போலி முற்போக்கு எனில் வேறு பக்கம் பாருங்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை உள்ளவர்கள் மேலே வாசிக்கலாம்.
வடகலை ஐயங்கார் கதை:
ரம்யாவிற்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன் நிச்சயம் ஆனது. பெற்றோர் பார்த்துச் செய்தது. பையன், பி.டெக், எம்.எஸ். அமெரிக்காவில் வேலை. நிச்சயம் ஆனது முதல் தினமும் பையனுடன் பேசி வந்தாள்.
இருவீட்டாரும் இணைந்து கல்யாண வேலைகளில் ஈடுபட்டனர். கல்யாண சத்திரம் முதல், பரிஜாரகன் வரையில் எல்லாம் தயார். பெண்ணே முனைந்து எல்லாக் காரியங்களையும் செய்தாள்.
பையன் சென்னையில் வந்து இறங்கினான். பெண்ணே நேரில் சென்று வரவேற்றாள். இரு குடும்பமும் கூறைப் புடவை முதற்கொண்டு சேர்ந்து வாங்கியது.
கல்யாணம் நடக்கவில்லை. திடீரென்று பெண் தான் வேறு ஒருவனை விரும்புவதாகத் தெரிவித்தாள். பையன் பேசிப்பார்த்தான். ரம்யா சொல்வது : No. I am not interested.
எங்கு தவறு ? நிச்சயம் ஆன பின் 8 மாதம் கழித்துக் கல்யாணம் என்றதா ? நிச்சயமாக உண்மைக் காரணம் இரு வீட்டாருக்குமே தெரியவில்லை.
தென்கலை ஐயங்கார் கதை:
புரோகிதம் செய்யும் தன் மாமாவையே திருமணம் செய்துகொள்வேன் என்றாள் சுமதி. மாமாவிற்கு 35 வயது. நல்ல வசதி. ஆனால் திருமணம் ஆகவில்லை. மருமாள் 18 வயது கூட நிரம்பவில்லை.
வயசு வித்தியாசம் ரொம்ப இருக்கு. இது சரியா வராது என்றார் மாமா. பெண் கேட்கவில்லை. அடம் பிடித்தது.
நீ மொதல்ல படி. காலேஜ் போ. அப்பறம் நிதானமா பேசிக்கலாம். இப்போ ஒண்ணும் பேச வேண்டாம் என்றார் தாய் மாமா.
பெண் கல்லூரிக்குச் சென்றாள். ஒரு நாள் மாலை மாமாவைப் பார்க்க வந்தவள் சொன்னது :
‘நான் ஒரு பையன விரும்பறேன். அவன் பேரும் உன் பேரும் ஒண்ணுதான். அதனாலதான் நான் உன்னை விரும்பறதா சொன்னேன். இப்ப இப்பிடியே இருக்கட்டும். நீ வெளில சொல்லாத. நான் அவனக் கல்யாணம் பண்ணிண்ட அப்பறம் சொல்லிக்கலாம். அதுவரைக்கும் நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கப் போறதா அப்பா, அம்மா நினைச்சுக்கட்டும். வெளில சொல்ல மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு மாமா’
ஸ்மார்த்தர் கதை :
பெண்ணின் அப்பாவும் அம்மாவும் ரிடையரான வங்கி ஊழியர்கள். ஒரே பெண். லண்டனில் தனியாக வசிக்கிறாள். நல்ல படிப்பு. கை நிறைய சம்பளம். கல்யாணம் வேண்டாம் என்கிறாள். அவளது அம்மா சொல்வது :
‘இப்ப அவள் எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் ? தேவை என்ன ? நிறைய சம்பாதிக்கறா. இஷ்டம் போல சௌகர்யமா இருக்கா. கல்யாணம் பண்ணிண்டு எதுக்கு தன்னோட சௌகர்யங்களக் குறைச்சுக்கணும் ?’
பிறிதொரு ஸ்மார்த்தர் கதை :
இதை எழுத மனம் வரவில்லை. ஆனால் மேற்சொன்னவற்றிற்குக் கிஞ்சித்தும் குறைவற்றது.
அவ்வளவு தான்.
எங்கே செல்கிறோம் ? தவறு எங்கே? இதில் ஃபார்வோர்டு கம்யூனிட்டி என்ன பீத்தல் ?
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
–ஆமருவி
Leave a reply to Ravichandran R Cancel reply