனர். இல்லை. அவன் அப்படிப் பயன்படுத்திக் கொண்டான். அவ்வளவுதான்.
வாசகர்களுக்குச் சில படங்கள். முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள். கண்ணனின் அருளுடன் உடையவரின் கருணையையும் பெற்று வரலாம்.
கோவில் தொடர்பான உதவிகள் செய்ய விழைவோர் ஶ்ரீமான் பாலாஜியைத் தொடர்புகொள்ளவும். வீரராகவன் சம்பத்தைத் தொடர்பு கொண்டு அவரது பிரச்சாரப் பணிகளுக்கும் உதவலாம். (+91 9655219245).
வீரராகவன் பற்றி முன்னர் நான் எழுதிய பதிவு இங்கே.
உரியடி தொடர்பான சில படங்கள்.