வைதீகர்கள் / உபாத்யாயர்கள் சமூகத்திற்கு வந்தனம். தெண்டன் சமர்ப்பித்த விஞ்ஞாபனம்.
இப்போதாவது மாஸ்க் அணியுங்கள், கழுத்திற்கு அல்ல, வாய் மற்றும் மூக்கிற்கு. பண்ணி வைக்கப் போகும் இடங்களில் ( போகாமல் இருப்பதே நலம்), யார் என்ன சொன்னாலும் மாஸ்க் கழற்றாதீர்கள்.
யாராவது ரொம்ப அருகில் வந்து பேசினால் விலகியிருங்கள். முடிந்தவரை ஒன்றரை அடி தூரத்தில் அமர்ந்து பண்ணி வையுங்கள். முடிந்தால் அந்த வீடுகளில் உணவு அருந்த வேண்டாம். நீர், மோர் முதலியனவற்றை வீட்டில் இருந்தே கொண்டு செல்லுங்கள்.
முடிந்தவரை மொட்டை மாடியில் பண்ணிவையுங்கள். சிராத்தமாக இருந்தாலும் கூட. முடிந்தவரை ஆம ஸ்ராத்தம் செய்யுங்கள். தக்ஷிணை கொஞ்சம் கூட கேட்டுக் கொள்ளுங்கள்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட / வருமானம் தேவை உள்ள ரிடையர் ஆன பலர் ஸ்ராத்தங்களில் சாப்பிடச் செல்கிறார்கள். ஆம ஸ்ராத்தத்தினால் இவர்கள் பிழைப்பில் மண் தான். ஆகவே நீங்கள் இவர்களுக்கும் சேர்த்து 200, 300 வாங்கிக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கலாம்.
பைக்கில் செல்லும் போது உடல் முழுவதும் மூடியிருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 16-30 வயது வ்ரை உள்ள பல டூவீலர் பைத்தியங்கள் எச்சில் துப்புகின்றன. ஆகவே ஹெல்மட் போடுவது அவசியம், கண்ணாடி வைத்த ஹெல்மட்.அவசியம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
கர்த்தாக்கள் கவனத்திற்கு : தக்ஷிணைகளில் மீனமேஷம் வேண்டாம். இப்போது கொஞ்சம் தாராளமாகக் கொடுங்கள். பின்னால் தானே வந்து சேரும். முடிந்தவரை ஆன்லைனில் கர்மாக்கள் செய்ய வழி உண்டா என்று பாருங்கள். வாத்யாரின் உயிருக்கு உபத்திரவம் இல்லாமல்.
சமீபத்தில் காலமான ஒரு உபாத்யாயரின் நினைவில் இதை எழுதியுள்ளேன்.
வாசக தோஷ: க்ஷந்தவ்ய:
அடியேன்ஆமருவி.
Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply