‘தோழர், பண்டிகையெல்லாம் வர ஆரம்பிச்சுட்டு.. அக்கவுண்டுல பணமும் வந்தாச்சு.. அவங்களால செய்ய முடியாது.. நாம தான் செய்யணும்.. புரியுதே..’
‘ஆமாம் தோழர். என்னென்ன தலைப்புல எளுதணும், லிஸ்ட் அனுப்பினாங்களா.’
‘இதென்ன பிரமாதம். வருசாவருசம் செய்யிறது தானே.. இந்தாருங்க லிஸ்டு..
1. கொலு ஆண்டான் அடிமைக் கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது.
2. துர்க்கா-லக்ஷ்மி-சரஸ்வதி – இந்த மூவரில் துர்க்கை கரிய நிறம். ரேசிசம். துர்க்கை திராவிடக் குறியீடு.
3. பெண்களை வழிபடுவது மைனாரிட்டி மனதைப் புண்படுத்தும்.
4. ‘ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பும் நவராத்திரியும்’ – திருமாவளவன் ஆய்வு
தீபாவளி:
1. பட்டாசு வெடிப்பது காற்று மாசு.
2. பட்டாசு வெடித்தால் காக்காய்-குருவி தூங்காது.
3. பட்டாசு சீன கண்டுபிடிப்பு. விஸ்வகுரு எதிர்ப்பாரா ?
4. பட்டாசு குப்பைகள் – தூய்மைப் பணியாளர்கள் உடல் நலன்.
5. தீபாவளி ஆரிய பண்டிகை.
6. ராஜராஜன் தீபாவளி கொண்டாடினானா ?
7. சிறுபான்மனியினரால் அன்று தூங்க முடிவதில்லை.
8. ‘ஜி.எஸ்.டி. எதிர்ப்பே தீபாவளி எதிர்ப்பு’ – வன்னியரசு கட்டுரை
கார்த்திகை:
1. தீபாவளிக்குச் சின்ன அத்தனையும்.
2. சிறுபான்மையினர் தூக்கம்
3. விளக்குகள் ஏற்றுவதால் காற்று மாசு
4. பொரி உருண்டைகள் தமிழ் இலக்கியத்தில் இல்லை
5. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ – இது தமிழ் நாட்டுப் பாடல் கிடையாது.
6. ‘நீட் எதிர்ப்பே கார்த்திகை’ கமலஹாசன் கட்டுரை
டிசம்பர் 15 ( மார்கழி 1 )
1. பெண் அடிமைத்தனமும் மார்கழியும் – திருமுருகன் காந்தி கட்டுரை
2. பெண் தினமும் நீராட வேண்டுமா ? – மதிவதனி பேச்சு.
3. மார்கழியில் ஷாம்பூ பயன்பாடு – கவிஞர் வைரமுத்து கட்டுரை.
டிசம்பர் இறுதி:
1. அன்பும் அறமும் போதிக்கும் பண்டிகை
2. உலக சகோதரத்துவம் போதிக்கும் நாள்
3. வெறுப்புக்கு எதிரான நாள்
4. பெரியார் கண்ட சமத்துவ நாள் – கி.வீரமணி கட்டுரை
5. கீழடியும் டிசெம்பர் இறுதியும் – சு.வெங்கடேசன் உரை.
பொங்கல்:
1. தமிழர் பண்டிகை மட்டுமே.
2. சூரிய வழிபாடு கிடையாது என்று நடிகர் லாரல் ஹார்டி கட்டுரை
3. சமத்துவப் பொங்கல் – மாறு வேஷத்தில் பொங்கல் வைப்பது.
4. தமிழ்ப் புத்தாண்டு இதுவே – பாரக் ஒபாமா கட்டுரை
ஏப்ரல் 14:
1. விடுமுறை நாளைக் கழிப்பது எப்படி ? சன் டிவி பட்டிமன்றம்
2. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘பாச மலர்’ ஒளிபரப்பு.
3. ஏப்ரல் 14 என்னும் ஈழத்துக்கு எதிரான கோணம் – வைகோ உரை.
4. ஏப்ரல் 14 கொண்டாடாத ராமன் – வைரமுத்து கவிதை. #satire
–ஆமருவி
28-08-2025
Leave a reply to mukhilvannan Cancel reply