‘தமிழகத்தை நான் தான் தூக்கி நிறுத்தினேன், எங்கள் கட்சி தான் நிறுத்தியது’ என்று பலரும் கதைக்கக் கேட்டிருக்கலாம். ஆனால் உண்மையில் தமிழகத்தில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணமானவர்களில் முதலாமவர் காமராஜர். இரண்டாமவர் மறைந்த ஜனாதிபதி வெங்கட்ராமன்.
‘எப்ப வருவாரோ?’ என்று கேட்கவைக்கும் மாமனிதர் வெங்கட்ராமன். இன்று தமிழகத்தில் SIPCOT தொழிற்பேட்டைகள் இயங்கக் காரணமானவர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகுமின் நிறுவனம், ராணிப்பேட்டை தொழில் பூங்கா, திருச்சி ராணுவத தளவாடத் தொழிற்சாலை என்று பலவற்றையும் நிறுவக் காரணமாக இருந்தவர் என்று அறிகிறோம். 1957-67 தமிழகத்தைல் தொழில், மின்சாரம், உழைப்பாளர் நலன், போக்குவரத்து மற்றும் வணிகவரித்துறை அமைச்சராகத் திகழ்ந்துள்ளார்.
அப்துல் கலாமை விண்வெளி நிறுவனத்தில் இருந்து ஏவுகணைப் பிரிவிற்கு மாற்றக் காரணமாக இருந்தார். அதன் மூலம் அக்னி முதலிய ஏவுகணைகளை பாரதம் ஏவியது நினைவில் இருக்கலாம்.
பின்னர் மத்திய அரசில் திட்டமிடல் துறை உறுப்பினராக இருந்தவர், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மத்திய நிதி மந்திரியானர். பின்னர் ஜனாதிபதியானார். அவர் பதவி ஓய்வு பெற்றுத் தமிழகம் திரும்பிய போது அவருக்கு அன்றைய தமிழக அரசு தனி பங்களாவை ஒதுக்கியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிராமணர் அதனால் வெங்கட்ராமன் என்றொரு பிராமணருக்குத் தனி பங்களா ஒதுக்குகிறார் என்று சொல்லி அதனைத் திராவிடர் கழகம் எதிர்த்துப் பகுத்தறிவைக் காட்டிக் கொண்டது.
ஆர்.வெங்கட்ராமன் தமிழகத் தொழில் துறைக்கு வந்த கதையை அவரே விவரிக்கிறார். அவரது 104வது பிறந்த நாளில் 15 மணித்துகளுக்கான அவரது நேர்காணலைக் காண்போம்.