பேரூர் மடத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளியிலிருந்து உள்ளே நோக்குபவன் என்னும் அளவில் ஆதீனங்கள் என்ன செய்து வருகின்றன என்று சில நண்பர்களுடன் ஆராய்ந்தேன். அதில் பேரூர் மடம் தொடர்பான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
அத்துடன் பேரூர் மடம் புராதன ஆதீன மடம் இல்லை என்றும் சொல்லக் கேட்டேன். மதுரை, தருமபுரம், திருவாவடுதுறை முதலிய ஆதீனங்கள் வரிசையில் பேரூர் இல்லை என்றும், இது கர்னாடக வீர சைவ மரபாளர்களுடன் தொடர்புடையது என்றும் நண்பர்கள் தெரிவித்தார்கள். இவர்கள் தெரிவித்தது பெரும் கவலை அளிப்பதாக இருந்தது. சைவ மடம் என்று சொல்லிக் கொண்டு ஆகம விதிகளுக்குப் புறம்பாகப் பல கோவில்களை அவர்கள் சீரமப்பதாகத் தெரிகிறது. சீரமைக்கிறோம் என்கிற பெயரில் ‘சைவ ஆகமம்’ என்ற பெயரில் ஒரு புது வழியைப் பின்பற்றுகிறார்கள் என்றும் தெரிந்தது.
பல கேள்விகள் எழுந்தன :
- பேரூர் மடத்தாருடன் கோவை நகர தி.க.வினரும் சேர்ந்துகொண்டு செயல்படுகிறார்கள்.
- கோவில்களை அழிப்பதே தி.க.வின் எண்ணமாக இருக்கும் போது, பேரூர் மடத்துடன் இவர்களது தொடர்பென்ன ?
- தி.க. ஆன்மீகத்திற்கு எப்போது வந்தது ? கோவில்கள் மேல் அதுவும் சைவ ஆகமக் கோவில்கள் மேல் அவர்களது கரிசனம் பொங்கி வழியும் காரணம் என்ன ?
- பெரியார்திடீரென்று யாருடைய கனவிலாவது வந்தாரா ?
- பேரூர் மடத்திற்கும் தி.க.விற்கும் தொடர்பென்ன ?
எல்லாம் போக, மோதி அரசின் காவிக் கொள்கை பற்றி ஆதீனத்தின் கல்லூரியில் இவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள். கல்லூரியில் அரசியல் பேசுவது ஏன் ?
இதில் மொழிப்போர் பற்றியும் பேசுகிறார்கள். பேசாதது ஆன்மிகம் மட்டுமே.
தி.க. கை வைப்பது எதுவும் இந்திய எதிர்ப்பாகத்தனே இருந்திருக்கிறது இதுவரை ?
பேரூர் மடம் தி.க.வின் ஒரு தோற்றமா ?
கால்டுவெல் முதல் ஜி.யு.போப் வரை சைவ சித்தாந்தத்தைக் கிறித்தவத்துடன் இணைத்து பசு, பதி, பாசத்தை ‘ஆடு’, ‘மேய்ப்பர்’, ‘பற்று’ என்றும், ‘மகன்’, ‘தந்தை’, ‘புனித ஆவி’ என்றும் மாற்றிப் மாற்றிப் பேசி வந்தனர். திருவள்ளுவர் புனித தோமையாரினால் கிறித்தவராக மத மாற்றம் செய்யப்பட்டார் என்று கதை புனைந்தனர்.
இதனை அனுசரித்துத் தேவநேயப் பாவாணர், பாதிரியார் தேவநாயகம் முதலானோர் அதே பல்லவியைப் பாடினர். இதற்குத் தி.மு.க. அரசு உதவி செய்தது. குறிப்பாக ‘திருவள்ளுவர் கிறித்தவரா?’ என்று ஒரு நூலை எழுதினார் தேவநாயகம். இதற்கு மு.கருணாநிதி முன்னுரை எழுதியுள்ளார்.
இந்த சைவத்தைக் கிறித்தவத்துடன் இணைத்தல் என்கிற பழிக்கு திராவிட இயக்கங்கள் என்கிற போர்வையில் வரும் அமைப்புகள் ஆதரவு பெருமளவு அளித்துள்ளன. முக்கியமாக்த் தமிழ்க் கத்தோலிக்கப் பாதிரியார்கள் தி.மு.க. அனுதாபிகளாகவும், இந்திய எதிர்ப்பாளர்களாகவும் இருப்பது நம் கண்கூடு.
