“நான் செய்தேன்; எனக்கு விருது கொடுங்கள்; எனக்குப் பணம் கொடுங்கள் ” இப்படிப் பலர் நம்மிடம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
ஆனால், திருவாரூரில் உள்ள பள்ளியில் தொழில் நுட்ப ஆசிரியராகப் பணியாற்றும் திரு.அசோக் குமார், பல ஆசிரியர்கள் செய்ய வேண்டிய செயலைத் தனியாகச் செய்கிறார்.
ஒன்றுமில்லை. வசதியில்லாத பல மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி அளிக்கிறார். அவர்களின் கல்லூரிக் கல்விக்கும் உதவுகிறார். சமீபத்தில் அவரைச் சந்தித்த போது தன்னைப் பற்றியும் தனது பணிகளைப் பற்றியும் இவ்வாறு சொன்னார்:
“என் பெயர் அசோக் குமார், திருவாரூர் மாவட்டத்தில் வ சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழில்நுட்ப கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறேன், என் வகுப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் ஏழை மக்களின் பிள்ளைகள், இன்றைய காலத்தில் ஒரு மாணவர் தன் வகுப்பில் படிப்பது மட்டும் இல்லாமல் ஒரு டியுசன் வைத்து படிப்பது அதிக செலவு உள்ள விசயம், அதுவும் ஏழை மாணவர்கள் பாதிப்பு அதிகம், இந்த செயல் என்னை அதிகம் பாதித்து இவர்களுக்கு ஏதோ ஒன்று செய்ய வேண்டும் ஆவலால் நிறைய பேரிடம் உதவிக்காக அலைந்து உள்ளேன் இறுதியில் இறைவன் கருணையினால் நான் out source செய்த கம்பெனியில் பேசி 10 மற்றும் 12 வகுப்பு ஏழை மாணவர்களுக்கு இலவச காலை மாலை வகுப்புகளை நடத்த உதவி செய்து தந்தது. , சுமார் நான்கு ஆண்டுகள் இந்த வகுப்புகள் ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறோம் , அனைத்து வருடமும் 100% தேர்ச்சியை கொடுத்து உள்ளோம் ,5 ஆசிரியர்,138 மாணவ , மாணவிகள் பயின்று வருகின்றனர் உள்ளே இலவசமாக எழுது பொருள்கள், பேப்பர், நல்ல குடிநீர், காற்றோட்டம் உள்ள வகுப்புகள் உள்ளது, இந்த வகுப்புகளுக்கு உதவி செய்து வரும் திருமதி மீனாட்சி ராவ். , இயக்குநர் New opportunities financial pvt ltd. அவர்களுக்கு வாழ் நாள் முழுவதும் நன்றி கடன் பட்டுள்ளோம் என் ஒரு கனவு நிஜமானது. Now happy poor boys and girls in thiruvarur district
என் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி, என் வகுப்பு தொழில்நுட்ப கல்வி அதிலும் Basic electronics அரசு சார்பில் எந்த ஒரு நிதியோ practical equipment எதுவும் கிடையாது மாணவர்கள் ஏதும் வாங்க இயலாத நிலை எனவே நான் என் ஊதியத்தில் சிறிது சிறிதாக சேர்த்து ஒரு Electronics LAB உருவாக்கி அதில் என்னால் முடிந்த அளவு Practicals class நடத்தி வருகிறேன் . நடத்த படும் Practical. ,1. Wiring 2 power supply 3 TV assembly LED 4 computer assemble and fault finding 5. Cell phone service இவை அனைத்தும் செய்முறை வகுப்புகளாக நடத்துகிறோம் இதில் யாரேனும் ஒருவர் எங்கள் விருப்பத்திற்குரிய practical equipment வாங்கி கொடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் ஏழை மாணவர்கள் பயன் பெறுவர் 12th BEE கல்வி படித்து முடித்து விட்டு காலேஜ் சேர முடியாத மாணவர்களை தேர்ந்தெடுத்து இலவச காலேஜ் எங்கு உள்ளதோ அங்கெல்லாம் சேர்ந்து விடுகின்றேன், நல்ல உள்ளம் கொண்ட காலேஜ்கள். Ramakrishna college Covai, Murugappa ITI, johnson company college chennai இவர்கள் அனைவரும் எனக்கு உதவி செய்கிறார்கள் , வருடத்தில் 35 மாணவர்களை இங்கே சேர்ந்து படிக்க வைக்கிறேன், உதவி செய்தால் மேலும் ஏழை மாணவர்களை படிக்க வைக்க முடியும் நன்றி.”
வாசகர்கள் அசோக் குமாருடன் நேரடியாகப் பேசி, முடிந்த உதவிகளைச் செய்யலாம் – மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது, நிறுவனங்களில் ப்குதி நேர வேலைகள் / பயிற்சிகள் கொடுப்பது, கல்லூரிகளில் இடம் பெற்றுக் கொடுப்பது, இன்ன பிற. ( மாணவிகளும் உள்ளனர். அவர்களின் படங்களை வெளியிடவில்லை.)
அசோக் குமாரின் அலைபேசி எண் : +91-95978-45838


Leave a comment