ஆதி சங்கரர் தனது மிகக் குறுகிய ஆயுளில் பாரதம் முழுதும் பயணித்து நான்கு மடங்களை நிறுவினார் ( ஐந்து என்று கூறுவாரும் உளர். ஐந்தாவது மடம் காஞ்சி என்றும் கூறுகின்றனர்). பூரி, சிருங்கேரி, துவாரகா, பத்ரி என்ற இடங்களில் ( பாரதத்தின் நான்கு திசைகளில் ) நிறுவி அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார்.
இதன் மூலம் ஒரு பலன் ஏற்பட்டது. பாரதம் முழுதும் பரவிக்கிடந்த பல தெய்வ வழி பாடும், மிருக பலியும் அழியத் துவங்கின. எந்தக் காரணங்களைக் கொண்டு பௌத்தமும் ஜைனமும் வளர்ந்ததோ அவை அழிந்தன.சிறு தெய்வ வழிபாடே மிருக பலிக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை உணர்ந்து வேதத்தின் உட்பொருளை விளக்கி ‘சனாதன தர்மம்’ என்று ‘அறு மதங்களை’ ஸ்தாபனம் செய்தார். அதனால் ‘ஷன்-மத-ஸ்தாபனாசாரியா’ என்று அழைக்கப்பட்டார். இவரது பணியால் மட்டுமே ‘சனாதன தர்மம்’ காலத்தின் முக்கியப் பகுதியில் அழியாமல் இருந்தது, இவரது பின்னவரான இராமானுசர் இவரது ஒரு பிரிவை ( விஷ்ணு வழிபாட்டை ) மேல் எடுத்துச் சென்று அதே சமயம் ‘விஸிஷ்டாத்வைதம்’ என்னும் அனனவரையும் ஒன்றிணைக்கும் வழிமுறையைத் தோற்றுவித்தார். ஆதி சங்கரர் இல்லையென்றால் இராமானுசரே இல்லை என்று கொள்ளும் அளவிற்கு அவரது பணி இருந்தது.
ஆனால் பின்னாளில் முகலாய பற்றும் இஸ்லாமிய அரசுகளின் ஆதிக்கம், பின்னர் வந்த ஆங்கில ஆதிக்கம் முதலியனவற்றால் சனாதன தர்மம் பின்னிடைவு அடைந்தது என்பது உண்மையே. மெக்காலே என்னும் ஆங்கில அதிகாரி பிப்ரவரி 2, 1835 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.
மிக நீண்ட அறிக்கையில் மிக முக்கியமானவை இவை இரண்டு :
“We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. ”
“I would at once stop the printing of Arabic and Sanscrit books. I would abolish the Mudrassa and the Sanscrit College at Calcutta. Benares is the great seat of Brahminical learning; Delhi of Arabic learning. If we retain the Sanscrit College at Bonares and the Mahometan College at Delhi we do enough and much more than enough in my opinion, for the Eastern languages ”
சாராம்சம் இது தான். பாரத நாட்டு மக்களை அடிமைப் படுத்த அவர்களைத் தங்களது கலாச்சாரம் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கு அவர்களது இரு மொழிகளான சம்ஸ்க்ருதம் மற்றும் அராபிய மொழிகளையும் அவற்றின் மூலம் அவர்களைச் சென்றடையும் கல்வியையும் கெடுக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் ஆங்கிலக் கல்வி மூலம் ‘நிறத்தால் இந்தியர்களாகவும் இரத்தத்தால் ஆங்கிலேயர்களாகவும்’ உள்ள ஒரு சமூகத்தை ஏற்படுத்த முடியும். பாரத நாட்டவரின் பண்பாட்டைப் பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுத்தப்பட்டால் பின்னர் சாம்ராஜ்யம் சரிவது வெகு சுலபம். இதுவே அவரது கணக்கு. இதற்குப் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இந்த நிகழ்விற்குப் பின்பு ஆங்கில வழிக் கல்வி துவங்கியது. இந்தியப் பாராம்பரியம், கல்வி, மருத்துவம், கலை, வான நூல் ஆராய்ச்சி முதலியன பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால் ஆங்கிலேய ஆட்சி நன்மை அடையும் என்பது மட்டும் காரணமல்ல. இதன் மூலம் பாரதத்தில் கிறித்துவம் பரவும் என்பதும் தான்.
ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி ‘மதச் சார்பற்றதாக’ இருந்ததாகத் தானே நாம் படித்துள்ளோம் ? அவர்களிடமிருந்து தான் நாம் “Secularism” என்கிற பதத்தையே கற்றுக்கொண்டோம் ? என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆங்கில ஆட்சி கிறித்தவம் பரப்ப ஆவன செய்தது என்பதே உண்மை. ஆனால் மதம் பரப்புவது மட்டுமே அவர்களது கொள்கையா என்றால் அது இல்லை.
மதம் பரப்ப அரசு உதவும். மதம் பரவுவதன் மூலம் அரசு செலுத்துவது சுலபமாகி விடும். “நான் உனக்கு உதவுகிறேன், நீ எனக்கு உதவ வேண்டும்” என்கிற கொள்கைப்படி நடந்துகொண்டன ஆங்கில அரசும் மதம் பரப்பும் நிறுவனங்களும்.
