The side that is not spoken about, generally.

நி: இன்னிக்கு மேதினம். வாழ்த்துகள் தோழர்.

சு: ஆங்.. எங்கேயோ கேட்ட விஷயமா இருக்கே.

நி: மே தினமங்க. உழைப்பாளர் தினம். மே ஒண்ணு.

சு: ஏ… சரிசரி. உழைப்பாளர். அந்த ஏ.கே. கோபாலன், பி.ராமமூர்த்தி, நம்பூதிரிபாட் இவங்களச் சொல்றீங்க போல.

நி: சரி விடுங்க. இப்ப எதுல பிஸியா இருக்கீங்க?

சு: வேற எங்க. கீழடி தான். யார் மதுரைப் பக்கமா வந்தாலும் கையப் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போய்க் காண்பிக்கணுமே. மார்க்சியக் கடமை இல்லையா?

நி: சரிதான். உங்க மதுரை தொகுதிக்கு என்ன செஞ்சிருக்கீங்க?

சு: கீழடியிலேயே கிடந்து கெடக்கேனே. இதுவே சேவைதானே?

நி: இல்லையங்க… மதுரைக்கு?

சு: ரயிலில் ஹிந்தி கூடாது; சேட் ஹிந்தி பேசக் கூடாது; ரூபா நோட்டுல ஹிந்தி கூடாது; டி.வி.ல ஹிந்தி கூடாது; இப்படி நிறைய மார்க்சீயப் போராட்டங்கள் நடத்தியிருக்கேனே. மதுரை மக்களுக்கு இதைவிட வேற என்ன வேணும்?

நி: இதனால எல்லாம் மதுரைல ரோடு, குடிநீர் பிரச்னை தீர்ந்துருச்சா?

சு: ரோடு மாநில அரசு. குடிநீர் முனிசிபாலிட்டி. இதுல எம்.பி.க்கு என்ன வேலை?

நி: அப்ப உங்களுக்கு என்னதான் வேலை?

சு: கமல் ஹாசன், கனிமொழி எல்லாம் வரும் போது கீழடிக்கு கூட்டிக்கிட்டுப் போறது. வேலை இல்லையா இது?

நி: போகட்டும். மேதினப் பேரணி, தொழிலாளர் ஒற்றுமை இதைப் பத்தியெல்லாம் என்ன நினைக்கறீங்க?

சு: நேரமாவுது.. கீழடிக்குப் போகணும். கேள்வி ஏதாவது கேளுங்க..

நி: பரந்தூர் விமான நிலையம், நில ஆர்ஜிதம் பற்றி…

சு: ஒன்றிய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. அடுத்தது?

நி: நில ஆர்ஜிதம் மாநில அரசோட வேலைதானே?

சு: சரிதான்… மாநில மக்களின் விவசாய நிலங்களைக் காக்கும் தளபதியின் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் ஒன்றி ஃபாசிச பாஜக அரசின் எண்ணத்தைக் கடுமையாக எதிர்த்து..

நி: அருமை சார். அந்த எட்டுவழிச் சாலை ?

சு: பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் விரோதமாக இருந்த எட்டுவழிச் சாலை, தளபதின் ஆட்சியில் மக்களின் அத்யாவசியத் தேவையாகப் பார்க்கபப்டும். இதுதான் மார்க்சீயம். ஆக, அந்த வகையில்..

நி: விழிஞ்சம் துறைமுகம் விஷயமா..

சு: தமிழகத்துக்கு வந்திருக்க வேண்டிய விழிஞ்சம் துறைமுகத்தைக் கேரளத்திற்குக் கொடுத்த ஒன்றிய ஃபாசிச பாஜக அரசை கண்டிக்கும் அதே நேரம், தோழர் பினரயி விஜயன் தலைமையிலான அரசின் சாதனையாகவே விழிஞ்சம் துறைமுகத்தைப் பார்க்கிறேன்.

நி: அதை அதானி கட்டியிருக்காறே ?

சு: சித்தாந்த ரீதியாக கேள்விக்கெல்லாம் பதில் இந்த ‘வேள்பாரி’ புஸ்தகத்துல இருக்கு. வாசிச்சு தெரிஞ்சுக்குங்க..

நி: இறுதியா ஒரே ஒரு கேள்வி. ‘டயலெக்டிகல் மெட்டீரியலிசம்’ ங்கற கருதுகோள் வழியா திராவிட மாடல் ஆட்சிய எப்படி புரிஞ்சுக்கறது ?

சு: ஒரே பதில். 25 கோடி. அதுக்குள்ள நீங்க சொன்னது, பெரெஸ்திராய்கா, க்ளாஸ்னோஸ்ட், பூர்ஷ்வா சதி எல்லாமே அடக்கம். அதுக்குப் பக்கத்துலயே கம்யூனிசமும் அடக்கம்.

நி: புரியலையே..

சு: ‘காவல் கோட்டம்’ வாசிச்சுப் பாருங்க. புரிஞ்சா சொல்லுங்க.. நானும் தெரிஞ்சுக்கறேன். கீழடிக்கு நேரமாச்சுது.

–ஆமருவி #Satire

Leave a comment