The side that is not spoken about, generally.

இன்று சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றக் கூட்டத்தில் ‘கம்பன் சொல்லும் செய்தி’ என்னும் தலைப்பில் பின்வரும் கருத்துக்களைப் பற்றிப் பேசினேன் :

  1. ‘கம்பன்’ பெயர்க் காரணங்கள்.
  2. கம்பர் மேடு – என்ன ஆயிற்று.
  3. கம்பன் இராம காதை எழுத வேண்டிய தேவை என்ன ?
  4. கம்பன் திருவள்ளுவரை அடியொற்றி எழுதிய பாங்கு.
  5. திருக்குறளிலும் கம்பனிலும் உள்ள கருத்தொற்றுமைகள்.

பின்னர் நண்பர் கண்ணன் சேஷாத்ரி தன் தொடர் கம்ப ராமாயண விரியுரையைத் தொடர்ந்தார். கங்கையின் பல பெயர்களை அறிந்துகொள்ள முடிந்தது. குலசேகர ஆழ்வார் இராமனுக்குப் பாடிய தாலாட்டுப் பாடலையும், கம்பன் திருமங்கை ஆழ்வாரிடமிருந்து எடுத்துக் கையாண்ட ‘வண்ணம்’ என்னும் சொல்லையும் பற்றி திரு.கண்ணன் பேசியது அருமை.

முனைவர் மன்னை.இராசகோபால் இரு உரைகளையும் பற்றிப் பேசினார். முன்னதாக தலைவர் என்.ஆர்.கோவிந்தன் துவங்கி வைத்துப் பேசினார்.

இந்த வாய்ப்பை அளித்த மாதவி இலக்கிய மன்றத்திற்கும் நண்பர் கண்ணனுக்கும், வந்திருந்து ஊக்குவித்த நண்பர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றிகள் கோடி.

2 responses

  1. திண்டுக்கல் தனபாலன் Avatar

    வாழ்த்துகள் ஐயா…

    Like

  2. yarlpavanan Avatar

    வாழ்த்துகள்
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    Like

Leave a reply to yarlpavanan Cancel reply