இது என்ன அபாண்டமான பழியாக இருக்கிறதே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆதாரங்கள் பல உள்ளன. சில முக்கியமானவற்றைப் பார்ப்போம்.
சர்.சார்லஸ் ட்ரேவெல்யன் ( Sir Charles Trevelyan ) ஆக மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில அதிகாரி. மிகச் சிறிய வயதிலேயே ஆங்கில அரசால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். சென்னை மாகாணத்தின் ஆட்சியாளர் (Governor General ) ஆனார். அதற்கு முன்னர் பல ஆங்கில அதிகாரிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வியின் தேவை பற்றிக் குறிப்பிட்டார். அவர் ஆங்கில பாராளுமன்றத்திற்குப் பல குறிப்புகளும் அறிக்கைகளும் அனுப்பினார். அவற்றில் ஒன்று “The Political Tendency of the different Systems of Education in use in India” ( இந்திய கல்வி முறைகளின் அரசியல் பார்வைகள்). அற்புதமான ஒரு கண்ணோட்டம் அது. ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இவ்வளவு காலம் ஆண்ட பின்னர் இந்த மக்களுக்கு நாம் ஆங்கிலக்கல்வி அளிக்கவில்லை என்றால் து நமது ஆங்கில ஆட்சிக்கு நாம் செய்யும் துரோகம் என்று கூறுகிறார். ஆனால் அவரே ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார். இதே ஆங்கிலக் கல்வியை வைத்து இந்தியர்கள் நம்மைத் துரத்திவிடுவார்கள் என்றும் கூறுகிறார். அதையும் அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்.
இக்கருத்துக்களை அவர் தெரிவித்த காலம் 1838. அவர் வயது 31.
என்னைப்பொறுத்தவரை ஆங்கில ஆட்சியாளர்களில் ஆக அதிக மதி நுட்பமும் முன்னுரைப்புத் திறனும் கொண்டவர் இவர் என்பது என் கருத்து.
இதுவரை சரி. மதம் பற்றி ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம்.
இதே ஆங்கிலேயர் 31-அக்டோபர் 1881 ( தனது 74 வயதில் ) இங்கிலாந்தில் ஒரு உரை ஆற்றுகிறார். அதில் பௌத்தம், இந்துமதம், கிறித்தவம் முதலியவற்றைப் பற்றிப் பேசுகிறார். அதில் அவரே கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது. இவரா இப்படிப் பேசுகிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது.
“.. as the Christian religion is the only one capable of correcting the disorders caused by the passions of mankind, and of leading the world to a state of perfection… My own opinion is that the conversion of India into Christianity will take palce in a different way from that generally anticipated..I hope, many of us in this hall will see that the Christian locomotive is placed on Indian rail..”
ஒரு அரசு அதிகாரி, மதச்சார்பில்லாமல் நடந்து கொள்வதற்கு நமக்கெல்லாம் உதாரணமாகத் திகழ்ந்த ஆங்கில அரசு அதிகாரிகள் என்று நமது வரலாற்றுப் புத்தகங்கள் கூறியவர், தனது இறுதிக் காலத்தில் இந்தியாவை கிறித்தவ நாடாக ஆக்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இவர் பதவியில் இருந்த போது என்னவெல்லாம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. விவரம் கிடைத்தவுடன் எழுதுகிறேன்.
இவர் மட்டுமா ? சர்.ரிச்சர்ட் டெம்பிள் (Sir Richard Temple ) என்றொரு அதிகாரி. இவர் ஏப்ரல் 1883 ல் லண்டனில் ஒரு பாப்டிஸ்ட் மிஷனரி சொசைடி (Baptist Missionary Society) என்னும் மத பிரச்சார நிறுவனத்தில் பேசுகிறார் :
“If the tribals are attached rapidly to Christianity,they will form a nucleus around which British power and influence may gather… as patriotic people you may be confident that the missions in India are doing a work which strengethens the imperial foundations of British power..”
இவற்றின் சாராம்சம் இது தான். நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போன ஆங்கில அதிகாரிகள் கூட தங்களின் இந்தியப் பணியின் போது எவ்வாறு கிழக்கத்திய கலாச்சாரத்துக்கும் கல்விக்கும் ஊறு செய்து நமது பெருமையை நாமே அறியாமல் செய்ய அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதும், அது வெளியே தெரியாமல் எப்படி ‘மதச்சார்பின்மை’ பூச்சு கொண்டு பூசி மெழுகினார்கள் என்பதே.
ஆனால் இவை எதுவுமே நமக்குத் தெரிவதில்லையே ஏன் ? இன்னமும் ஆங்கில அரசுகள் மதச்சார்பில்லாமல் நடந்துகொண்டார்கள் என்றும் அவர்களைப்போல் நாமும் அவ்வாறே செய்யவேண்டும் என்றும் கூறும் “முற்போக்காளர்” மற்றும் அவரது “கல்விமுறை” பற்றி என்ன சொல்வது ?
சரி. ஆங்கில அரசாளர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப அரசு இயந்திரம் பயன்படுத்தினார்கள், மதப் பரப்பு இயந்திரமும் அரசு இயந்திரமும் ஒன்றோடொன்று ஒத்து செயல்பட்டன என்றும் கண்டோம்.
இதற்கும் காஞ்சி மட வழக்கிற்கும் தொடர்பென்ன ? தொடர்ந்து காண்போம்.