சைவத்தை வேத மதத்திலிருந்து பிரிக்க வேண்டும்; சைவத்தைக் கிறித்தவ தாக்கம் உள்ளதாகக் காட்ட வேண்டும்; தமிழர் மதம் என்று ஒன்று தனியாக இருப்பதாகக் காட்ட வேண்டும்; அப்போதுதான் தமிழுக்கும் ஒன்றுபட்ட இந்தியாவிற்கும் இடையே ஒரு வேறுபாட்டை உருவாக்க முடியும்; அப்படிச் செய்தால் இலங்கையின் தமிழ் மாகாணங்களை இணைத்துத் தமிழகத்துடன் சேர்த்துத் தமிழ் நாடு என்று ஒரு தனி நாடு கோரலாம்; அதற்குக் கிறித்தவ மத போதகர்களின் வழி காட்டுதல்கள் ஏற்பாடு செய்ய முடியும்; அன்னிய முதலீடும் இதற்குக் கிடைக்கும். இந்தப் பன்முனைத் தாக்குதல் கடந்த சில ஆண்டுகளாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு நிகழ்வில் பாதிரியார்கள் முன் நின்று செயல்பட்டது கவனிக்கப்பட வேண்டியது.
இதன் தொடர்ச்சியே பேரூர் மடம் – தி.க. தொடர்பு என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்னும் அதிர்ச்சி அளிக்கும் செய்திகளும் கிடைக்கின்றன. பல பழைய கோவில்களை சீரமைக்கிறோம் என்று சொல்லி, பழைய சிலைகளுக்குப் பதிலாகப் புதிய சிலைகள் வைக்கப்படுகின்றன என்றும், பழைய சிலைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்றும் இணையத்தில் பேசப்படுகிறது.
இது குறித்த நண்பர்கள் அளிக்கும் சுட்டிகள் கவலை அளிப்பதாக உள்ளன. நெருப்பில்லாமல் புகையாது.
மேற்சொன்ன என் கருத்துக்கள் / அனுமானங்கள் தவறு என்றால் அதற்கான ஆவணங்களைத் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
(திராவிட-கிறித்தவ மதமாற்ற சக்திகளின் கூட்டணி பற்றி மேலும் அறிந்துகொள்ள ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள ‘உடையும் இந்தியா’ ஆவண நூலைப் பார்க்கலாம்.)
நீங்கள் எழுதியது அனைத்தும் உண்மை.. இந்த போலி ஆதீனகர்த்தர்களால் ஏற்பட்ட இழப்புகளால் கொங்கதேச மக்கள் கொதிப்பில் உள்ளனர்..
LikeLike
இது அனைத்தும் உண்மைபோல் உள்ளது. ஒரு கோவிலில் ஈவேரா படம் போரிக்கபட்டதாக கேள்விப்பட்டேன்
LikeLike
இது முழுக்க முழுக்க உண்மைங்க,,, பேரூர் ஆதீனத்தின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது, காலம் காலமாக பிராமணர்களை வைத்து கும்பாபிஷிகத்தை செய்து வந்ததை கோயில் குடமுழுக்கு என்று [புது கலாச்சாரத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். பேரூர் ஆதீனம் என்பது ஒக்கிலியர்களின் மடம். அதற்க்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளது.,அங்கு பூஜை செய்த லிங்காயத்து பெண்மணியை கொன்றுவிட்டு, நாங்கள் மெய்கண்டார் குருபரம்பரை என்று சொல்லி மடத்தை ஆக்கிரமித்து கொண்டார்கள். இவர்கள் சிவனை மட்டுமே வழிபடுரவங்க. ஆனா, அம்மன் கோயில் கும்பாபிசேகம் முதல் பெருமாள் கோயில் வரை செய்யுறாங்க, குறிப்பாக கொங்கதேசத்தில் உள்ள கோயில்களில் இவர்கள் செய்து வைத்த குடமுழுக்குக்கு பின்னர் பல பிரச்சனைகள். அதனால் பலர் இப்போது உண்மை நிலையை புரிந்து கொண்டு பழையபடி பிரமணர்களை வைத்து செய்ய ஆரம்பிச்சுட்டாங்க…வீர சைவ அடையாளமாக கழுத்தில் லிங்கம் கட்டி கொள்வார்கள். இவர்களின் புறகணிக்கவில்லை என்றால் நம்மை கிறிஸ்துவ பாதிரி ஆக்கி விடுவார்கள்.
LikeLike