The side that is not spoken about, generally.

இன்று காமராஜரின் நினைவு நாள்.

காமராஜர் அரசு வழங்கிய மதிய உணவினால் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்த 70-80 வயதினர் இன்றும் வாழ்கின்றனர். துக்ளக் குருமூர்த்தி சாட்சி.

நெய்வேலி நிலக்கரித் திட்டம் காமராஜர் ஆட்சியில் வந்தது. மத்திய அரசினால் செய்ய முடியாது என்று நேரு கூற, காமராஜ், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியன், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் தலையீட்டால் மத்திய அரசுத் திட்டமாக உருவெடுத்தது நெய்வேலி திட்டம்.

தன்னளவில் ஊழல் அற்றவராக இருந்த காமராஜர் ஆட்சியில் இருண்ட காலங்களும் இருந்தன என்பதைக் கூர் வாசிப்பின் மூலம் வாசகர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தான் முதல்வராக வேண்டும் என்றும், ‘நான்-பிராமின்’ அமைச்சரவை அமைக்க வேண்டும் என்றும் முத்துராமலிங்கத் தேவரிடம் உதவி கோருகிறார் காமராஜர். வரதராஜுலு நாயுடு என்பாரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடக்கிறது.

‘நீ பிரமராக ( முதல்வர் ) வேண்டும் என்று நினைக்காதே. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை உன்னிடம் இருக்கட்டும். ஆட்சிக்கு நன்றாகப் படித்தவராகப் பார்த்து வைத்துக்கொள்’ என்று அறிவுரை சொல்கிறார் தேவர். காமராஜர் கேட்கவில்லை. பின்னர் ராஜாஜியின் அமைச்சரவையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்.

‘நான்-பிராமின்’ அமைச்சரவை அமைக்க வேண்டும் என்று எழுந்துவந்த காமராஜர், தான் ஆட்சிக்கு வந்ததும், ராமசாமி நாயக்கரின் மேல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுகக்வில்லை என்பதைக் கூர் வாசகன் நோக்க வேண்டும். ராமசாமி நாயக்கரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரு இரண்டு முறை எழுதும் அளவில் நடந்தது ஆட்சி.

‘கீமாயணம்’ என்னும் பெயரில் நடந்த ராமாயணப் பழிப்பு நாடகத்திற்குக் காமராஜர் போலீஸ் பந்தோபஸ்து கொடுத்தார். முத்துராமலிங்கத் தேவரின் கடும் எதிர்ப்பிற்குப் பின்னர் நாடகம் தடை செய்யப்பட்டது.

பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறக் காமராஜர் கள்ள நோட்டு அடித்தார் என்று தேவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். தன் மீது வழக்குத் தொடுக்கவும் கோரினார். ஆனால், காமராஜர் தேவரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் காங்கிரஸுடன் தொடர்புடையவர். அன்னாளைய சட்டசபைப் பேச்சுகளில் இவற்றைக் காணலாம்.

ஆகவே, எந்த வரலாற்றுப் பாத்திரத்திற்கும் பிற முகங்களும் உண்டு என்பதை வாசகர்கள் உணர வேண்டும்.

இது, காந்தி, நேரு, படேல், நேதாஜி, ராமசாமி நாயக்கர் என்று பலருக்கும் பொருந்தும்.

ஹிந்து விரோதி என்று புதிய ஹிந்துத்துவர்களால் தூற்றப்படும் காந்தி தான், தன் சனாதனப் பற்றைக் கடைசி வரை விடவே இல்லை. ஆங்கில அடிவருடி என்று தூற்றப்படும் வீர சாவர்க்கர்தான் இதுவரை யாரும் அனுபவித்திராத சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். ஹிந்துத்துவன் எனில் காந்தியைத் தூற்ற வேண்டும் என்பதும், செக்யூலர் எனில் சாவர்க்கரைப் பழிக்க வேண்டும் என்பதும் வடிகட்டிய ஒற்றைபப்டை முட்டாள்தனம் தவிர வேறென்ன ?

கல்விக் கண் திறந்தார் காமராஜர் என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அவர் ராமசாமி நாயக்கரிடம் சமரசம் செய்துகொண்டார் என்பதும். காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்ட தியாகி ராஜகோபாலாச்சாரியார் தான் அண்ணாத்துரையுடன் கைகோர்த்தார் என்பது வரலாறு.

வரலாறு எப்போதுமே பல கோணங்களைக் கொண்டது. நமக்கு வேண்டியதை மட்டுமே பார்ப்பது அறிவார்ந்த வாசகன் செய்யும் செயல் அல்ல. வாசிக்காத காரணத்தால் தான் வைக்கம் வீரர் என்று யாரையோ கொண்டாடும் நிலையில் நம் மாநிலம் உள்ளது.

தீவிரமாக வாசியுங்கள். எதிர்க்கருத்துகளைத் தேர்ந்தெடுத்து வாசியுங்கள். அப்போது தான் நிதர்ஸனம் புலனாகும்.

