வழுக்கி விழுந்தவர்கள்

மோடி திருச்சி வந்ததால் பா.ஜ.க.விற்கு என்ன பலனோ தெரியாது. ஆனால் நமக்கு, சாதாரண மக்களுக்கு, ஒரு நல்ல பலன் கிடைத்துள்ளது.  சிலரது முகமூடிகள் கிழிந்துள்ளன. சிலர் கீழே விழுந்துள்ளார்கள். சிலரது உண்மை சுயரூபங்கள் தெரியத் துவங்கியுள்ளது. ஆனால் அதில் சில வருத்தங்கள் எனக்கு.

மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆர்ப்பரித்து எழுந்த ‘முற்போக்கு’ வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது முகங்களைக் காட்டத் துவங்கினர்.

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் என்றாலும், ஒரு மனிதரது வீழ்ச்சி என்னை ரொம்பவும் துக்கம் கொள்ள வைத்தது. அவர் எழுத்தாளர் ஞாநி அவர்கள். 2G விஷயத்தில் மிகச் சரியாக அலசி உண்மை பேசியவர் ஞாநி. 1988 லேயே கூடங்குளம் அணு உலைக்கு எதிராகக் கோஷம் எழுப்பியவர் ; அன்றிலிருந்து இன்றுவரை அந்நிலையில் இருந்து வழுவாது போராடிவருபவர் ; அந்த இயக்கம் கிறித்தவப் பாதிரியார்கள் வசம் போய் தேசத்ரோக நடவடிக்கை என்னும் அளவில் அவர்கள் செயல்படத் துவங்கியபோதும் தன் நேர்மையான அணுகுமுறையால் தனியாகத் தெரிந்தவர் ஞாநி. ( அணு உலை வேண்டும் என்பதே என் கருத்து. 13,000 கோடி ரூபாயை எள்ளும் தண்ணீருமாக ஆக்க நாம் என்ன அவ்வளவு பெரிய வல்லரசா ? )

அவரது பேச்சுக்களில் ஒரு அறம் இருக்கும். சென்றமுறை அவர் சிங்கை வந்திருந்தபோது சுமார் இரண்டரை மணி நேரம் அவருடன் பல விஷயங்கள் குறித்துப் பேசி இருக்கிறேன். மிகவும் வெளிப்படையான மனிதர். எளிதில் அணுகிவிடக் கூடியவர். எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்மானமான கருத்து உண்டு அவரிடம். அவற்றில் ஒரு நேர்மையும் ஒரு அவசரம் இல்லாமையும் இருந்தது கண்டிருக்கிறேன். அந்த சந்திப்பு பற்றி இங்கே பதிவிட்டிருக்கிறேன்.

ஆனால், நேற்று மோதி பேசத் துவங்கியதும் முகநூலில் (Facebook) பதிவுகள் போடத் துவங்கிவிட்டார். மோதி ஹிந்தியில் பேசுகிறார், ப.ஜ.க.ஹிந்தி திணிப்பு, பாசிசம் என்கிற ரீதியில் அள்ளித் தெளித்த கோலமாக இருந்தது அவரது பதிவுகள். ஒரு சமயம் பதிவிடுவது ஞாநியா அல்லது வீரமணியா என்று குழம்பும் அளவு இருந்தது நிலைமை.  அப்பதிவுகளில் சில :

ஞாநி சங்கரன்”Modi opens his mouth and Trichy and speaks in ….Hindi. so, if BJP under modi comes to power they will be shameless in imposing hindi. modi knows english. that is the link language promised for the south india by Nehru. but he chooses to speak in hindi. and poor h.raja keeps blinking listening to modi and wondering how to translate this hindi. by speaking in hindi, in one single stroke modi has dug the grave for his party in tamilnadu.i still hope that someone on the dais would tell him to switch over to english. all TN bjp leaders must be feeling like on a mass harakiri.and what they dont understad is speaking few tamil lines written down in hindi will not wash. every north indian leader does that as a ritual. but most of them speak in english if they know english but for BJP using few tamil lines is only tokenism and the real agenda is only hindi. bjp is known for using tokenism with minorities also but the real agenda is hindutva at any cost.”

ஞாநி சங்கரன் “I write in both languages depending on the issue. Since modi Ian all India nuisance, I write about him in English.”

பதிவுகளில் உள்ள அவசரம் என்ன? காழ்ப்புணர்ச்சி என்ன? யாரையோ மகிழ்விக்கச் செய்யும் ஒரு செயல் போல் பட்டது எனக்கு.

ஹிந்தியில் பேசிவிட்டால்தான் என்ன? தமிழ் மொழிமாற்று தான் நடந்ததே. அல்லது ஆங்கிலத்தில் பேசாததால் மோதியின் செய்தி எல்லா மக்களிடமும் போய்ச்சேராதே என்ற கவலையா ?

மோதியைக் கொள்கை ரீதியாக எதிர்ப்பது ஒரு தரம். ஆனால் நாலாந்தர திராவிடர் கழக பாணியில் விமர்சிப்பது அழகா?

மோதி என்ன பேசினார் என்பதைப்பற்றி ஒன்றுமே இல்லை. அவர் தேச ஒற்றுமை, ராணுவ வீரர் மறைவு, இளைஞர் எழுச்சி, வந்தே மாதரம் என்று தேசிய மொழி பேசினார். ஆனால் ஞாநி, வீரமணியின் ஆங்கில ஒலிபரப்பி போல் மிகக் குறுகிய வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கிக்கொண்டு மோடி தூஷனை, ஹிந்தி அரக்கி ஒழிக என்ற ரீதியில் எழுதியது  ,”அடடே, இவரா இப்படிப் பேசுகிறார்?” என்று நினைக்க வைத்தது. என்ன ஒரு வீழ்ச்சி !

வழுக்கி விழுந்தவர்கள் பட்டியலில் ஞாநி அவர்களைச் சேர்க்க மனம் வரவில்லை. ஆனால் உண்மை வேறாக உள்ளதே !

Author: Amaruvi's Aphorisms

Banker by day, blogger by night and a reader throughout.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: