ஶ்ரீரங்கம் ரங்கனாதர் கோவிலில் உள்ள ராமானுஜர் சன்னிதியின் முன் ஹரிப்ரியா என்கிற ஸ்தலத்தார் தாமரைக் கோலம் போட்டுள்ளார். இதனை இந்து அறம் நிலையாத் துறை அதிகார் அழித்துள்ளார். காரணம்: தாமரை பா.ஜ.க.வின் சின்னமாம். ஆதாரம்: 29-7-2023 தினமலர் நாளிதழ்.
சுய / சொந்த புத்தி இல்லாத தற்குறிகளை மட்டுமே வேலைக்கு வைப்பது அறம் நிலையாத் துறையின் கொள்கை என்றால் ஆஸ்திகர்களுக்கு ஆட்சேபனை இல்லை.
துறைக்குச் சில கேள்விகள் :
- தாயார் திருக்கையில் தாமரை மொட்டு உள்ளது. அதை என்ன செய்வது ?
- பெருமாள் அபயஹஸ்தம் ‘கை’ சின்னம் போல் உள்ளதே. ஆகவே அபயஹஸ்தத்தையும் மூடி விடுவீர்களா ?
- தேரழுந்தூரில் உற்சவர் அருகில் மாடு, கன்று உள்ளது. பழைய காங்கிரஸ் சின்னம் என்று அதை நீக்கிவிடுவீர்களா ?
- ஶ்ரீரங்கத்தில் கோவிலில் யானை உள்ளது. பஹுஜன் சமா கட்சியின் சின்னம் என்று அதையும் காட்டில் விட்டு விடுவீர்களா ? பழனிவேல் ராஜன் மதுரை யானைக்கு நீச்சல் குளம் கட்டிக் கொடுத்துள்ளார். கோபித்துக்கொள்வார்.
- சிவன் கோவில்களில் பெருமான் முன்னர் நந்தி தேவர் ( காளை ) அமர்ந்துள்ளார். இரட்டைக் காளை என்பது பழைய காங்கிரஸ் சின்னம். நீக்கிவிடலாமா ?
- கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் அருவாள் சுத்தியல். கருப்பு சாமியைத் தமிழர்கள் அருவாள் வடிவிலேயே வழிபடுகின்றனர். அதையும் தடை செய்து விடலாமா ?
- பெருமாள் கோவில்களில் துளசி தளம் பிரசாதமாகத் தருகிறார்கள். பல நேரங்களில் அது இரட்டை இலை போல் உள்ளது. தடை செய்துவிடலாமா ?
- ஜன சங்கத்தின் சின்னம் தீப விளக்கு. ஆகவே, கோவில்களில் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிடலாமா ?
- லோக் தளம் கட்சியின் சின்னம் மூக்கண்ணாடி. ஆகவே, மூக்குக் கண்ணாடி அணிந்த யாரும் கோவிலுக்கு வரக்கூடாது என்று சட்டம் போடுவீர்களா?
- சமாஜ்வாதிக் கட்சியின் சின்னம் சைக்கிள். கோவில் வாசலில் யாரும் சைக்கிள் விடக்கூடாது என்றும் சொல்வீர்களோ ?
- ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் துடைப்பம். ஆகவே, கோவிலுக்குள் துடைப்பம் கொண்டு பெருக்கக் கூடது என்றும் உத்தரவாகுமோ உங்கள் #திராவிடமாடல் ஆட்சியில் ?
- ‘கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்’ என்பது திருப்பள்ளி எழுச்சிப் பாசுரம். சிகரம் அருகில் உள்ள சூரியன் பற்றி வருகிறது. ஆகவே, திமுக சின்னம் உதயசூரியன் போல் உள்ளதால், திருப்பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடத் தடை வருமோ ?
- கோவில்களில் பெருமாளுக்கு மாம்பழம் நைவேத்யம் செய்யலாமா ? பாமக சின்னம் அதுவல்லவா ?
அறம் நிலையாத் துறை மேற்சொன்ன கேள்விகளுக்கும் விடை அளித்தால் சௌகர்யமாக இருக்கும்.
Leave a comment