/ *கனமான விஷயங்களை எளிய சொற்களில் பரவலாகப் புரியும் வண்ணம் எழுத முடியாது என்றும் அப்படி எழுதினால் அது இலக்கியமல்ல என்றும் அபத்தமான இலக்கியக் கோட்பாடு வைத்திருப்பவர்களுக்கு ஓட்டலில் தோசை ஆர்டர் சொல்வதைத்தவிர வேறு எதையும் புரிகிற மாதிரி எங்கேயும் பேச வராது. சினிமாகாரர்களிடம் குழையப் பெரிய பேச்சாற்றல் தேவை இல்லை போலும் ! பாடி லேங்வேஜே போதுமானதாயிருக்கலாம் ! */
https://www.facebook.com/gnani.sankaran?hc_location=timeline
மேலே சொன்னது எழுத்தாளர் ஞாநி தனது முக நூலில் கூறியுள்ளது. இவர் எழுத்தாளர் ஜெயமொஹனைப் பற்றிக் கூறுகிறார் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. ஜெயமோகன் தனது தளத்தில் இப்படிக் கூறியிருந்தார்.
/* என் இதுவரையிலான அனுபவத்தில் நான் பேசிய ஏழெட்டு தேசத்து அரங்குகளில் மிகமிகக் உதாசீனமான அரங்கு ஈரோட்டில் சந்தித்ததுதான். அவர்களை குஷிப்படுத்த என்னால் முடியவில்லை. அவர்கள் தங்களைக் குஷிப்படுத்தாத எதையும் கேட்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் ஈரோட்டில் நான் அவமதிக்கப்பட்டேன். எனக்கு அத்தகைய அவமதிப்பு அதுவே முதல்முறை. */
http://www.jeyamohan.in/?p=38510
தமிழ் எழுத்தாளர்கள் அடித்துக்கொள்வது அவர்கள் ரத்தத்தில் உள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது ஞாநி ஐரோப்பாவில் இருக்கிறார். சென்ற வாரம் சென்னையில் இஸ்லாமிய அமெரிக்கப் பெண்ணியலாளர் பேசுவதற்கு சென்னைப் பல்கலையில் அனுமதி மறுக்கப்பட்டதைப் பற்றி எந்த ஞாநவான்களும் பேசவில்லை.
ஜெயமோகன் இலக்கியவாதி. அவர் இதுபற்றிப் பேசாதது ஆச்சரியம் இல்லை. ஆனால் எழுத்துப்போராளி ஞாநி, சாதிய மறுப்பாளர், இந்துத்துவாவிடமிருந்து தமிழகத்தைக் காக்க எழுதித் தள்ளுபவர், இளவரசன் கொலை வழக்கில் வெகுண்டெழுந்து முதல்வருக்குக் கடிதமெல்லாம் எழுதியவர், கூடங்குளப் போராளி — இப்படிப் பல போராட்டங்களுக்கு அடையாளம் அளித்தவர் சென்னைப் பல்கலை பற்றிப் பேசாதது வருத்தம் தான்.
இஸ்லாமியரைப் பகைத்துக்கொள்வது வேண்டாம் என்று கலைஞர் மௌனியாக இருப்பது ஊர் அறிந்ததே. அது தான் பகுத்தறிவு. ஆனால் முற்போக்குச் சிந்தனையாளர் பலர் மத்தியில் கள் எதிர்ப்பு முதலிய நல்ல விஷயங்களுக்குக் குரல் கொடுக்கும் ஞாநி பேசாதது எனக்கு வருத்தமே.