The side that is not spoken about, generally.

ஓர் நற்செய்தி.

பாபுராயன் பேட்டை விஜய வரதராஜர் கோவில் புனரமைப்புத் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

2021ல் தீபாவளி அன்று அந்தப் பாழடைந்த வளாகத்தில் இருந்து காணொளி வெளியிட்டேன். பின்னர் ஹிந்துவில் எழுதினேன். அதன் பின்னர் மூன்று முறை தன்னார்வலர்களுடன் சேர்ந்து உழவாரப்பணி. 

இதற்கிடையில் தமிழக அரசின் கோவில் அறிவுறுத்தல் குழு உறுப்பினர் திரு.ராமசுப்பிரமணியன் அவர்கள் மூலம் அரசிற்கு அறிக்கை அளித்தல். 
அதன் பின்னர் கட்டமைப்பு அறிஞர்களுடன் சென்று பாழ்பட்ட கோவிலை அளவிடல் மற்றும் அறிக்கை தயாரிப்பில் தொடர்ந்து அவர்களுடன் உரையாடலில் இருத்தல் என்று சென்ற ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன. 

சில மாதங்களுக்கு முன்னர் அரசு மீள் அளவிடல் செய்ய உத்தரவிட்டது. 

தற்போது அளவிடல் அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இனி மேற்கொண்டு புனரமைப்புப் பணிகளுக்கான பூர்வாங்க வேலைகளைத் துவங்க வேண்டும். 

இந்த முயற்சியில் என்னுடன் பயணித்த நண்பர்கள் பாலாஜி, கண்ணன், பிரசன்னா மற்றும் உழவாரப்பணிக்குத் தலைமை தாங்கி நடத்திய ராமஜெயம் மற்றும் ஆலோசனை வழங்கிய மீனாட்சிசுந்தரம், அரசிடம் கொண்டுசென்று வலியுறுத்திய பெரியவர் திரு.ராமசுப்பிரமணியன், என் கட்டுரையை வெளியிட்ட ஹிந்து நாளிதழ் மற்றும் நண்பர்கள், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், தன்னலமின்றி உழைத்துள்ள அற நிலையத் துறை அலுவலர் பூபதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 

வாதன் மனம் வைத்துவிட்டான். கோவில் பணியில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

One response

  1. பாபுராயன் பேட்டை கோவில் – முற்றும் – Amaruvi's Aphorisms Avatar

    […] 2023ல் வந்த ஒப்புதல் பற்றிய கட்டுரை […]

    Like

Leave a comment