#தேவர்#நேரு#காமராஜர்#kamarajarj#GandhiJayantii#காந்தி#பசும்பொன்

5 responses

  1. Ravichanran R Chandran Avatar
    Ravichanran R Chandran

    இந்த கட்டுரை எனக்கு ஒரு அதிர்ச்சி! ஆயினும் எல்லா பிம்பங்களுக்கும் இன்னொரு முகம் இருக்கும் என்ற கூற்றுக்கு இப்படி ஒரு முகம் என் அபிமான அரசியல் தலைவருக்கு இருந்தது என்பது நம்பவே முடியவில்லை… ஆயினும் அது நிஜம் அல்லவோ?! மிக்க நன்றி எதைப் பற்றியும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்…. இக்கட்டுரை மூலம்!

    Like

  2. Ravichanran R Chandran Avatar
    Ravichanran R Chandran

    மிக அருமையான கட்டுரை. என்னுடைய ஆதர்ச அரசியல் தலைவர் பற்றி இப்படி ஒரு பதிவு வந்தாலும் எதையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இன்னொரு முகமும் உண்டு என்பது எவ்வளவு நிஜம்.

    Like

  3. Mani Avatar
    Mani

    பார்ப்பனீயத்தால் மண்டை கழுவப் பட்ட புத்தி பேதலிப்பு இந்தப் பதிவில் தெரிகிறது.

    1. நெய்வேலி நிலக்கரி திட்டம் தொடர்பானது.. அரசின் எந்தத்திட்டமும் தனி ஒருவரால் உருவாக்கப்பட்டு, தீர்மானிக்கப்பட்டு, செயல்படுத்த முடியாது. நிலக்கரி இருப்பு பற்றிய ஆய்வு ஒரு தொழில்நுட்பக்குழுவால் நிர்ணயிக்கப்படும். அதன் தரம், அகழ்ந்தெடுக்கும் செலவு, அதன் மதிப்பு, economic viability இவற்றையெல்லாம் ஒரு நிபுணர் குழு ஆய்வு செய்யும்.. நிலம் எடுத்தல், பாதிக்கப்படும் மக்களுக்கு ஈட்டுத்தகை மற்ற உதவிகள் அளிப்பது பற்றிய விவரங்களை ஒரு குழு மேற்கொள்ளும்.. அதை டிரேன்ஸ்போர்ட் செய்தல், மின்சார உலைகள் அமைத்தல் இது அடுத்த குழு ஏற்கும்.. தேவையான நிதிக்கு என்ன செய்வது, வரியா, கடனா, தனியார் வசமா என்பதை ஒரு குழு நிர்ணயிக்கும்.. இப்படி பல பேர் சேரந்துதான் ஒரு திட்டம் என்னும் தேரை இழுக்க முடியும்.. ஆனால், இதை முன்னெடுத்தது யார், இதற்காக நேருவிடம் சண்டை போட்டது யார் (நேரு அப்போது அவரைச் சுற்றியிருந்த பார்ப்பன அதிகாரிகளின் பிடியில் நின்றுகொண்டு, இது சாத்தியமற்ற திட்டம் என்றார்) இதையெல்லாம் வென்று திட்டத்தை முன்னெடுத்தவர் காமராஜர். பெரிய சிந்தனையாளர்ன்ற நெனைப்புல பிதற்ற வேண்டாம்
    2. நேருவே கடிதம் எழுதி பெரியார் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன விஷயம்.. இதிலும் நேருவைச் சுற்றியிருந்த (கட்சி+அரசு) பார்ப்பனக் கூட்டம், அவர் மண்டையைக் கழுவி, பெரியார் மீது தப்பபிப்பிராயம் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். காமராஜருக்குத் தெரியும் கள நிலவரம் என்னனு. உங்களுக்கு வசதியா இல்லைன்றதால, சனாதனத்தை ஏற்க முடியாது.. அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. குறிப்பிட்ட பிரிவு சனாதனப்படியானது. அதனால் அதை அவர் எரித்தார். காமராஜருக்கும் அதில் ஏற்பு உண்டு. அதுதான் பெருவாரியான மக்கள் (97%) நலம் சார்ந்தது. அதை நேருவுக்கு எடுத்துச் சொல்லி புரியவைத்தார் காமராஜர். உங்களுக்கு சூத்தெரிச்சல் என்றால் பர்ணால் போட்டுக்கங்க

    Like

    1. Amaruvi's Aphorisms Avatar

      Hand of Destiny – C.Subramainam. இந்த் நூலை வாசிக்கவும். காமராஜர் இல்லையே நெய்வேலி இல்லை என்பதை எழுதியுள்ளார். ஆர்.வெங்கட்ராமனும் அதையே சொல்லியுள்ளார். நானும் அதையே சொல்கிறேன். உங்களுக்குப் புரியவில்லை.

      Like

    2. Amaruvi's Aphorisms Avatar

      2. பசும்பொன் பொக்கிஷம் என்கிற நூலில் தேவரின் சொற்பொழிவுகள் உள்ளன. வாசிக்கவும். வாசிக்கும் எண்ணம், திறமை இருந்தால், தமிழக சட்டசபைக் கூட்டங்களில் தேவரின் பேச்சுகள் பற்றித் தேடிப் பார்க்கவும். நாகரீகமான சொற்களைச் சொல்ல திராணியும் வளர்ப்பும் இல்லையெனில் இந்தத் தளத்திற்கு வராதீர்கள். மற்றபடி உங்களிடம் சொல்ல ஒன்றும் இல்லை.

      Like

Leave a comment