‘தலைவரே, பெண் ஓதுவார் நியமிச்சது பத்தி அதிகம் பேச வேண்டாம்.’
‘ஏன்? ஆட்சியோட சாதனை இல்லையா அது?’
‘2007 லேயே அங்கயற்கண்ணின்னு ஒரு பெண் ஓதுவாரா நியமனம் ஆகியிருக்காங்க. அதால இது முதல் நியமனம் இல்ல’
‘பெண்களுக்கு அங்கீகாரம் கொடுத்த தலைவர்னாவது சொல்லுவீங்களா?’
‘அதும் கஷ்டம் தான். 9ம் நூற்றாண்டுல ஆண்டாள்னு ஒரு பொண்ணு பாசுரமெல்லாம் பாடியிருக்கு. நம்ம கவி ஒலிபெருக்கி கூட ஒளறினாரே, அதே பொண்ணுதான். அதுக்கு முன்னால திருநீலகண்ட யாழ்ப்பாணரோட சேர்ந்து மதங்க சூளாமணியார்னு ஒரு அம்மா முதல் முதல்ல ஓதுவரா இருந்திருக்காங்களாம்’
‘இதெல்லாம் நமக்குத் தெரியாம போச்சே, ஏன்யா?’
‘அதுக்கெல்லாம் பள்ளியோடம் போயி படிச்சிருக்கணும் தலைவரே’ ‘படிச்ச வரைக்கும் கூட இதெல்லாம் புஸ்தகத்துல வரல்லியே?’
‘ பாடபுஸ்தகம் போடறதுக்கு யார நியமிச்சோம்னு பார்த்தா புரியுமுங்க.’
‘இன்னும் விவகாரமான கேள்வி எதாவது வருமா?’
‘ஆமாமுங்க. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்னு சொல்ற அரசாங்கம், அனைவரும் ஆதீனகரத்தராகலாம்னு சொல்ல முடியுமான்னு கேட்டா மாட்டிக்கிட்டோமுங்க. வேளாளர் சமுதாயத்த எதிர்க்க முடியாதுங்க. அதோட, அனைவரும் பாதியாராகலாம், பெண்களும் பாதிரியாராகலாம்னு சொல்ல முடியுமான்னும் கேப்பாங்க’
‘என்னய்யா பயமுறுத்துறே?’
‘இது மட்டும் இல்லீங்க. பெண்கள் முன்ணேற்றம்னு நாம பேசவே முடியாதுங்க’
‘ஏன்யா இப்பிடி குண்டத் தூக்கிப் போடற?’
‘முத்தலாக் நீக்கல் சட்டத்தை எதிர்த்து நாமதாங்க வாக்களிச்சோம். பெண் உரிமைக்காகவே வ்யிர் வாழற நம்ம அக்கா கூட அதிமுக ஓட்டெடுப்புல இருந்து விலகினது அவமானகரமானதுன்னு பேசியிருக்காங்க’
‘புரியலையே, கொஞ்சம் விளக்கமா சொல்லுப்பா’
‘முத்தலாக் நீக்கல் சட்டம் பாஜக கொண்டு வந்தது. உண்மையான பெண் உரிமைவாதின்னா நாம ஆதரிச்சு வாக்களிச்சிருக்கணும். ஆனா, எப்பவும் போல, பாஜக கொண்டுவந்தா எதிர்க்கணும்கற பகுத்தறிவுக் கொள்ளையால எதிர்த்தோம்.’
‘அடடா, தெரியாம போச்சே. இப்ப இதப்பத்தியெல்லாம் கேள்வி கேட்டா என்னையா பண்றது?’
‘கவலைப்படாதீங்க. மத்தியானம் சாப்பாடு உண்டுன்னு திடலுக்கு சொல்லிவிட்டாச்சு. சாப்பாட்டுக்குப் பொறவு அவங்க பேசிப்பாங்க”அது சரி. ஊடகம் கேள்வி கேப்பாங்களே’
‘இதென்ன தேசிய ஆங்கில ஊடகம்னு நினைச்சீங்களா? இவங்க கேக்க மாட்டாங்க. சாப்பாட்டுக்கு முதல் பந்திக்கு வர்றதே அவங்கதான்’