தேசியச் சிந்தனைகளை வளர்க்கும் ஆராய்ச்சி நூல்களின் நிலையைச் சுட்டவே எழுதுகிறேன்.



‘பாரதிக்குத் தடை’ நூலை ஜூன் 2013 அன்று யாரோ எடுத்துள்ளார். பின்னர் நான்கு பேர் எடுத்துள்ளனர். கடைசி இரண்டும் தேதிகளும் நான் எழுத்தது.
‘வீரமுரசு சுப்பிரமணிய சிவா’ நூலை முதலில் ஒருவர் ஏப்ரல் 2008ல் எடுத்துள்ளார். பின்னர் இரண்டே இரண்டு முறை எடுத்துள்ளனர். கடசி இரண்டும் என்னுடையது.
தேசிய உணர்வாளர்கள் அரசு நூலகம் சென்று நூல்களைக் கடன் வாங்கி வாசித்தால் மட்டுமே அரசு இவ்வகையிலான நூல்களில் நாட்டம் கொள்ளும். நமக்கென்ன, மோதி / அண்ணாமலை / காமராஜர் / காந்தி / நேருவைப் புகழ்ந்து ஒரு வரி எழுதிவிட்டால் தேசியத்தை வளர்ப்பதில் நமது பங்கை ஆற்றிவிட்டோம் என்கிற எண்ணத்தில் கடந்து சென்றால் அடுத்த தலைமுறைக்கு இம்மாதிரியான நூல்களைக் கடத்தாத பெரும் பாவம் நம்மை வந்து சேரும்.
இவ்வகையிலான தேசிய நூல்கள் வழக்கொழிந்தால், பாரதத்தின் ஒருமைப்பாடு கேள்விக்கு உரியதாகிவிடும். இப்பொழுதே நூலகங்களில் வாங்கப்படும் சஞ்சிகைகளில் பெரும்பாலும் பிரிவினை / இடதுசாரி / திக கோஷ்டிகளின் கைவரிசை தெரிகிறது.
எந்த நூலகத்திலாவது விஜயபாரதம் உள்ளதா ? ஆனால், முரசொலி தவறாமல் உள்ளது. தவிரவும் பல வகைகளில் எழுதப்படும் மார்க்ஸீய பத்திரிக்கைகள், புதிய பெயர்களில் உலா வரும் சிறுபான்மைப் பத்திரிக்கைகள் இவை மட்டுமே. நூலகத்தில் அல்லாமல் இந்தப் பத்திரிக்கைகளை வேறெங்கும் பார்க்கவும் முடியாது. வேடிக்கை என்னவென்றால் விடுதலை பத்திரிக்கை + ஆங்கில மொழியாக்கத்தில் Modern Rationalist.
நூல்களை எடுத்துக்கொண்டால் இவர் பார்வையில் அண்ணா, அண்ணா பார்வையில் தம்பி, தம்பி பார்வையில் தேசம், தம்பி வளர்த்த தமிழ், தம்பியின் சட்டசபைப் பேச்சுகள் என்று அதிலும் பல பிரதிகள்.
முத்துராமலிங்கத் தேவர் பற்றிய எதாவது இருக்கிறதா என்று ஒரு மணி நேரம் தேடினால் ஒன்றிரண்டு அரத்தப் பழசான கிழிந்த காப்பிகள் கிட்டலாம். சத்தியமூர்த்தி என்று ஒருவர் இருந்த மாதிரியே தெரியாது. ஒரு புஸ்தகம் கண்ணில் படுவதில்லை. வீர வாஞ்சி, வ.வே.சு., வேண்டாம் சார் கப்பலோட்டிய தமிழனின் நூல்கள் கொட்டிக் கிடக்க வேண்டுமா இல்லையா ? கருவேப்பிலை மாதிரி ஏதோ ஒன்று கிட்டலாம்.
ஜீவா பற்றி மொண்ணையான நூல்களே உள்ளன. பாரதியாரை மீட்டெடுத்த பெரியார் அல்லவா அவர் ? திமுக, அதிமுகவை விடுங்கள். 67 வரை காங்கிரஸ் என்ன கிழித்தது என்றும் கோபம் வருகிறது.
போகட்டும். கம்யூனிஸ்டு தலைவர் நம்பூதிரிப்பாடு, தமிழகத்தில் ராமமூர்த்தி முதலிய பெரியவர்கள் என்ன செய்தார்கள் ? அவர்கள் வாழவே இல்லையா ? அவர்கள் ஒரு பயிரை பிடுங்கவில்லையா ?
ராஜாஜியும் ராமமூர்த்தியும் சட்டசபையில் பேசிக்கொள்ளவே இல்லையா? அதெல்லாம் நம் பொற்காலங்களே இல்லையா ?
தமிழ் நாட்டில் அரசாங்கமே 67ல் தான் துவங்கியதா ? அதற்கு முன் நீதிக் கட்சி மட்டும் தான் இருந்ததா ?
நூலகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது.
என்ன செய்யலாம் ?
வாரம் ஒரு முறை உங்கள் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு நூலகம் செல்லுங்கள். அங்குள்ள நூல்களை எடுத்து வாசியுங்கள். மேற்சொன்ன நூல்கள் மட்டுமே இருப்பின், கேள்வி கேளுங்கள். உதா: தரம்பால் எழுதிய அழகிய மரம் எங்கே ? நூலகத்தில் ஏன் இல்லை ? புகார்ப்பெட்டி இருப்பின் எழுதிப் போடுங்கள். தகவல் அறியும் சட்டத்தின் உதவியுடன் அரசை நேரடியாகக் கேள்வி கேட்கலாம். கேட்டு என்ன நடக்கப் போகிறது என்பதில்லை பிரச்னை. பலர் கேட்டால் அடுத்த முறை நூல்கள் வாங்கும் போது சற்று சிந்திப்பார்கள்.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் உங்கள் பிள்ளைகள் நூலகம் சென்றால் – ‘எழுத்தறிவித்தவன் தம்பி ஆகும்’ என்று சொல்லாமல் இருக்க வேண்டுமெனில், கொஞ்சம் விழித்தெழுங்கள்.
வாரம் ஒருமுறை நூலகம் செல்வேன் என்பவர்கள் பின்னூட்டத்தில் ஒரு வரி எழுதுங்கள். இதனைப் பகிருங்கள்.
வேத முடையதிந்த நாடு, – நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் – இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
Leave a reply to mukhilvannan Cancel reply