The side that is not spoken about, generally.

நி: வெற்றிகரமா அண்ணாமலைய நீக்கிட்டீங்க… சந்தோஷமா?

கு: நான் எங்க செஞ்சேன்? கட்சியில முடிவு எடுத்தாங்க… எனக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்ல…

நி: அமித் ஷா உங்க வீட்டுக்கு வந்தாரே…

கு: அவருக்கு மோர்க்களி, கொஸ்து சாப்பிடணும்னு ஆசை. அதான் வந்தார்.

நி: அண்ணாமலை இருந்திருந்தா கட்சி இப்படி தேய்ஞ்சு போயிருக்காது இல்ல?

கு: நானும் அதைத்தான் சொல்றேன். அண்ணாமலை இருந்தா அதிமுக கூட்டணி நடக்காதுன்னு சொன்னேன். இப்ப, அவர் இல்லைங்கறதால கட்சிக்கு வெற்றி இல்லைன்னும் சொல்றேன். எப்பவுமே நான் ஒரே கருத்துதான் சொல்றேன்.

நி: அப்ப, நீங்க சொல்லித்தானே அமித் ஷா அண்ணாமலைய நீக்கினார்?

கு: என் கருத்தை நான் சொன்னேன். இப்படியும் சொல்லுவேன். அவர் மோர்க்களிதான் வேணும்னார். சரின்னேன். . அண்ணாமலைய நீக்கிட்டு அதிமுகவோட அலையன்ஸ் வைச்சாங்க. இதுக்கு நான் என்ன பண்ண முடியும்?

நி: ரொம்ப குழப்பமா இருக்கே…

கு: துக்ளக்ல என் தலையங்கம் படிச்சா புரியும்.

நி: நீங்க ஒண்ணு சொல்றீங்க.. இதயா ஒண்ணு சொல்றார்… ரமேஷ் இன்னொன்னு சொல்றார். எதை நம்பறது?

கு: இதுக்குத்தான் ராம்நாத் கோயங்கா சொல்வார். அதன்படி பார்த்தா சரிதான்.

நி: அவர் என்ன சொல்வார்?

கு: அதை அவர்கிட்டதான் கேட்கணும். இதனால்தான் நான் அரசியல்லயே இல்லை..

நி: என்னது? இத்தனையும் பண்ணிட்டு, நீங்க அரசியல்ல இல்லையா?

கு: கோயங்கா சொன்னார். அதனால அரசியல் வேண்டாம்னு இருக்கேன். அப்ப அருண் ஷோரியும் இருந்தார்.

நி: போகட்டும்… அப்ப அண்ணாமலைய நீங்க நீக்க சொல்லல?

கு: அமித் ஷாவுக்கு மோர்க்களி கொடுத்ததோட என் வேலை முடிஞ்சுது. மத்ததெல்லாம் அவங்க கட்சி முடிவு. அண்னாமலை இருந்தா அலையன்ஸ் வராது. அலையன்ஸ் வேணுமா கட்சி வளரணுமான்னு அவர்கிட்ட சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க கட்சி முடிவவு. அதுனால இப்பவும் நான் அதையே தான் சொல்றேன். அண்ணாமலை இல்லாததால கட்சிக்கு பின்னடைவு. என் கருத்துல அப்பவுமே மாற்றம் இல்ல. இதையேதான் ராம்நாத் கோயங்காவும் அருண் ஷோரியும் பலதடவை வாய்பாய் கிட்ட சொல்லியிருக்காங்க. அப்ப அத்வானியும் கூட இருந்தார். இதப் பத்தி சோ கிட்ட பலதடவை பேசியிருக்கேன்.

நி: கிர்ருனு வருது. ஒரே ஒரு எலுமிச்சம் பழம்.. வேண்டாம் எலுமிச்சை தோல் இருந்தா கொடுங்க.. தலைல தேய்ச்சுக்கிட்டே கிளம்பறேன்.

–ஆமருவி

#satire

Leave a comment