The side that is not spoken about, generally.

07-05-2025 சென்னை.

ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி ‘டுமீல் டுடே’ நாளிதழுக்கு விசேஷ அறிக்கை கொடுத்த தலைவர்கள் என்ன சொன்னார்கள் :

சைடலின் : இந்திய ராணுவத்துக்குத் துணை நிற்கிறோம். இந்த நிலைப்பாட்டைத் தான் அண்ணா அன்றே சொன்னார் ( எங்கண்ணா)

சைமன் : தம்பி அஜய் சௌஹான் ராத்திரி மூணு மணிக்கி ஃபோன் அடிக்கறாப்ல. என்னமோ ஏதோன்னு எடுத்தேன். அண்ணே, முடிச்சுட்டோம்ணே. நீங்க சொன்ன மாதிரியே ஏவுகணை விட்டு முடிச்சுட்டோம்ணே. தலைவர் கிட்ட கத்துக்கிட்ட வித்தைய நல்ல நேரத்துல சொல்லிக் கொடுத்தீங்கண்ணேன்னு சொல்லி தேம்பித் தேம்பி அழுவுறாரு. எனக்கே அழுவை வந்துடுச்சு…ஹ ஹ ஹா

தனிமொழி, எம்.பி.: பெரியார் காட்டிய வழியில் பெண்கள் சென்றிருந்தால் இன்று சிந்தூர் என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை. இதில் கூட ஹிந்தித் திணிப்பை ஒன்றிய அரசு செய்கிறது. நெற்றிப் பொட்டு என்று வைத்தால் ஏவுகளை பறக்காதா ?

உலக்கை நாயக்கர் : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்பதை நான் ஏற்கெனவே சொல்லியிருந்தேன் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்பது தெரியும் என்றாலும் அப்படி இல்லை என்று நான் சொல்லப்போவது இல்லை என்பது உங்களுக்கு இந்த ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் தெரிந்திருக்க நியாயம் இல்லை என்பதை விஸ்வரூபம் படத்தின் க்ளைமேக்ஸில் வைக்கலாம் என்று சொன்னபோது லைட் பாய் தனது லைஃப்பாய் சோப்பு காணாமல் போன விஷயத்தைச் சொல்லிக் குழப்பிவிட்டதால் நான் அதைச் சொல்லவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருக்கலாம்.

சைகோ : எத்தனையோ போர்களைக் கடும் மழையில் ஈரத்துடன் ஈழத்தில் கண்டவன் என்கிற முறையில் என் கருத்தைச் சொல்ல வேண்டுமென்றால், கிரேக்க அறிஞர் கான்ஸ்டாண்டைன் சொன்னது போல இதனை இதனால் இவன் முடிக்கும் என்று அந்த ஏவுகணையைச் செலுத்திய இந்திய ராணுவத்துக்குப் போனால் போகிறது என்று வாழ்த்து சொல்ல வேண்டிய நிலையில் உள்ளேன்.

விஜயலட்சுமி : ஆப்பரேஷன் சிந்தூர் பத்தி கேக்கறீங்க ? இன்னிக்கி கோர்ட்ல சைமன் என்ன சொன்னார் ? நான் யாருன்னு சொன்னார் ? இன்னொரு வீடியோ விடவா ?

ஜந்து ராம் : The Union Govt has performed a characteristic overreach of its executive powers by authorising the auto-loitering missiles to visit the peace-loving neighbourhoods of Pakistan in contravention of all laws known to mankind including Newton’s laws, thus exhibiting its neo-fascist tendencies.

தில்லி ராஜகோபாலன் : நேத்திக்கி கார்த்தால காஃபி சாப்பிடும் போதே அமித்ஷா என்கிட்ட கேட்டார். என்னிக்கி மிசைல் விடலாம்னு. நான் தான் தனுசு ரசிக்கு பகைன்னு போட்டிருக்கான். இது நல்ல நாள். உடனே இன்னிக்கே மிசைல் விடுங்கோன்னு சொன்னேன்னு சொல்றத உங்க நேயர்களுக்கு சொல்லிக்கறேன்.

பயினார் பாகேந்திரன் : எதப் பத்தி நாங்க கருத்து சொல்லலாம்னு இன்னும் எங்களுக்குச் சொல்லித் தரதுக்கு தில்லிலேர்ந்து யாரும் வரல்ல. அதுக்குள்ள மிசைல் விட்டுட்டாங்கன்னு தெரியுது. இதைப் பத்தி கருத்து சொல்ற அதிகாரம் இன்னிக்கி கடப்பாடி கழனிசாமிக்கு மட்டுமே இருக்கு.

கபசுர பாண்டியன் : இதுனால ஜாதி ஒழியுமா ? ஆரிய வந்தேறிகள் ஆதிக்கம் குறையுமா ? ஃபாசிச பாசகவோட செயல்களை எதிர்க்கறத் தவிர எங்களுக்கு வேற எதையும் எங்க தாடித் தாத்தா கத்துக்குடுக்கல. இதைப்பத்தி சனு ஸ்மிருதில ஏற்கெனவே சொல்லியிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா ?

சாரிதாஸ் : ஒரு மிசைல் விலை எவ்வளவு ? 24 நாலு மிசைல் எவ்வளவு ? இதெல்லாம் கேக்காம இருக்கமுடியுமா ? அதோட ப்ளேனுக்கு பெட்ரோல் செலவு. இதைச் சொன்னா நம்மை கர்நாடக மருமகப் பிள்ளைக்கு எதிர்னு சொல்றாங்க. என்னமோ போ.

சப்பர் ஸ்டார் கஜினி காந்த் : அந்த மிசைல் இருக்கு இல்ல.. அதாங்க வேகமா பறக்குமே.. அது எப்ப வரும் எப்பிடி வரும்னு தெரியாது. ஆனா, வரும்போது லேட்டஸ்டா வரும். வந்துச்சா ? இது எப்டி இருக்கு? ஹ ஹ வர்ட்டா ?

டுபுக்கு பங்கர் : இதத்தான் நான் திரும்பித் திரும்பி சொல்றேன். இத்தனை மிசைல் விட்டுருக்காங்க.. இதெல்லாம் இந்த முதல்வருக்குத் தெரியுமா ? இதெல்லாம் அதிகாரிகளோட டெசிஷன். முதல்வருக்கு ஒண்ணுமே தெரியாது.

–ஆமருவி

07-05-2025

Leave a comment