‘ஏன்னா, ஸ்வேதாவுக்கு விண்டர் க்ளோதிங், அதர் ஐடம்ஸ் வாங்கணும். ஆகஸ்ட்ல மாண்ட்ரீல் போய் இறங்கப்போறா. அமேஜான்ல ஃபெஸ்டிவல் ஸேல்னு போட்டிருக்கான். ஒரு ஃபிப்டி கே ஆகும். ஜீ-பே பண்ணிடுங்கோ’ வித்யா சொல்லி முடிக்கும் முன் ராகவன் பணம் அனுப்பிவிட்டான். ஸ்வேதாவிற்கு கனடா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைந்த்திருந்தது.
‘இண்டிப்பெண்டென்ஸ் ஆஃபர்னு ஃபோக்ஸ்வேகன்ல ஒரு ஆட் பார்த்தேன். நம்ம ஹோண்டா சிட்டிய குடுத்துட்டு புதுசா வந்திருக்கற ஃபோக்ஸ்வேகன் எஸ்.யூ.வி. புக் பண்ணலாமான்னு பார்க்கறேன். அதுல சன் ரூஃப் இருக்காம். எக்ஸ்ட்ராவா ஒரு எட்டு லட்சம் ஆகும். நீ என்ன நினைக்கறே?’ ராமசாமி கேட்க, வித்யா முகம் மலர்ந்து ‘அப்பாடி, எங்க கம்பெனில எல்லாருமே ஹைப்ரிட் எஸ்யூவி வாங்கிட்டா. எப்படா இந்த மூணு வருஷத்து ஹோண்டா சிட்டியக் குடுக்கலாம்னு நினைச்சுண்டிருந்தேன். பருத்தி புடவையா காச்ச மாதிரி இருக்கு. பெருமாள் என் பங்குல இருக்கார்’ என்றாள்.
‘இல்ல, ஹைப்ரிட் வாங்கினா இருபது லக்ஷம் ஆறது. அதான் யோசனையா இருக்கு’ ராமசாமி சொல்லவும், ‘நன்னாருக்கு போங்கோ, சிட்டி வாங்கி மூணு வருஷம் ஆயிடுத்தே, அப்கிரேட் பண்ணிக்கணும்னு தோணலையா உங்களுக்கு? இது ஒரு ஈ.எம்.ஐ. போட்டா போறது. காண்ட் வீ அஃபோர்ட் திஸ்?’ என்ற வித்யாவிடம் பேசிப் பயனில்லை என்று செல்ஃபோனை நோண்டத் துவங்கினார் ராமசாமி.
‘பாருங்கோன்னா, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ல சாந்தோம் பீச் எதிர்க்க காண்டோமினியம் போடறானே, போன வாரம் பார்த்துட்டு வந்தோமே என்ன பதிலையே காணும்?’ என்ற வித்யாவைப் பார்க்க மனமில்லாமல், செல்ஃபோனைப் பார்த்தவாறே ராமசாமி சொன்னது:’ ஒரு ஸ்கொயர் ஃபீட் இருவதாயிரம் சொல்றான். ரெண்டயிரம் ஸ்கொயர் ஃபீட் நாலு கோடிக்கு மேல ஆறது. கொஞ்சம் அதிகமா இருந்தாலும் லோன் போட்டிருக்கேன். அப்ரூவ் ஆயிடும்னு நினைக்கறேன். ஈஎம்ஐ ஒன்றரை லக்ஷம். பரவாயில்லையா ? வீ நீட் தட் ஸ்டாண்டர்ட் ஆஃப் லைஃப், இல்லியா?’ என்றான் அரை மனதுடன், தன் லேப்டாப்பில் புதிய புடவை டிசைன் பார்த்துக்கொண்டிருந்த வித்யாவின் புன்சிரிப்பை மனதில் கற்பனை செய்தபடி.
‘வித்யா, அடுத்த வாரம் அம்மா ஸ்ராத்தம் வரதே கிருஷ்ணன் வாத்யாருக்கு சொல்லிடட்டுமா?’ ஏன் அனுமதி கேட்பது போல் கேட்கிறோம் ?
‘அதான் சொல்லலாம்னு நினைச்சேன். கிருஷ்ணன் வாத்யார் வேண்டாம். ஒரு ஸ்ராத்தத்துக்கு ரெண்டாயிரம் வாத்யார் சம்பாவனை மட்டுமே வாங்கறார். அதுக்குமேல பரிஜாரஜர், சாமான்னு நாலாயிரம் ஆயிடும். நமக்கு வேற ஏகப்பட்ட ஈஎம்ஐ, ஷாப்பிங் எல்லாம் இருக்கு. இருக்கற விலைவாசில ரெண்டாயிரம் ரூபா கொஞ்சம் அதிகமாப் படறது. வேற யாரையாவது பார்க்கலாமா?’ என்றாள் வித்யா நல்லிசில்க்ஸ் டாட் காமில் இரட்டை பார்டர் போட்ட பட்டுப்புடவைக்கு ஆர்டர் கொடுத்தபடியே.
Leave a reply to Amaruvi’s Aphorisms Cancel reply