எதுக்குப் படிக்கணும் ? எதுக்கு வேலைக்குப் போகணும் ? எதுக்கு வேலை செய்யற எடத்துலே கண்ட “அறிவாளிகள்” கிட்ட பேச்சு வாங்கணும்? எல்லாம் இந்த கால் வயித்துப் பொழைப்புக்குத்த் தானே?
அப்பிடியே ஓடினாலும் கால் வயிறு நிறையுதா? அதுக்குள்ள இன்கம் டாக்ஸ், ரோடு டாக்ஸ். வாட்டர் டாக்ஸ், சர்வீஸ் சார்ஜ், லேட் பேமென்ட் பீஸ், வட்டி, அதுக்கு ஒரு சார்ஜ் .. இப்படி பல ரூபங்கள்ளே காசு பிடுங்குறதுக்குன்னே ஹார்வர்ட்லே படிச்ச மேதாவிங்கல்லாம் ரூம் போட்டு யோசிச்சு ஒரு நாளைக்கு 32 ரூபா போதும்னு சொல்லிட்டாங்க.
அதுக்கும் மேலே இருக்கவே இருக்கு இலவச அரிசி. சரி அதுவும் இல்லேன்னா ஒரு ரூபா அரிசி, விலை இல்லா கிரைண்டர், விலை இல்லா மிக்சி. இதுலே சமைச்சு சாப்பிட முடியாதா ?
சரி அதுவும் வாணாம். அஞ்சு ரூபாலே அம்மா உணவகம்லே இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம்.
அதுவும் இல்லீன்னா ? இருக்கவே இருக்கே மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம். அந்த சட்டம் எழுதின பேப்பரை தின்னலாமே.. சாப்ட மாதிரி இருக்குமே.
சர் சாப்பாடு எல்லாம் ஓகே. பசங்க படிப்பு?
அட என்னாப்பா? விவரம் புரியாதா ஆளா இருக்கியே? கல்வி உரிமை சட்டம் இருக்கே! சட்டம் இருக்க சொல்ல பள்ளிக்கூடம் எதுக்கு? படிச்ச மாதிரி ஆயிடுமே !
அது சரி, இதெல்லாம் வேணுமனா எனக்கு ரேஷன் கார்டு வேணுமே ? இல்லையே.
இது ஒரு விஷயமா? ரேஷன் கார்டு வேணும்னா ஆதார் கார்டு காமி. உடனே ரேஷன் கார்டு குடுப்பாங்க.
அடப் போப்பா.. ஆதார் கார்டு இருந்தாக்கா நானே ரேஷன் கார்டு வாங்கி இருக்க மாட்டேனா ?
ஆதார் கார்டு இல்லியா? சரி அப்போ ஒரு மனு குடுக்க வேண்டியது தானே?
அதாம்பா .. ஆதார் கார்டு வேணும்னா பாஸ்போர்ட் வேணுமாமே.
பாஸ்போர்ட் எதுக்கு ?
அப்பாலே எப்டி என்னோட அட்ரெஸ் தெரியும்?
இன்னாபா வெகுளியா இருக்கியே ! உனக்கு ஏதுப்பா அட்ரஸ் ? உனக்கு தான் வீடே இல்லியே ..
ஓஹோ.. அட்ரெஸ் வேணும்னா வீடு வேணுமா ? அதுக்கு என்ன செய்யுறது?
அதுக்கு ஒரு வழி இருக்கு.. ஒரு மனு எழுதி குடு. அத்தோட உன்னோட ரேசன் கார்டு காபி ஒண்ணு குடு ..
யோவ், ரேசன் கார்டு தான் இல்லியே.
சரி அப்படின்னா ஆதார் கார்டு குடு .
அதுதான் இல்லியே பா. அதானே கஷ்டம்.
சரி வாணாம், அப்டின்னா பாஸ்போர்ட் குடு. அட்ரஸ் இருக்கும்.
யோவ், நீ நெதானத்துலே தான் இருக்கியா? பாஸ்போர்ட் தான் இல்லியே ..
சரியான கஸ்மாலம் பா நீ. அப்டின்னா அட்ரஸ் எப்படிக் கிடைக்கும்?
எதுக்கு அட்ரஸ் ?
அட்ரஸ் இருந்தாத்தானே ஆதார் கார்டு கிடைக்கும்.
சரி, அதுக்கு வீடு வேணுமே.
அடப்போப்பா, வேலை செய்யாமலே ஊரக வேலை திட்டத்துலே நூறு ரூபா குடுக்கறாங்க. வீடு இல்லாம அட்ரஸ் குடுக்க மாட்டாங்களா ?
அது போகட்டும், உன்கிட்டே ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கா?
வண்டியே கிடையாது எப்படி ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கும்?
இல்லப்பா, அட்ரஸ் ப்ரூப் வேணும்னா ட்ரைவிங் லைசென்ஸ் போதுமேன்னு பார்த்தேன்.
இது எதுவுமே இல்லை. இதெல்லாம் எனக்குக் கிடைக்குமான்னு தெரிஞ்சுக்க முடியுமா?
ஆங். அது முடியும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கே..
அப்ப சரி. அதுக்கு என்ன செய்யணும் ?
ஒரு மனு எழுதி ஒரு பதினைஞ்சு ரூபா மணி ஆர்டர் வாங்கி ….
அடப்போப்பா, பதினைஞ்சு ரூபா இருந்தா நானே டாஸ்மார்க் போயிருக்க மாட்டேனா? உன்கிட்டே மாட்டி இருப்பேன்?
Kalakkal…unga ezhuththu mattum illa, ..en mandaikkullayeum thaan….
LikeLike
Very nice.vazhkaiyin yeadartham.ippo namma India nelamai…….
LikeLike