மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால் சில நேரங்களில் மனிதனின் செயல்கலைப் பார்த்தால் அவன் வளர்கிறானா அல்லது வீழ்கிறானா என்று புரிவதில்லை.
அப்படி அமைந்தது தான் நாம் தற்போது பார்க்க இருப்பது.
சில நாட்கள் முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் ‘தி ஹிந்து’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார்- தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றி. அது இங்கே. அது பற்றி அவரது வலைத்தளத்திலும் இப்படி பதிவிட்டிருந்தார்.
அவர் எழுதியதன் சாராம்சம் இதுதான். பிள்ளைகள் தமிழ் படிக்க சிரமப் படுகிறார்கள். பள்ளிகளில் தமிழ் சரியாகப் போதிக்கப்படுவதில்லை. ஆங்கிலம் வாழ்வுக்குத் தேவையாக இருக்கிறது என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் ஒரு சுமையாக இல்லாமலும் அதே நேரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு எளிதாகவும் இருக்க தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதலாம். உதாரணம் : ‘அவன் போகிறான்’ என்பதை ‘AVAN POKIRAAN’ என்று எழுதலாம். கணினியும் இதற்குத் துணை செய்யும். இதுவே அவரது கருத்து.
நான் ஜெயமோகனை முழுமையாக ஆதரிக்கவில்லை. பல தேவை இல்லாத எழுத்துக்களை நீக்கலாம். உதாரணமாக ‘ஞே, பௌ, சௌ, ழோ’ முதலான எழுத்துக்களால் என்ன பயன்? தமிழை எளிமையாக்கலாம். அதிகம் பேர் படிப்பார்கள். அதற்காக ஆங்கில எழுத்துரு தேவை இல்லை என்பதே என கருத்து.
ஜப்பானிய மொழியில் ‘ஹிராகானா’, ‘கதகானா’ , ‘காஞ்சி’ என்று மூன்று எழுத்து வகைககளை வைத்துள்ளார்கள். ஹிராகானா எளிமையானது. ஒரு மாதத்திற்குள் படித்துவிடலாம். சிறுசிறு வாக்கியங்கள் எழுதவும் முடியும். ஜப்பானிய அடிப்படை மொழி வகை அது. கதாகானா ஜப்பானியம் அல்லாத மற்ற மொழிச் சொற்களை எழுதப் பயன்படுவது. உதாரணமாக ‘Computer’ என்பதை “コンピューター。” என்று “கொன்புயூதா” என்று வேற்றுமொழி ஓசையிலேயே அழைப்பது. அது தவிர காஞ்சி என்பது பாரம்பரியமான எழுத்து. ஆகக் கடினமானது. சுமார் மூவாயிரம் உள்ளது. அரசாங்கமே கடினத்தைக் குறைக்கும் விதமாக சுமார் இரண்டாயிரம் காஞ்சி எழுத்துக்களை அங்கீகரித்துள்ளது. ஜப்பானிய மொழியில் உள்ள கணினி மென்பொருளும் இந்த இரண்டாயிரம் எழுத்துக்களையே கொண்டுள்ளது. ( சுமார் ஒரு வருடம் படித்த எனக்கு நூற்றியைம்பது காஞ்சி தான் தெரியும்). ஆக மொழியை எளிமையாக்குவது அந்தந்த தலைமுறையின் வேலை என்பது என் கருத்து.
சரி ஜெயமோகனுக்கு வருவோம்.
இதற்கு முன்னரே பலர் இம்மாதிரிப் பேசியுள்ளனர். இரவீநதிரநாத தாகூர், பெரியார் ஈ.வெ.ரா. முதலியோர் வலியுறுத்திப் பேசியுள்ளனர். ஈ.வெ.ரா.வின் முயற்சியால் தமிழ் எழுத்துக்களில் மாற்றமும் வந்தது. அண்ணா பல்கலையின் முன்னாள் தலைவர் திரு.குழந்தைசாமியும் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அப்போதெல்லாம் யாரும் எதுவும் பேசவில்லை.
ஜெயமோகன் எழுதியதும் கிளம்பிற்று பெருங்கூச்சல். இதற்குத் தொடர்பு இருப்பவரும் இல்லாதவரும் வசை மொழியத் தொடங்கினர். வேடிக்கையாக ஈ.வெ.ரா. தொடர்புடைய கட்சியினரும் இதில் அடங்குவர்.
இதில் அரசியல் சார்பு மக்கள் பேசியதை புறந்தள்ளினாலும் என்னை மிகவும் பாதித்தது எழுத்தாளர் திரு.ஞாநி அவர்களின் எதிர் வினைகளே.
அவரது ‘தி ஹிந்து’வில் வந்துள்ள கருத்து பின்வருமாறு :
“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்க வேண்டும்? இனி, அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ‘எங்களால் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியாது. எனவே, பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள், அதைச் சுகமான அனுபவமாகக் கருதி ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்’ என்று சொன்னால், அது தீர்வா? அது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட சமூக விரோதச் சிந்தனை!”
எதையும் எதையும் தொடர்புபடுத்துவது ? தமிழ் எழுத்துருவை மாற்றலாம் என்று சொல்வது பாலியலை நியாயப் படுத்துவது போன்றதா?
இதில் விஷயம் என்னவென்றால் ஜெயமோகனை எதிர்ப்பது என்பது தினக்கடமை. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருக்குமா? அதுதான் பாய்ந்து பிறாண்டிவிட்டார் ஞாநி.
ஆக கருத்துச் சுதந்திரம் பற்றி ஞாநி வெளியிட்டதெல்லாம் வெற்று வார்த்தை ஜாலங்கள் என்று கொள்ள வேண்டும் போல் தெரிகிறது.
எனவே ஞாநியின் நியாய உணர்விற்கு ஒரு சோதனை வைப்போம்.
ஈ.வே.ரா. தமிழ் பற்றிக் கூறியுள்ளவை சில இங்கே :
அப்படியென்றால் ஈ.வெ.ரா. சொன்னதும் இதே ரகம் தானா? அவரை எதிர்த்தும் ஞாநி எழுதுவாரா? அது என்ன மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் ?
ஆனால் ஞாநியின் இந்த ‘தரச் சரிவு’ வருத்தம் அளிக்கிறது.
You are right… Hope you read Charu’s comment also 🙂
LikeLike